வர்த்தக ரீதியாக நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பயிற்சி வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தக் கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை

வர்த்தக ரீதியாக நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பயிற்சி வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- * தனியார் பள்ளிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தக ரீதியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை பள்ளி வளாகத்தில் பள்ளி நேரத்தில் நடத்தக்கூடாது. * அந்த சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை கண்டிப்பாக சேர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் நிர்பந்திக்கக்கூடாது. * தனியார் பள்ளிகளுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, சிறப்பு பயிற்சி வகுப்பு என்ற பெயரில் பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க கூடாது. தடை * கல்வி கட்டணத்தை தவிர, சிறப்பு பயிற்சி வகுப்பு என்று எந்த கட்டணத்தையும் வசூலிக்க கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. * சம்பந்தப்பட்ட தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ள பாடத்திட்டங்களை மட்டுமே மேல்நிலைபள்ளி வகுப்புகளுக்கு நடத்த வேண்டும். * மேற்சொன்ன நிபந்தனைகளை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்படின் அந்த பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். கடும் நடவடிக்கை * இந்த சுற்றறிக்கையை முதன்மை கல்வி அதிகாரிகள், தனியார் பள்ளிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். எதுவும் தவறுகள் நடைபெறுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments