பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி வெளியீடு: ஆன்லைனில் மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி வெளியீடு: ஆன்லைனில் மதிப்பெண் பட்டியல் பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவு 13-ம் தேதி வெளியாகிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவுகளை 13-ம் தேதி பிற்பகல் முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.nic.in) இருந்து மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Comments