Follow by Email

Tuesday, 30 April 2019

TNPSC-Certificate Verification for the Posts of Assistant Jailor in Prison Department...

TNPSC-Certificate Verification for the Posts of Assistant Jailor in Prison Department in Tamil Nadu Jail Subordinate Service, 2017-2018 and Executive Officer, Grade IV in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service included in Group-VIII Service, 2017-2018 & 2018-2019 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதம் உயர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியாகி இருக்கிறது. அதில் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதனைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து, இந்த ஆண்டு 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிர்வாக பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவில் நிர்வாக பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

அரசு பள்ளிகள் 92.48

அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.53

நகராட்சி பள்ளிகள் 92.74

மாநகராட்சி பள்ளிகள் 93.35

ஆதிதிராவிடர் நலவாரிய பள்ளிகள் 87.78

ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் 98.89

கண்டோன்மெண்ட் போர்டு 80.71

வனத்துறை கட்டுப்பாட்டு பள்ளிகள் 90.96

அறநிலையத்துறை பள்ளிகள் 93.87

கள்ளர் பள்ளிகள் 94.78

ஓரியண்டல் பள்ளிகள் 94.36

பகுதி உதவி பள்ளிகள் 96.55

ரெயில்வே பள்ளிகள் 100

சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள் 99.05

மாநில கட்டுப்பாட்டின் கீழ் உள்ள

சுயநிதி பள்ளிகள் 98.31

சமூகநல பாதுகாப்பு பள்ளிகள் 63.64

சமூகநல பள்ளிகள் 89.01

பழங்குடியினர் நல பள்ளிகள் 90.16


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்: திருப்பூர் முதல் இடம் பிடித்தது.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்: திருப்பூர் முதல் இடம் பிடித்தது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் திருப்பூர் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. வேலூர் மாவட்டத்துக்கு கடைசி இடம் கிடைத்து உள்ளது.கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த சிவகங்கை இந்த ஆண்டு 7-வது இடத்துக்கு பின்தங்கிவிட்டது. மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீத பட்டியல் வருமாறு:-

1) திருப்பூர் 98.53
2) ராமநாதபுரம் 98.48
3) நாமக்கல் 98.45
4) ஈரோடு 98.41
5) கன்னியாகுமரி 98.08
6) விருதுநகர் 97.92
7) சிவகங்கை 97.42
8) பெரம்பலூர் 97.33
9) மதுரை 97.29
10) தூத்துக்குடி 96.95
11) அரியலூர் 96.71
12) புதுக்கோட்டை 96.51
13) திருச்சி 96.45
14) கோவை 96.44
15) ஊட்டி 96.27
16) திருநெல்வேலி 96.23
17) தர்மபுரி 96
18) தஞ்சாவூர் 95.92
19) கரூர் 95.61
20) திருவண்ணாமலை 95.56
21) சேலம் 95.50
22) கிருஷ்ணகிரி 94.36
23) சென்னை 94.18
24) விழுப்புரம் 93.85
25) தேனி 93.50
26) திருவாரூர் 93.35
27) திருவள்ளூர் 92.91
28) கடலூர் 92.86
29) காஞ்சீபுரம் 92.45
30) திண்டுக்கல் 92.40
31) நாகப்பட்டினம் 90.41
32) வேலூர் 89.98
கடந்த 19-ந் தேதி வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவிலும் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் தான் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 பேர் ஆகும். அதில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 570 மாணவிகளும், 4 லட்சத்து 69 ஆயிரத்து 289 மாணவர்களும் அடங்குவர். தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடிக்கப்பட்டு தேர்வு முடிவை கல்வித்துறை நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டது.தேர்வு முடிவு அரசு தேர்வுத்துறை இணையதளங்களான www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியவற்றில் நேற்று வெளியானது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது மாநில அளவில் ‘ரேங்க்’ பட்டியல் முறையை ரத்து செய்துவிட்டு, வெறும் தேர்ச்சி சதவீதம் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 3-வது ஆண்டாக இந்த முறையும் அதே நடைமுறையில்தான் தேர்வு முடிவு வெளியானது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதிய 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 பேரில், 8 லட்சத்து 92 ஆயிரத்து 521 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதாவது 4 லட்சத்து 69 ஆயிரத்து 289 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 956 பேரும், 4 லட்சத்து 68 ஆயிரத்து 570 மாணவிகள் தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 565 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாற்றத்திறனாளி மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 816 பேர் எழுதினார்கள். அதில் 4 ஆயிரத்து 395 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அதேபோல், 152 பேர் சிறைவாசிகள் தேர்வு எழுதியதில், 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.12 ஆயிரத்து 548 பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினார்கள். இதில் 6 ஆயிரத்து 100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.இணையதளங்களில் மாணவ-மாணவிகள் தங்களுடைய மதிப்பெண்களை ஆர்வமுடன் பார்த்தனர். அதேபோல், மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக வந்தது.மேலும் அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. அதையும் மாணவ- மாணவிகள் பார்த்து தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டனர்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 2-ந் தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். வருகிற 6-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை பொதுத்தேர்வு (ஜூன்-2019) ஜூன் மாதம் 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது.

பள்ளிகள் வகை வாரியாக தேர்ச்சி சதவீதம்

அரசு பள்ளிகள் -92.48

அரசு உதவி பெறும்

பள்ளிகள் - 94.53

மெட்ரிக் பள்ளிகள் -99.05

இருபாலர் பள்ளிகளில்

படித்தவர்கள் -95.42

பெண்கள் பள்ளிகள் -96.89

ஆண்கள் பள்ளிகள் -88.94

பாடவாரியான தேர்ச்சி சதவீதம்

மொழிப்பாடம் - 96.12

ஆங்கிலம் - 97.35

கணிதம் - 96.46

அறிவியல் - 98.56

சமூக அறிவியல் - 97.07

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந்தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு, சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2017-18-ம் ஆண்டு கல்வியாண்டில் பிளஸ்-1 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கும், அதேபோல் மார்ச் 2019-ல் பிளஸ்-2 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வை எழுதி இருக்கின்றனர். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவ-மாணவிகள் இரு தேர்வுகளிலும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் மட்டுமே உயர் கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள். 2017-18-ம் கல்வியாண்டில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகள், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனரா? என்று உறுதி செய்த பின்னரே கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என அனைத்து அரசு, அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு, சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி முதல் தொடங்குகிறது. வெயில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம்

அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 100 டிகிரியை தாண்டிய வெயில் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி இப்போதே மக்களுக்கு ‘கிலி’ ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ‘பானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘பானி’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெப்பம் அதிகரிக்கும் அபாயம் இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உப்புச்சத்து மற்றும் நீர் சத்து குறைவு ஏற்படும். அதிக அளவில் தாகம், உடல் சோர்வு, தலைவலி, தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதிக அளவில் தண்ணீர் அருந்துவதோடு, நுங்கு, பதனீர், இளநீர், மோர், தர்பூசணி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காத்திருப்போருக்கு வேலை அளித்த பிறகே ஆள் தேர்வு  டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காத்திருப்போர் பட்டியலில் உள்ள வர்களுக்கு வேலை அளித்த பிறகே, அடுத்து ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பி எஸ்சி) உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த பரமானந்தம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 உதவியாளர், தனி எழுத்தர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி 6.2.2014-ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டேன். இருப்பினும் எனக்குப் பணி வழங்கவில்லை. மீதமுள்ள காலியிடங்களை நிரப்பும்போது அழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை எனக்குப் பணி வழங்கவில்லை. எனக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், “அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் வேலையில் சேரவில்லை. பலர் வேலையில் சேர்ந்த பிறகு விலகியுள்ளனர். அவர்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் மனுதாரரை நியமிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில், 2,787 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எஸ்.சி. ஒதுக்கீட்டு இடங்களும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப் பப்பட்டுள்ளன எனத் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு: மனுதாரர் அரசு வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பை நெருங்கிவிட்டார். இதனால் அவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி அடுத்து வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு முன்பு, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அதன் பிறகே அடுத்து ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை டிஎன்பிஎஸ்சி பின்பற்ற வேண்டும். தவறினால் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அதன் பிறகே அடுத்து ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை டிஎன்பிஎஸ்சி பின்பற்ற வேண்டும். தவறினால் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு  345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு 

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறை யில் சாலைப் போக்குவரத்து தொழி லாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி மருத் துவக் கல்லூரிகளில் சுமார் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப் பட்டன. மீதமுள்ள இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்து கிறது. இந்நிலையில் கரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்க உள்ளது. இந்த புதிய கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாண வர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. இதேபோல், மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 95 இடங்கள் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதி கரிக்க வாய்ப்புள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விஐடி பல்கலைக்கழகம் நடத்திய  பிடெக் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு  மே 9-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம் 

வேலூர் விஐடி பல்கலைக்கழக பிடெக் பொறியியல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தர வரிசை அடிப்படையிலான கலந் தாய்வில் மே 9-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதுதொடர்பாக விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் மட்டுமின்றி இந்தியாவின் 124 நகரங்கள் என மொத்தம் 163 மையங்களில் கணினி முறையில் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில், 16 லட்சத்து 62 ஆயிரத்து 462 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாய் சகிடிக்கா செக்குரி, ஆந்திராவைச் சேர்ந்த குரஜாலா ஜோயல் மோசஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த துஸார் ஜெயின், அரியானா மாநில மாணவர் திஷங்க் ஜிண்டால், ஆந்திராவைச் சேர்ந்த பால ரத்னசாமி, கேரளா மாணவர் தாமஸ் ஜேக்கப், மேற்குவங்க மாணவி யாசிகா பட்டோடியா, தமிழகத்தைச் சேர்ந்த ராகவன் கோபாலன், ராஜஸ்தானின் மோகித் குமார் கோயல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சித்தார்த் கிரி ஆகியோர் முறையே முதல் 10 இடங்களையும் பிடித்தனர். தரவரிசை அடிப்படையிலான கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை மே 9-ம் தேதி முதல் நடைபெறும். தரவரிசையில் 1 முதல் 10 ஆயிரம் இடத்தைப் பிடித்தவர்களுக்கான கலந்தாய்வு மே 9-ம் தேதியும் 10,001 முதல் 30,000 தரவரிசை பெற்றவர்களுக்கு மே 10-ம் தேதி நடைபெறுகிறது. 30,001 முதல் 50,000 தரவரிசை பெற்றவர்களுக்கு மே 11-ம் தேதியும், 50,001 முதல் 70,000 தரவரிசை பெற்றவர்களுக்கு மே 13-ம் தேதியும், 70,001 முதல் 90,000 தரவரிசை பெற்றவர்களுக்கு மே 14-ம் தேதியும், 90,001 முதல் 1,10,000 தரவரிசை பெற்றவர் களுக்கு மே 15-ம் தேதியும் கலந் தாய்வு நடைபெறும். நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்கள் விஐடி வேலூர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் ஏதே னும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணி ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் சஸ்பெண்ட் ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்கை

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பணி ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர் க.தங்கவேல்(58). இவர் இன்று (ஏப்.30) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், அவரை நேற்று பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தங்கவேல் பொறுப்பேற்பதற்கு முன்பு, சேலம் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றியபோது, அலுவலக உதவியாளர் பணி நியமனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவரை பணியமர்த்துவதற்கு பதிலாக 8-ம் வகுப்பு தோல்வியடைந்த நபரை பணி நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புகார் எழுந்ததும் அதை மறைக்க, தான் அங்கு பதவியேற்பதற்கு முன்பே அலுவலக உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட்டுவிட்டது போன்று ஆவணங்களை அவர் திருத்தியதாகவும் கூறப்படுகிறது. இம்முறைகேடு தொடர்பாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முறைகேடு நடை பெற்றபோது சேலம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய கண்காணிப்பாளர் மற்றும் பிரிவு எழுத்தர் ஆகியோரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, கரூர் மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப் பேற்றுள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வட மாவட்டங்கள் முன்னேற்றம்

தரவரிசை பட்டியலில் வட மற்றும் கடலோர மாவட்டங்கள் பின்தங்கினாலும் தேர்ச்சி வீதத்தில் பரவலாக முன்னேற்றம் கண்டுள்ளன. அதிகபட்சமாக விழுப்புரம் கடந்த ஆண்டு 90.18 % தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 3.7 சதவீதம் கூடுதலாக (93.85%) எடுத்துள்ளது. திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களும் தேர்ச்சியில் முன்னேறியுள்ளன.

STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருப்பூர் மாவட்டம் முதலிடம்

எஸ்எஸ்எல்சி தேர்வு தேர்ச்சியில் திருப்பூர் மாவட்டம் 98.53 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியிலும் திருப்பூர் மாவட்டமே முதலிடத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. எஸ்எஸ்எல்சி தேர்வு தேர்ச்சியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாவட்டங்களின் தேர்ச்சி வீதத்தை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

திருப்பூர் - 98.53 சதவீதம்

ராமநாதபுரம் - 98.48 சதவீதம்

நாமக்கல் - 98.45 சதவீதம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளின் வகை வாரியான தேர்ச்சி வீதம் 

 எஸ்எஸ்எல்சி தேர்வில் அரசு பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி வீதம் அதிகமாக உள்ளது.

பள்ளிகளின் வகைகள் வாரியாக தேர்ச்சி விகித பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

அரசு பள்ளிகள் - 92.48 சதவீதம்

அரசு உதவி பெறும்

பள்ளிகள் - 94.53 சதவீதம்

தனியார் பள்ளிகள் - 99.05 சதவீதம்

இருபாலர் பள்ளிகள் - 95.42 சதவீதம்

பெண்கள் பள்ளிகள் - 96.89 சதவீதம்

ஆண்கள் பள்ளிகள் - 88.94 சதவீதம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு 

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 2011 -ம் ஆண்டு முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் நேரடி யாக வேலைவாய்ப்புத் துறை இணைய தளத்தில் பதிவு செய்ய வசதிகள் செய்யப் பட்டன. அதேபோல், இந்த ஆண்டும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட தினமே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும். இதற்கு தேவையான படிவங்கள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 29 April 2019

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் 98.53 சததவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் 98.53 சததவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

>> பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 9,76,019.
>> பள்ளி மாணாக்கராது தேர்வெழுதியோர் 9,37,859.
>> மாணவியரின் எண்ணிக்கை 4,68,570.
>> மாணவர்களின் எண்ணிக்கை 4,69,289.
தேர்ச்சி விவரங்கள்
>> தேர்ச்சி பெற்றவர்கள் 95.2 %.
>> மாணவியர் 97.0 %தேர்ச்சி அடைந்துள்ளனர்.
>> மாணவர்கள் 93.3 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
>> மாணவர்களைவிட மாணவியர் 3.7 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் பள்ளி கல்வித்துறை அதிரடி

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்தது. 2010-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இந்த சட்டவிதி பொருந்தும். 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் இந்த காலக்கெடு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. அரசு கொடுத்த காலக்கெடு கடந்த மாதத்தோடு முடிவடைந்த நிலையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பளம் நிறுத்தம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சம்பளம் வழங்காமல் நிறுத்திவைத்துள்ளது. விரிவான அறிக்கை ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பெயர், அவரது தகுதி, நியமன தேதி உள்ளிட்டவைகள் விரிவான அறிக்கையாக தொகுக்கப்பட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், செயலாளர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் வேலாயுதம், சித்ராதேவி ஆகியோர் 15.6.2011 அன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல அரசு உதவிப்பெறும் பள்ளிகளும் தங்களுடைய நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஜூன் 1-ந் தேதி பள்ளி திறப்பதற்கு முன்னர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் வரும் கல்வியாண்டில் பணியில் நீடிக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ப  பாடவேளைக்கான நேரத்தை தலைமை ஆசிரியர் நிர்ணயிக்கலாம்

