உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி பழங்குடியினர் நலத் துறை அறிவிப்பு

சேலம், வேலூர், காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பழங்குடியினர் நலத் துறை நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மத்திய அரசின் நிதி ஒதுக் கீட்டில், பழங்குடியினர் நலத் துறையின் கீழ், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி கல்விச் சங்கத்தின் மூலம் சேலம், விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஏகலைவா உண்டு உறைவிடப் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் சிபிஎஸ்இ-ன் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து பணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இயக்குநர், பழங்குடியினர் நல இயக்குநரகம், சேப்பாக்கம், சென்னை 5 என்ற முகவரியில் இருந்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து,விண்ணப்பத்துடன் தகுதிச் சான்று 2 பிரதிகள், விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கவேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments