என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வீடியோ வெளியீடு

விருப்ப பட்டியலை தயார் செய்வது எப்படி? என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வீடியோ வெளியீடு என்ஜினீயரிங் ஆன் லைன் கலந்தாய்வு முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரை நடைபெற்று முடிந்து இருக்கிறது. அடுத்ததாக விருப்ப பட்டியலை தயார் செய்வது எப்படி? தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்வது எப்படி? என்பது குறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ‘சாய்ஸ் லிஸ்ட் பிரிபரேஷன்’ என்ற பெயரில் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் சில மாணவிகள் விருப்ப பட்டியலை தயார் செய்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். அதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்திரியராஜ், முன்னாள் செயலாளர் வி.சங்கரநாராயணன், சென்னை ஐ.ஐ.டி. கம்ப்யூட்டர் மையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஜெயபிரகாஷ் ஆகியோர் பதிலளித்துள்ளனர். இதனை www.tnea.ac.in என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம்.

Comments