 ஆரம்பப் பள்ளிகளில் பாடவேளை நேரத்தை தலைமை ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் ஒரு பாடவேளைக்கு 90 நிமிடங்கள் (1.30 மணி நேரம்) ஒதுக்கி குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. இதற்கு எதிர்ப்பு வருவதால், ஒரு பாடவேளைக்கு 1.30 மணி நேரம் என்பதை குறைப் பது குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாநில திட்ட இயக்குநரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டது. இதையடுத்து பாடவேளை நேரத்தை 45 நிமிடமாகக் குறைப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் உடன் ஆலோசிக்கப்பட்டது. அதில் புதிய பாடத்திட்ட புத்தகம் 90 நிமிடங்களுக்கு ஏற்ப வடி வமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆரம்ப நிலையில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு 1.30 மணி நேரம் பாடத்தைக் கற்பித்தால்தான் சிறப் பானதாக இருக்கும் என பரவலாக கருத்துருக்கள் பெறப்பட்டன. கருத்துகேட்பு கூட்டம் இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலருடனான ஆலோசனையின் முடிவில், வட்டாரக் கல்வி அதிகாரி கள் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, மாணவர்கள் கற்றல், கற்பித்தல் பணிக்கு முன்னேற் றம் தரும் வகையில் அந்தந்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் கள், தங்கள் விருப்பத்தின்படி பாட வேளையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இவ்வாறு சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது. குழப்பங்களுக்கு வழிவகுக்கும் இதற்கிடையே ஆரம்பப் பள்ளி யின் பாடவேளை நேரத்தை தலைமை ஆசிரியர்கள் முடிவுக்கு விடுவது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, இப்போது அமலிலுள்ள பழைய நடை முறையே தொடர வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யூடியூப் சானல் தொடங்கிய புதுச்சேரி கல்வித்துறை

தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்' என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலை யும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி களிலேயே அறிவியல் ஆர்வ முள்ள குழந்தைகளின் திறனை வளர்ப்பது அவசியம். இவ்வகுப்பு களில் அறிவியல் ஆய்வகங்கள் வசதி இல்லை. அதற்கு மாற்று முயற்சியை தற்போது தொடங்கி உள்ளனர். புதிய கையேடு சிறுசிறு அறிவியல் விஷயங் களை பரிசோதனை செய்யும் விதத்தில் ‘சமகர சிக்சா’ என்ற மத் திய அரசு திட்டத்தின்கீழ் அறிவியல் திறனை தொடக்கப்பள்ளி குழந்தை களுக்கு கற்று தர ‘சயின்ஸ் கார்னர்' என்ற புதிய கையேட்டை கல்வித்துறை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக ‘சமகர சிக்சா’ ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர் னாண்டஸ் கூறியதாவது: சமகர சிக்சா திட்டத்தின்கீழ் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த திட்டம் தயாரித்து விண்ணப்பித்தோம். தலா ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ. 5 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதி தந்துள்ளது. இதையடுத்து அறிவியல் ஆசிரியர்களை கொண்ட குழு அமைத்து ‘சயின்ஸ் கார்னர்' என்ற தலைப்பில் கையேடு உருவாக்கியுள்ளோம். இந்த கையேடு மூலம் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்களை சிறு, சிறு பரிசோதனைகள் மூலம் குழந்தைகளே அறிய முடியும். அறிவியல் பரிசோதனைகளுக்கு தேவையான பொருட்கள், அதன் பயன் என அனைத்து விவரங்களும் கையேட்டில் இருக்கும். கையேட் டினை பயன்படுத்தி செயல் முறை விளக்கங்களை செய்வதற் காக தொடக்கப் பள்ளி மாணவர் களுக்காக யூடியூப் சேனலை உருவாக்கியுள்ளோம். தற்போது மாதிரி வீடியோக்களை பதிவிட தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். வீடியோக்கள் வெளியீடு புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு கூறும்போது, ‘‘நடப்பாண்டு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ‘சயின்ஸ் கார்னர்' திட்டப்படி 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் திட்டங்களை உருவாக்கியுள் ளோம். கையேடும் தயாரித்துள் ளோம். சிறு சிறு பரிசோதனைகள் சிறு, சிறு அறிவியல் பரிசோத னைகளை அவர்களே செய்து முழுமையாக கற்கலாம். இதற் கான யூடியூப் சேனலுக்கு தேவை யான வீடியோக்கள் தயாரித்து வருகிறோம். முதற்கட்டமாக ஆசிரியர்களை கொண்டு பத்து வீடியோக்கள் தயாராகியுள்ளன. விரைவில் அனைத்தையும் பார்க்கலாம். குழந்தைகள் அறிந்து கொள்ளும் அறிவியல் சார்ந்த விஷயங்களின் வீடியோக்களும் இதில் இடம்பெறும்’’ என்று குறிப்பிட்டார்.கையேடு மூலம் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்களை சிறு, சிறு பரிசோதனைகள் மூலம் குழந்தைகளே அறிய முடியும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 28 April 2019

