Follow by Email

Sunday, 31 March 2019

CLASS 10, 11, 12, TNPSC, TRB, TET, NEET STUDY MATERIALS


#CLASS
SUBJECT
DOWNLOAD
#TNPSC   TNPSC RAILWAY HISTORY INDIAN NATIONAL MOVEMENT TAMIL MEDIUMDOWNLOAD   
#TNUSRB   TNUSRB SUB INSPECTOR EXAM SYLLABUS IN TAMILDOWNLOAD   
#TNPSC       TNPSC GK 2019 NITHRA EDU SOLUTIONSDOWNLOAD   
#TRB - TET           TRB - TET - B.Ed. II YEAR PEACE EDUCATION ENGLISH MEDIUM BHARATHIDASAN UNIVERSITY TIRUCHIRAPPALLI – 620 024DOWNLOAD        
#TRB - TET      TRB - TET - B.Ed. II YEAR HEALTH AND PHYSICAL EDUCATION ENGLISH MEDIUM BHARATHIDASAN UNIVERSITY TIRUCHIRAPPALLI – 620 024DOWNLOAD   
#TRB - TET      TRB - TET - B.Ed. II YEAR KNOWLEDGE AND CURRICULUM ENGLISH MEDIUM BHARATHIDASAN UNIVERSITY TIRUCHIRAPPALLIDOWNLOAD   
#TRB - TET      TRB - TET - B.Ed. II YEAR CRITICAL UNDERSTANDING OF ICT ENGLISH MEDIUM BHARATHIDASAN UNIVERSITY TIRUCHIRAPPALLIDOWNLOAD   
#TRB - TET      TRB - TET - B.Ed. I YEAR LEARNING AND TEACHING ENGLISH MEDIUM BHARATHIDASAN UNIVERSITY TIRUCHIRAPPALLIDOWNLOAD   

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருந்தாளுனர் பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணிகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், இந்த பணிக்கு மருந்தக படிப்பில் டிப்ளமோ(டி.பார்ம்) படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மருந்தக படிப்பில் பட்டம் (பி.பார்ம்) பெற்ற நவீன்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்போரின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது எனக்கூறி அரசு மருந்தாளுனர் பணியிடங்களுக்கு பி.பார்ம் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு வசதியாக இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் வசதியை ஏப்ரல் 4-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 30 March 2019

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் மனநிறைவுடன் மேற்கொள்ள வேண்டும்  தேர்வுத் துறை இயக்குநர் வலியுறுத்தல் 

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் அனைவரும் மன நிறைவுடன் மேற்கொள்ள வேண் டும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர் கள், கல்வித்துறை பணியாளர் களுக்கு வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பொதுமக்களின் நம்பிக்கை தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரி கள் மீது பொதுமக்கள் கொண் டுள்ள நம்பிக்கையைக் காப்பாற் றுவது நம் அனைவரின் முக்கிய கடமையாகும். எனவே, எல்லோரும் அவரவர் பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதி அதன் முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு சரியானத் தேர்வு முடிவுகளை வழங்க வேண்டியது அவசியம். எதிர்கால தலைமுறை வேறு எந்தத் துறையிலும் இல்லாத, சிறந்த எதிர்காலத் தலைமுறையை வளர்த்தெடுக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அந்தப் பெருமிதத்துடன் இணைந்து எல்லோரும் பணியாற்றுவோம். இந்த பணியில் ஏற்படும் சிறுசிறு இடர்பாடுகளை, ஆண்டு முழுவதும் நாம் பாடம் நடத்திய, நம் மாணவர்களுக்காக பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் முழு மனநிறைவுடன் அனைவரும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அரசு தேர்வுத் துறை இயக்குநர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வு எளிது  மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதற்கிடையே கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது. நிறைவுநாளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,731 மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் எழுதினர். சமூக அறிவியல் வினாத்தாள் மிக எளிதாக இருந்ததாகவும், சராசரி மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெற முடியும் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. அறிவியல் மற்றும் கணிதத் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியாக காணப் பட்டனர். ஏப்ரல் 29-ல் தேர்வு முடிவு தேர்வு மையத்தில் இருந்து வெளியேறியதும் மாண வர்கள் தங்களுக்குள் வாழ்த்து களை பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கும். அதன்பின் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான  தரவரிசை நாளை வெளியீடு 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் (பல் மருத்துவம்) பட்டமேற்படிப்பு களுக்கு www.tnhealth.org, www.tnmgrmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது கடந்த 13-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்ற சுமார் 20 ஆயிரம் டாக்டர்கள் ஆன் லைனில் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்களின் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லை னில் விண்ணப்பிப்பது, ஆன்லனில் கலந்தாய்வு மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்புகளுக்கு 1,758 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கீடு செய்யப் படும். மீதமுள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கான 235 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC DEO RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் உத்தேச காலம் தொடர்பாக அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3) பதவியில் 55 காலியிடங்களையும் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களையும் நிரப்புவதற்காக பிப்ரவரி 16 மற்றும் 17-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுகள், அரசு ஐடிஐ முதல்வர், தொழில் பயிற்சி உதவி இயக்குநர், தொழில் துறை உதவி பொறியாளர் பதவிகளில் 41காலியிடங்களை நிரப்ப மார்ச் 2-ல் நடைபெற்ற தேர்வு, மாவட்ட கல்வி அதிகாரி பதவியில் 20 காலியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 2-ல் நடத் தப்பட்ட தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது. உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் மார்ச் 3-ல் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவும், அதேபோல், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தில் வரைவாளர் (கிரேடு-3) பதவிக்கு பிப்ரவரி 3-ல் நடத்தப்பட்ட தேர்வின் முடிவும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு தேர்வுகளின் முடிவுகளும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம் 

ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு தமிழ்நாடு மத்திய பல்கலை.யில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி., பிஎட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம்  தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் திருவாரூர் அருகே நீலக் குடியில் அமைந்துள்ளது. இங்கு, பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடி யாக சேரும் வகையில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த எம்எஸ்சி (வேதியியல், கணிதம், வாழ்வியல், இயற்பியல்) மற்றும் எம்ஏ (பொரு ளாதாரம்) படிப்புகளும், கணிதத் தில் 5 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட் படிப்பு உட்பட பல்வேறு படிப்பு களும் வழங்கப்படுகின்றன. ஒருங்கி ணைந்த முதுகலை படிப்பில் தலா 30 பேரும், பிஎஸ்சி.பிஎட் படிப்பில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். 4 ஆண்டுகளில்... இங்கு வழங்கப்படும் படிப்பு களில் பிஎஸ்சி,.பிஎட். படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரணமாக பிஎஸ்சி கணிதம் முடித்துவிட்டு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப் பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர் களுக்கு இப்படிப்பு ஒரு வரப் பிரசாதமாக அமையும். 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்த வர்கள் இந்த படிப்பில் சேரலாம். ஒருங்கிணைந்த படிப்புகள் உட் பட இப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து படிப்பு களுக்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மே 25, 26-ம் தேதிகளில் அந்த வகையில், தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டு மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 21-ம் தேதி அன்று வெளியிடப்படும். ஒருங்கிணைந்த எம்எஸ்சி மற்றும் எம்ஏ படிப்புகள், ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பு உள்ளிட்ட இதர படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucetexam.in) விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது. இப்பல்கலைக்கழகத்தில் வழங் கப்படும் பல்வேறு படிப்புகள் குறித்த விவரங்களை www.cutn.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 04366 - 277337, 277261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது அடுத்த மாதம் 29-ந்தேதி முடிவு வெளியாகிறது

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 14-ந்தேதி தொடங்கியது. தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் ஆகிய தேர்வுகள் எளிதாக இருந்தது. ஆனால் ஆங்கிலம் இரண்டாம் தாள் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு அடுத்தபடியாக நடந்த கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் மிக கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கூறி இருந்தனர். இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 12.45 மணிக்கு முடிந்தது. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வு முடிவு அடுத்த மாதம் 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 March 2019

MARCH 2019 | CLASS 10,11 & 12 - ANSWER KEY DOWNLOAD


#CLASS
SUBJECT
DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 TAMIL PAPER 1 OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 TAMIL PAPER 2 OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 ENGLISH PAPER 1 OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 ENGLISH PAPER 2 OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 MATHEMATICS TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 MATHEMATICS EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 SCIENCE TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 10DGE CLASS 10 SCIENCE EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 11DGE CLASS 11 ECONOMICS TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 ECONOMICS EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 COMMERCE EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 CHEMISTRY TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 BIO ZOOLOGY TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 BIO ZOOLOGY EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 ZOOLOGY EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 PHYSICS TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 MATHS TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 BIO BOTANY TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 BOTANY TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 11DGE CLASS 11 BOTANY EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 12DGE CLASS 12 MATHEMATICS EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD                   
#CLASS 12DGE CLASS 12 PHYSICS TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 12DGE CLASS 12 CHEMISTRY EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 12DGE CLASS 12 BOTANY TM ANSWER KEY MARCH 2019 E.BHARATHIDASANDOWNLOAD
#CLASS 12DGE CLASS 12 BIOLOGY ZOOLOGY EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 12DGE CLASS 12 BIOLOGY ZOOLOGY TM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 12DGE CLASS 12 BIOLOGY BOTANY EM OFFICIAL ANSWER KEY MARCH 2019DOWNLOAD
#CLASS 12CLASS 12 ECONOMICS EM NP MARCH 2019 ANSWER KEY - R.Mohan (9789768699), PGT Economics, Velammal New Gen School - ChennaiDOWNLOAD
#CLASS 12CLASS 12 PHYSICS EM NP MARCH 2019 ANSWER KEY - A. ABIDHA BEGUM, PG ASST , GOVT GIRLS HR SEC SCHOOL, PUGALURDOWNLOAD
#CLASS 12          CLASS 12 PHYSICS TM NP MARCH 2019 ANSWER KEY - A. ABIDHA BEGUM, PG ASST , GOVT GIRLS HR SEC SCHOOL, PUGALURDOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி. வகுப்பில் பணியமர்த்துவதை எதிர்த்து வழக்கு

தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் பணி அமர்த்துவது குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 March 2019

அரசு பணியில் இருப்பதை மறைத்து விண்ணப்பம்: குரூப்-1 நேர்முகத்தேர்வில் பங்கேற்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் 85 பணியிடங்களுக்கு நடத்திய குரூப்-1 தேர்வில் 14,473 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்ற பிரவீண்குமார் உள்பட 5 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள், தங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், தேர்வில் வெற்றி பெற்ற 14,473 பேரில் 1,073 பேர் அரசுப் பணியில் இருப்பவர்கள். அவர்களில் மனுதாரர்கள் 5 பேர் தவிர மற்றவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் அரசு பணியில் இருப்பதை குறிப்பிட்டுள்ளனர். மனுதாரர்கள் தாங்கள் அரசுப் பணியில் இருப்பதை தெரிவிக்கவில்லை. இதனால் தான் அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை என்றார். மனுவை விசாரித்த நீதிபதி, ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிப்படி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தாங்கள் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுவதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதை மனுதாரர்கள் பின்பற்றவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் புலவர் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்  சரியான வழிகாட்டுதல் இன்றி பட்டதாரிகள் அவதி 

தமிழ் புலவர் பயிற்சி பெற்ற பட்டதாரி கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண் ணப்பிக்க முடியாததால் தவிப்பில் ஆழ்ந் துள்ளனர். தமிழக கல்வித் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படு கின்றன. கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகள் மற்றும் முறைகேடுகளால் முடங்கிய தேர்வு வாரியத்தால், திட்டமிட்ட படி எந்த தேர்வையும் நடத்த முடிய வில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் நடப்பு ஆண்டு எஸ்சி, எஸ்டி ஆசிரியர் காலிப் பணியிடங்கள், கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இணையதள கோளாறு இதில் கணினி பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண் ணப்பப் பதிவு இப்போது நடைபெற்று வருகிறது. இணையதளக் கோளாறு காரணமாக இந்தத் தேர்வுகளுக்கு சரியாக விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் திணறி வருகின்றனர். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டமும் வெளியிடப்படவில்லை. இந்தச் சூழலில் தமிழ் புலவர் பயிற்சி பெற்ற பி.லிட் பட்டதாரிகளும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இணையத்தில் விண்ணப்பிக் கும்போதும் கல்வித் தகுதியில் விவரங் கள் நீக்கப்பட்டுள்ளதால் பி.லிட் பட்டதாரி கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்பு எண் கிடைப்பதில்லை இதுதொடர்பாக தேர்வு வாரிய பயிற்சி மையத்தின் தகவல் மையத்துக்கு (044 - 28272455, 7373008144, 7373008134) தொடர்பு கொண்டால் இணைப்பு கிடைப்ப தில்லை. இதற்காக மாவட்டம் விட்டு பயணித்து நேரில் வந்தாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. சரியான வழி காட்டுதல்கள் இல்லாமல் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? இதற்கு தமிழக அரசு உரிய ஆவன செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் நிறைவு  அறிவியல் தேர்வு கடினம் மாணவர்கள் கவலை

