TNPSC சில தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அடிக்கடி எழுத்து தேர்வு நடத்தி அரசு மற்றும் நீதித்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுத்து அந்த துறைகளுக்கு வழங்குகிறது. அவ்வாறு தேர்வுகள் நடத்தப்பட்டாலும் ஆணையம் நினைத்தபடி முடிவை வெளியிட முடிவதில்லை. எனவே ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பிக்கும் தேர்வுகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். நிறைய பேர் விண்ணப்பிக்கும் தேர்வுகளுக்கு அவ்வாறு நடத்தப்படாது. இருந்தாலும் டெண்டர் ஆகஸ்டு மாதம் தான் விடப்படுகிறது. அதன் பிறகுதான் முடிவு தெரியும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Comments