1,199 பணியிடங்கள் கொண்ட குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

1,199 பணியிடங்கள் கொண்ட நேர்முக தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குரூப்-2 தேர்வு நேர்முக தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். துணை பதிவாளர் கிரேடு-2 காலிப்பணியிடங்கள் 73, தமிழ்நாடு கூட்டுறவு கழகங்களில் மூத்த ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் 599, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் 118, தொழிலாளர் கூட்டுறவு அதிகாரி காலிப்பணியிடங்கள் 30, உதவி தொழிலாளர் ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் 28 உள்பட 1,199 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். கடைசி நாள் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். தேர்வுக்கு பணம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர் 11-ந் தேதி ஆகும். முதல்நிலை எழுத்து தேர்வு நவம்பர் 11-ந் தேதி நடைபெறும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். இறுதியாக தேர்ச்சி அடைபவர்கள் பணி அமர்த்தப்படுவார் கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.| NOTIFICATION DOWNLOAD

Comments