சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 2018-19-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசு தரப்பில் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிக்க 10 ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த ஆசிரியர்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். பள்ளி வேலை நாட்களிலும் அதிக சிரத்தையுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வழங்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் சிறப்பு பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும், இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த மனு குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||