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கடினமாக இருந்ததால் மாணவர்கள் கவலை அடைந்துள் ளனர். பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் மேல் நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதற் கிடையே பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. மொழிப் பாடம், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இப்போது நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். கடந்த மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற கணிதத் தேர்வை போல, அறிவியல் பாட வினாத்தாளும் கடினமாக இருந்ததால் மாணவ, மாணவிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக 5 மற்றும் 2 மதிப்பெண் பகுதிகளில் பெரும்பாலான கேள் விகள் மறைமுகமாக கேட்கப் பட்டிருந்ததால் பதிலளிக்க மாணவர்கள் சிரமப்பட்டனர். இத்தகைய கடின வினாத் தாள்கள் காரணமாக நடப்பு ஆண்டு மாணவர் தேர்ச்சி விகிதம் சரியும். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தேர்வுத் துறை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே ஒட்டுமொத்த மாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (மார்ச் 29) முடிவடைகின்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கும். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 -ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கும். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 March 2019

போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முத்து. இவர், எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல் 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் பணியில் இருந்து விலகியதாக அறிவித்து 60 நாட்களுக்குள் ஆயுதப்படை டி.ஐ.ஜி. முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு காவல் படை கமாண்டன்ட் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து முத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குறிப்பிட்ட நாட்களுக்குள் டி.ஐ.ஜி. முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்காத மனுதாரர் முத்து, சென்னைக்கு வந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இது ஒழுங்கீனத்தை காட்டுவதாக தெரிவித்தார். பின்னர், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒழுங்கீனம் அதிகரிப்பு மேலும் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சமீபகாலமாக காவல்துறையில் ஒழுங்கீனம் அதிகரித்து வருகிறது. காவலர்கள் பணிநேரத்தில் ஸ்மார்ட் போன்களில் விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். பணிக்கு தேவையான கல்வி தகுதிக்கு அதிகமாக படித்தவர்களை நியமிப்பதால் தான் ஒழுங்கீனம் அதிகரித்து வருகிறது. ஐகோர்ட்டில் துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு முதுகலை படிப்பை முடித்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பணியை அக்கறையின்றி செய்து வருகின்றனர். அதிகபட்ச கல்வித்தகுதி என்ன? போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதி என்ன? என்பதை நிர்ணயித்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 8 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதன்மூலம், எஸ்.எஸ்.எல்.சி. கல்வித்தகுதிக்கான பணிகளுக்கு தொழிற்கல்வி படித்தவர்கள் போட்டியிடுவதை தவிர்க்க முடியும். கடைநிலை பணிக்கு முதுகலை படித்தவர்களையும், தொழிற்கல்வி படித்தவர்களையும் அனுமதிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களுக்கான அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவு

காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடைப் பணியாளர்களுக்கான அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் ஆய்வாள ராக பணியாற்றி வந்த முத்து 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராததால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து முத்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘குறிப்பிட்ட நாட்களுக்குள் டிஐஜி முன்பாக ஆஜராகாத ஆய்வாளர் முத்து சென்னைக்கு வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது ஒழுங்கின்மையை காட்டுகிறது. எனவே முத்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சமீபகாலமாக காவல்துறையில் ஒழுங்கின்மை அதிகரித்து வருகிறது. காவலர் கள் பணிநேரத்தில் ஸ்மார்ட் போன்களில் விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்ற நட வடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். பணிக்கு தேவையான கல்வி தகுதிக்கு அதிகமாக படித்தவர் களை நியமிப்பதால் தான் இது போன்ற ஒழுங்கின்மைகள் அதிகரித்து வருகிறது. உயர் நீதிமன்றத்தில் துப்புரவு மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங் களுக்கு முதுகலை படிப்பை முடித் தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அந்தப் பணியில் எவ்வித ஈடுபாடுமின்றி பணியாற்றி வருகின்றனர். எனவே காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடைப் பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயித்து தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 8 வாரத்துக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதன்மூலம் தகுதியான வேலைக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க முடியும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 March 2019

எத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் ? வாட்ஸ்அப்பில் புதிய வசதி

>> எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதைதெரிவிக்கும் புதிய முறை, வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அறிமுகமாகி உள்ளது
>> வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
>> இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும்தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்
>> வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது
>> இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது
>> பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது
>> இந்நிலையில் எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை வாட்ஸ் அப் சோதனை முறையில் அறிமுகமாகி உள்ளது
>> வாட்ஸ் அப்பின் சோதனை ஓட்ட பதிவு எனப்படும் பீட்டா வெர்சனில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
>> பார்வேர்ட் செய்யும் குறுஞ்செய்தியை கிளிக் செய்து 'i' என்ற பொத்தானை அழுத்தினால் எத்தனை முறை அந்த குறுஞ்செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் காட்டப்படுகிறது
>> நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளாக இருந்தால் ,"அடிக்கடி பார்வேர்ட் செய்யப்படுகிறது" (Frequently Forwarded) என்ற தகவலும் இணைத்து காட்டப்படுகிறது
>> தவறான மற்றும் போலி செய்திகளை குறைக்க இந்த புதிய வசதியை அமல்படுத்தி உள்‌ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணைக்காவிட்டால் ரத்தாகும் - வருமானவரித்துறை அறிவிப்பு.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பான் கார்டு நம்பர், ஆதார் எண் இணைப்பை உடனடியாக செய்ய வேண்டும் என வருமான வரித் துறை கூறியுள்ளது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற முடியாத சூழ்நிலை உருவாகும். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதிலிருந்து அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா உள்ளிட்ட மாநிலத்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்கள், 80 வயதுக்கும் மேற்பட்ட முத்த குடிமக்கள், இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பான் எண் ஆதார் எண் இணைப்பு மத்திய நேரடி வரி வாரியம் கடந்த ஆண்டு ஜூன் 30 வரை மதிப்பீட்டாளர்கள் தங்கள் PAN கார்டுகளை ஆதாருடன் இணைக்க அனுமதி அளித்திருந்தது. இப்போது அது இந்த வருடத்தின் நிதி ஆண்டு முடிவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2) கீழ், 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று பான் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் பெற தகுதியுடையவர், எனவே தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது முறையாகும். வருமான வரித்துறை டிவிட்டரில் அறிவிப்பு வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் 2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு எஸ்எம்எஸ் வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம். UIDPAN<12 aadhaar="" digit=""><10 digit="" pan=""> ஆதாருடன் இணைப்பது எப்படி பான் காடுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். வருமான வரித் துறையின் incometaxindia.gov.in இணையதளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பின்னர் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து ‘Link Aadhaar' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அங்கு கேட்கப்படும் விவரங்களை அளித்து captcha என அழைக்கப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்ட்ஐ பதிவு செய்து ‘sumbit'என்பதை கிளிக் செய்யும் போது இணைப்பு முழுமை அடையும். தகவல்கள் ஒரே மாதிரி இருப்பது அவசியம் ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இன்சியல் வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். வரிசெலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டியிருக்கும், அதாவது ஆதார் தரவுப்பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங்கைத் திருத்த வேண்டியிருக்கும். உடனடியாக திருத்தி மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்து விடுவது அவசியமானது. இணைத்து விட்டீர்களா? நீங்கள் உங்கள் பான் கார்ட் நம்பரை ஆதாருடன் இணைத்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் வந்தால் அதனை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். incometaxindiaefiling.gov.in இணையத்தளத்திற்கு சென்று, 'ஆதார் இணைக்கவும்' என்பதை கிளிக் செய்யவும். அந்த பக்கத்தின் மேலே, 'இங்கே கிளிக் செய்யவும்' என்று ஒரு ஆப்ஷன் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் தோன்றும். அதை கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் பான் நம்பர் விவரங்களை பதிவிடுங்கள். உங்கள் பான் கார்டு எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்று அப்போதே தெரிந்துவிடும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் ஆகலாம்

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் (Computer Instructor-Grade-1) பதவியில் 814 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இணையானது. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நடத்தவிருக்கிறது. தகுதி; தேர்வு விவரம் இத்தேர்வு முதல்முறையாக ஆன்லைன் வழியில் நடத்தப்படவிருக்கிறது. அனேகமாக மே மாதம் தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. பி.எட். பட்டம் பெற்ற எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி), எம்.சி.ஏ. பட்டதாரி களும், எம்.டெக்., எம்.இ. பட்டதாரிகளும் (கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினீயரிங்) கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகுப்பினருக்கும் பொருந்தும். நேர்முகத்தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே கணினி ஆசிரியர் வேலை உறுதி. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைத் (முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட்.) தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். உரிய கல்வித் தகுதி உடையவர்கள் ஆன்லைனில் விண்ணக்க வேண்டும். கூடுதல் தகவல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆன்லைன் வழியில் தேர்வுகள்  ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வு, முது கலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரி வுரையாளர் தேர்வு, அரசு பொறியி யல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலை யில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிதாக போட்டித்தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் மதிப் பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியி டவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்தது. முன்பு ஒவ்வொரு தேர்வுகளுக் கான விண்ணப்பங்கள், காகித வழியில் பெறப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விரைவில் நடை பெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்பட உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின் றன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் கூறியது: கணினி ஆசிரியர் தேர்வைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளை யும் ஆன்லைன்வழியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணி கள் இறுதி நிலையை எட்டியுள் ளன. எனினும் அதிக எண்ணிக் கையிலான விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் "ஓஎம்ஆர் ஷீட்" முறையிலேயே வழக்கம்போல் நடத்தப்படும். காரணம் ‘டெட்’ எனப்படும் தகுதித்தேர்வுக்கு சாதாரணமாக 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற நிலையில், இத்தேர்வை ஆன்லைன்வழியில் நடத்துவது சிரமமாக இருக்கும். பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள் ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள். எனவே, இருக்கின்ற சூழலைப் பார்த்து குறைந்த எண்ணிக்கையி லான விண்ணப்பதாரர்கள் பங்கேற் கும் தேர்வுகளை ஆன்லைன் வழி யாகவும், ‘டெட்’ தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளும் தேர்வுகளை வழக்கம் போல் ‘ஓஎம்ஆர் ஷீட்’ முறையிலும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் தேர்வு முறையால் தேர்வு முடிவுகளை வெகுவிரைவாக ஒருசில வாரங்களிலேயே வெளியிட முடியும் என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வு கடினம் மாணவ-மாணவிகள் வருத்தம்

பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிந்து விட்ட நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மட்டும் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் முடிந்து இருக்கின்றன. நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை பொறுத்தவரை கடினமாக இருந்ததாகவே மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். குறிப்பாக, ஒரு மதிப்பெண், 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் மிக கடினமாக கேட்டு இருந்ததாகவும், இதுவரை கேட்கப்படாத வினாக்கள் கேட்கப்பட்டதாகவும், யோசித்து பதில் அளிக்கும் வகையில் ‘கிரியேட்டிவ்’ வினாக்கள் அதிகம் கேட்டு இருந்ததாகவும், 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பது என்பது மிகவும் சிரமம்’ என்றும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 March 2019

ESIC RECRUITMENT 2019 | ESIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1934 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.

ESIC RECRUITMENT 2019 | ESIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1934 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.esic.nic.in இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் பணியிடங்களுக்கு 1934 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனம் சுருக்கமாக இ.எஸ்.ஐ.சி. என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இதன் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள மாநில இ.எஸ்.ஐ. கிளைகளில் ஸ்டெனோகிராபர் மற்றும் மேல்நிலை கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழக இ.எஸ்.ஐ. கழகத்தில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 20 இடங்களும், மேல்நிலை டிவிஷன் கிளார்க் பணிக்கு 131 இடங்களும் உள்ளன. மொத்தம் நாடு முழுவதும் 1934 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாநிலம் வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 15-4-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பிளஸ்-2 படிப்புடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esic.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 400 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2019.

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 400 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2019. இணைய முகவரி : www.bheltry.co.in திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 400 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது திருச்சி கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பிட்டர் பணிக்கு 150 இடங்களும், வெல்டர் பணிக்கு 110 இடங்களும், டர்னர் பணிக்கு 11 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 16 இடங்களும், எலக்ட்ரீசியன் பணிக்கு 35 இடங்களும், சிஸ்டம் அட்மின் பணிக்கு 20 இடங்களும் உள்ளன. இவை தவிர வயர்மேன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெட்டல் ஒர்க்கர், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பாக முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொள்ளவும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 30-3-2019-ந் தேதியாகும். ஏப்ரல் 4-ந்தேதி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். தகுதியானவர்கள் 11-4-2019 முதல் பயிற்சி பணியில் சேரலாம். இது பற்றிய விவரங்களை www.bheltry.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019.

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in இளைஞர் அமைப்பில் ‘டைப்பிஸ்ட்’ பணி மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் நேரு யுவகேந்திரா சங்கேதன். இளைஞர் மேம்பாட்டு அமைப்பான இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணிகளுக்கு 225 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 100 இடங்களும், அக்வுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 73 இடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 52 இடங்களும் உள்ளன. முதுநிலை பட்டதாரிகள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் (nyks.nic.in) வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-3-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NTRO RECRUITMENT 2019 | NTRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 127 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2019.

NTRO RECRUITMENT 2019 | NTRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 127 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2019. இணைய முகவரி : www.introrectt.in மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு அடிப்படையில் 127 பேர் பணியமர்த்தப்படுகிறார்கள். தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் சுருக்கமாக என்.டி.ஆர்.ஓ. (NTRO) என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது 2019-ம் ஆண்டுக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ‘குரூப்-பி’ தரத்திலான (நான் ஹெசட்டடு) குடிமைப் பணியிடங்களாகும். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 52 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 75 இடங்களும் உள்ளன. மொத்தம் 127 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவுக்கு 48 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 8 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 22 இடங்களும் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) மூலம் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 4-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.introrectt.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NTCLTD RECRUITMENT 2019 | NTCLTD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 109 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019.

NTCLTD RECRUITMENT 2019 | NTCLTD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 109 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.ntcltd.org மத்திய துணி நிறுவனத்தில் அதிகாரி வேலை மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேசன் லிமிடெட். மத்திய ஜவுளி நிறுவனமான இதில் தற்போது ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம், நிதி, எச்.ஆர்., நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அதிகாரி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 35 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. டெக்ஸ்டைல் என்ஜினீரியங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.டபுள்யு., சட்டப் படிப்பு போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான அப்ளிகேசனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் ரூ.300 கட்டண டி.டி. மற்றும் புகைப்படம் உள்ளிட்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் 12-4-2019-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.ntcltd.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 23+9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.04.2019.

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 23+9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.04.2019. இணைய முகவரி : www.ongcindia.com எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் (ONGC), நிர்வாக அதிகாரி பணிகளுக்கு 23 பேரும், உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு, முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டப்படிப்புடன் ‘கிளாட் 2019’ தேர்வை எதிர்கொள்பவர்கள் உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., எச்.ஆர்.டி முதுநிலை படிப்பு படித்தவர்கள், ஜர்னலிசம், மாஸ்கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன்ஸ் முதுநிலை படிப்பு படித்தவர்கள், நெட்-ஜூன் 2019 தேர்வை எதிர்கொள்பவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 9-ந் தேதியாகும்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 092 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019.

ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 092 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019. இணைய முகவரி : www.jalma-icmr.org.in தேசிய தொழுநோய் மற்றும் நுண்ணுயிர் நோய்கள் ஆராய்ச்சி மையம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் புராஜக்ட் ெடக்னீசியன் டி.இ.ஓ., சீனியர் ரிசர்ச் பெல்லோ, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10,12-ம் வகுப்பு படித்தவர்கள், லேப்டெக்னீசியன் டிப்ளமோ படித்தவர்கள், மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. வருகிற ஏப்ரல் 2, 3-ந் தேதிகளில் இதற்கான நேர் காணல் நடக்கிறது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.jalma-icmr.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CIMFR RECRUITMENT 2019 | CIMFR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 067 | நேரடி நேர்காணல் நாள் : 02.04.2019.

CIMFR RECRUITMENT 2019 | CIMFR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 067 | நேரடி நேர்காணல் நாள் : 02.04.2019. இணைய முகவரி : www.job.kalvisolai.com மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி மையம் (CIMFR) திட்ட உதவியாளர் (புராஜெக்ட் அசிஸ்ட்டன்ட்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி, எம்.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள், பி.இ.,பி.டெக் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடங்கள் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது. ஏப்ரல் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நேர்காணல் நடக்கிறது. எந்த நாளில் எந்த பணிக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்துக் கொண்டு நேரில் செல்லவும். இது பற்றிய விவரங்களுக்கு http://cimfr.nic.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

VCRC RECRUITMENT 2019 | VCRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.

VCRC RECRUITMENT 2019 | VCRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.vcrc.res.in இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்களில் ஒன்று, வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டர். புதுச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மதுரை, கோட்டயம், கோராபுட் போன்ற கிளை மையங்களில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேப் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.vcrc.res.in என்ற இணையதளம் வழியாக, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.300 கட்டண டி.டி. ஏப்ரல் 15-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை மேற் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு முக்கிய பாடங்களின் தேர்வுகள் இன்று (25.03.19) தொடக்கம்

பத்தாம் வகுப்பு முக்கிய பாடங் களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (25.03.19) முதல் தொடங்குகின்றன. பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதையடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்கு பிரித்து அனுப் பும்பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதற்கிடையே பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப் பாடம், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், கணிதம், அறி வியல் போன்ற முக்கிய பாடங் களுக்கான தேர்வுகள் இன்றுமுதல் (மார்ச் 25) தொடங்குகின்றன. அதன்படி இன்று நடைபெறும் கணிதத் தேர்வை 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட் சம் மாணவர்கள் எழுத உள்ள னர். மார்ச் 29-ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கவுள்ளன. மே 29-ல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் பணிபுரிய அனுமதிக்கலாம் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவு 

ஆசிரியர்கள் அருகே உள்ள கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரிய முதன்மை கல்வி அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள் ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் (பணியாளர்) செ.அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடுக்காக வருவாய் மாவட்ட அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஆசிரியர்கள் அருகே உள்ள கல்வி மாவட்டத்தில் பணிபுரிய விரும்பினால், அவர்கள் விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணி வழங்கப்படலாம். எனினும், ஆசிரியர்கள் தான் பணிபுரியும் கல்வி மாவட்ட முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் குறிப்பிடத்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு முகாமுக்கு சென்று பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்க வேண்டும்’’என்று கூறப்பட் டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 24 March 2019

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல் களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இவை அச்சிடப்பட்டு மே மாதத் தில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இ-புக்ஸ்களாக tnscert.org இணையதளத்திலும் வெளியிடப்ப டும். தற்போது வரை, பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாட நூல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், புதிய பாடத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாட நூல்கள் இ-புக்ஸ்களாக ரகசியமாக சில தனியார் பள்ளிகளுக்கு பகிரப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்விக் கான பாட நூல்களே இ-புக்ஸ்களாக வெளிவந்துள்ளன. அதில், இயற்பியல், கணினி அறிவியல், கணிதம், உயிரி தாவர வியல், உயிரி- விலங்கியல் என உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடங்களின் முதல் தொகுதி வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் எஸ்எஸ்எல்சி வகுப்புக் கான பாடங்களும் இ-புக்ஸில் வெளிவந்துள்ளன. ஒருபடி மேலாக, சில பள்ளிகள், புதிய பாடத்திட்டத்தில் வெளியான பாடங் களுக்கு வழிகாட்டி நூல்களையும் வெளியிட்டுள்ளன. புதிய பாட நூல்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியி டும் முன்னரே, அவை வெளியாகி இருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: பள்ளி மாணவர் கள் உயர்கல்வி செல்ல பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண் மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்க ளைக் கொண்ட பள்ளிகளுக்கு வணிகரீதியான முக்கியத்துவம் கிடைக்கிறது. இதற்காக, சில பள்ளி கள் சில குறுக்கு வழிகளையும் நாடிச் செல்கின்றன. அதுபோன்ற பள்ளிகளால்தான், தற்போது இ-புக்ஸ்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற முறைகேடு களை தடுக்க நடவடிக்கை எடுக்கா விடில், எதிர்காலத்தில் தேர்வு வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க முடியாமல் போய்விடும். முன்கூட்டியே வெளியிடலாம் வரும் கல்வியாண்டில், மாணவர்கள் புதிய பாடத்தில் பாடங்களை படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர் கள் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பிளஸ் 2 நூல்களை உடனடி யாக வெளியிட்டால், அரசுப் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை யைப் பயன்படுத்தி முன்கூட்டியே ஓரளவாவது பாடங்களைப் படித்து புரிந்து கொள்ள முடியும். எனவே, பிளஸ் 2 பாட நூல்கள் தயாராகி விட்டால், அதை தாமதிக்காமல் வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இவ்விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 11 மையங்களில் நாளைமுதல் தொடங்குகிறது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர ஒரு மாத கால நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. நமது நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை உயர்த்த, தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேரத்திலும், வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பாகவும் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங் கியது. இதனால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக ஏதுவாக நீட் பயிற்சி பிப்ரவரி 3-வது வாரம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் (மார்ச் 25) தொடங்கப்பட உள்ளன. இதற்காக நீட் பயிற்சி வகுப்புகளில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆண்டை போல சென்னை உட்பட நகரங்களில் உள்ள 11 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில் உணவு, தங்கும் வசதிகளுடன் காலை முதல் மாலை வரை இந்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட முடிவாகியுள்ளது. நீட் பயிற்சி அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வெளி மாநில நிபுணர்களைக் கொண்டு மே 3-ம் தேதி வரை இந்த பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை வெளியீடு இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘போட்டித் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் தேர்வான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் (மார்ச் 25) நேரடியான முழுநேர பயிற்சி வகுப்புகள் 4 மண்டலங்களில் 11 மையங்களில் உண்டு உறைவிட பயிற்சியாக ஒரு மாதகாலம் வழங்கப்பட உள்ளது. பதிவு செய்து தேர்வு செய்யப்படாத இதர மாணவர்களை அந்தந்த மாவட்டங்களில் விசாட் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ஜேஇஇ போட்டித் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர் களை ஆங்கில வழிப் பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மையத்துக்கும் 2 பொறுப்பாசிரியர்களை நியமித்து பயிற்சியை திறம்பட நடத்த வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு  ஆன்லைன் கலந்தாய்வு ஏப் 1-ல் தொடக்கம் 

தமிழகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஏப். 1-ல் தொடங்குகிறது. 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் வரும் ஏப். 1-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து 5-ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. நாடுமுழுவதும் மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற தமிழ கத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். நீட் தேர்வில் தகுதிபெற்றவர்கள் மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறை யாக மருத்துவப் பட்டமேற் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதும், கலந்தாய்வும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE