மனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மனிதநேய மையமும், பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து அரசு உதவி குற்றவியல் வக்கீல் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்கும் மனிதநேய மையம் பல்வேறு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிவில் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற 100 பேர் சிவில், மாவட்ட நீதிபதிகளாக பதவிகளில் இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) கடந்த 3-ந்தேதி 46 அரசு உதவி குற்றவியல் வக்கீல் (அசிஸ்டெண்ட் பப்ளிக் பிராசிக்கியூட்டர் கிரேடு-2) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இலவச பயிற்சி இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கமும் இணைந்து இலவச பயிற்சி நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வருகிற 22-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி(புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எண்.28, முதல் பிரதானசாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ, 044-24358373, 24330952, 8428431107 என்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண் மூலமாகவோ அல்லது admission.mntfreeias@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்து இருக்க வேண்டும். மேற்கண்ட இந்த தகவலை பயிற்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||