உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான பதவி உயர்வு விவகாரத்தில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான பதவி உயர்வு விவகாரத்தில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. உயர்நிலை பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, பட்டதாரிஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிடக் கோரி, நெல்லை மாவட்டம், மூவிருந்தாளியைச் சேர்ந்த ஆசிரியர் ஜேசுதாஸ் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதுபோல் மேலும் சிலர் மனுக்கள் செய்தனர்.தனி நீதிபதி,  மனுக்களை தகுதி அடிப்படையில், தனித்தனியே பரிசீலித்து, பள்ளிக்கல்வி துறை செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, பைசல் செய்தார். இதை எதிர்த்து, ஜேசுதாஸ் பாண்டியன்,  உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் நிரப்பக் கூடாது. விதிகள்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள், எம்.துரைசாமி, அனிதா சுமந்த் அமர்வு,  இவ்விவகாரத்தில், தற்போது எந்த நிலை உள்ளதோ, அதே நிலை ஜூலை, 18 வரை தொடர வேண்டும் என்றனர்.

Comments