எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (01.08.2018) வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. எனவே தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தங்களது தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து ( www.dge.tn.nic.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மேற்கண்ட ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (3-ந் தேதி) ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||