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு 19-ந்தேதி நடக்கிறது

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்த இருக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துக்கிறது. இதுதொடர்பாக மனிதநேய பயிற்சி மையத்தில் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மனிதநேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம், வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. இந்த பயிற்சிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள (கிராமப்புற, விவசாய, விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை) மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுழைவுத்தேர்வை மனிதநேய மையம் நடத்துகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. நுழைவுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவச பயிற்சி வழங்கவும், தகுதியான மாணவர்களை தேர்வு செய்யவும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தை எங்களுடைய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.mnt-f-r-e-e-ias.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத்தேர்வுக்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகும். நுழைவுத்தேர்வுக்கான தேர்வு அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, சுய சான்றொப்பம் இட வேண்டும். மேலும் அதனுடன் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை தேர்வு அனுமதி சீட்டுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க பெற்றோர் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை அரசு முறையாக தெரிவிக்காததால் நிர்வாகங்கள் அதிக அளவு வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட 17,000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே அனைத்துவித தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி கல்வி கட்டணக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சார்பில் தனியார் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணையதளங்களில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகங்கள் சார்பிலும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், அரசு அறிவித்தபடி பள்ளிகளி லும் கட்டண விவரங்கள் குறித்த அறி விப்பு பலகைகள் வைக்கப்படு வதில்லை. இதற்கிடையே மாநிலம் முழுவதும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் செயல் படும் பள்ளிகளில் கட்டண விகிதம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிக்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டண விவரங்கள் முறையாக விளம்பரம் செய்யப்படுவதில்லை. இதனால் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தவிக்கிறோம். சென்னையில் பல பள்ளிகளில் ரூ.60 முதல் ரூ.80 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எல்கேஜி முதல் 11-ம் வகுப்பு புதிய மாணவர் சேர்க்கை எனில் லட்சக்கணக்கில் நன்கொடை செலுத்த வேண்டும். சில பள்ளிகளில் முன்வைப்பு தொகை என்ற பெயரில் பணம் வாங்குகின்றனர். மேலும், ஆண்டுதோறும் 10% வரை கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுகுறித்து கல்வித் துறை அலுவல கங்களில் புகார் செய்தால் அந்தப் பள்ளியில் ஏன் பிள்ளையை சேர்க்கிறீர் கள். அங்கு போனால் அவ்வளவு பணம் கட்டத்தான் வேண்டும் என கூறு கின்றனர். அரசுப் பள்ளிகள் போதிய வசதிகளுடன் தரமாக இருந்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியம் இருக் காது. இந்தப் பிரச்சினைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றனர். தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச்செயலாளர் நந்தக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் கட்டணக் கொள்ளைக்கு கல்வித் துறையும், தமிழக அரசும்தான் முக்கிய காரணம். தனியார் பள்ளிகளின் வசதிகளைப் பொறுத்து நியாயமான கட்டணத்தை நிர்ணயித்தால் பிரச்சினை இருக்காது. ஆனால், இதை கல்வித் துறை அதி காரிகள் முறையாக செய்வதில்லை. கண்துடைப்புக்காகவே குழு அமைப்பு கண் துடைப்புக்காகவே கல்வி கட்டண நிர்ணயக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழு எந்தப் பள்ளிகளையும் சரியாக ஆய்வு செய்யாமல் சில ஆயிரங்களில் கட்டணத்தை நிர்ணயித்து விடுகின்றனர். இதை சமாளிக்க முடியாமல் பள்ளிகள் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்ய வேண்டியுள்ளது. எனினும், இந்த வாய்ப்பை பெரும்பாலான தனியார் பள்ளிகள் தவறாகவே பயன்படுத்தி அதிக அளவு கட்டணம் பெறுகின்றனர். சென்னையில் பிரபலமான சில தனியார் பள்ளிகளில் எல்கேஜிக்கே ஒரு லட்சத்துக்கும் மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்தப் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. மாநிலத்தில் உள்ள பிளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் மேல், முறையான அங்கீகாரமில்லை. போதிய அடிப்படை வசதிகளின்றி சிறிய கட்டடங்களில் இயங்குகின்றன. அங்கு ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதை அறிந்தும் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக உதவுகின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போதிய அளவில் உள்ளன. எனவே, புதிய பள்ளிகளுக்கு கல்வித் துறை அனுமதி அளிக்க வேண்டிய தில்லை. மாறுபட்ட கல்விக் கட்டணத் தால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின் றன. அதனால் பள்ளி அங்கீகாரம், சொத்துவரி, வாடகை, ஆசிரியர் சம்பளம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச்சங்க மாநிலத் தலைவர் அருமைநாதன் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி மாசிலாமணி தலைமையிலான குழு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழு பள்ளிகளில் உள்ள வசதிகளின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. அறிவிப்பு பலகை எனினும், இந்த நடைமுறை முடிந்து மே இறுதியில்தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால், அதற்குள் கல்விக் கட்டணத்தை பள்ளிகள் வசூலித்துவிடும். இதை சரிசெய்ய கட்டண விவரங்களை முழுவதும் பள்ளிவாரியாக இணையதளங்களில் வெளியிடுவதுடன், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்வதுடன், எல்லா பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். மேலும், மாநிலத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அந்தப் பணிகளை கட்டணக் குழு விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார். தமிழ்நாடு கல்விக் கட்டணக் குழு அதிகாரி ஞானசேகரன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 5,200 பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் விவரங்கள் https://tamilnadufeecommittee.com/schoolfees.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 2020-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இதே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இதுதவிர 2,300 பள்ளிகளுக்கு வழக்கு காரணங்களால் ஓராண்டு கால அனுமதியில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அனுமதியும் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. பள்ளிகளின் பட்டியலும் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதர பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் மக்கள் நேரிடையாக புகார் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம்’’ என்றார்.5,200 பள்ளிகளுக்கு கட்டண விவரங்கள் https://tamilnadufeecommittee.com/schoolfees.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 2020-ம் ஆண்டு வரை இதே கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளி யாகின்றன. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ல் தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறியலாம். இதுதவிர பள்ளிகளுக்கு மின் னஞ்சல் மூலமும் பள்ளி மாண வர்கள், தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மேலும், எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து நுாலகங்களிலும் தேர்வு முடிவு களை அறிய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து தேர்வர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணையத்தில் பதிவிறக் கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ள லாம். மாணவர்கள் மே 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் மே 2 முதல் 4 வரை விண்ணப்பிக் கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப் பிப்போர் மொழிப் பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருத்தம் செய்யப்பட வேண்டிய நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு 

திருத்தம் செய்யப்பட வேண்டிய மாணவர் களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைவாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல மாணவர்களின் ஹால் டிக்கெட்களில் பிழைகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ஏதாவது விவரம் சரியாக இல்லையெனில் அந்த ஹால் டிக்கெட்களை மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதை ஸ்கேன் செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) மின்னஞ்சலுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அறிவுத்தப்பட்டிருந்தது. எனினும். தேர்வுக்கான கால அவ காசம் குறைவாகவே இருக்கிறது. எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகள் உதவியுடன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நீட் பயிற்சி மைய பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்ய வேண்டிய மாணவர்கள் இருந்தால் அதன் விவரங்களை விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். ஹால் டிக்கெட்டின் நகல்கள் என்டிஏ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிலுள்ள தவறான விவரங்கள் திருத் தம் செய்யப்படும். மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை ஒப்படைத்த மறு நாள் முதல் அதிலுள்ள விவரம் சரி செய்யப்பட்டுள்ளதா என இணையதளத் தில் பார்த்து அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 காலியிடங்கள் 

தமிழகத்தில் 2,699 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 40 ஆயிரத் துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். எனினும், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவர அறிக்கையை தமிழக அரசிடம் அளித்து ஒப்புதல் பெற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்த பின் அதன் விவரம் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்படும். இதனால் விரைவில் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 26 April 2019

மாணவர்களுக்கு கணக்காயர் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காயர் சங்கம் ஆகியவற்றின் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய பட்டயக் கணக்காயர் சங்கத்தின் கல்வி ஆலோசனைக் குழுவின் மூலம் 32 மாவட்டங்களில் 352 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் ஆங்கிலம்) பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காயர் தேர்வு மற்றும் வர்த்தகம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் பட்டயக் கணக்காயர் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க மேற்கண்ட சங்கத்தின் 12 கிளைகளிலும் மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிளைகள் கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம், சிவகாசி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. இதில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மேலும் விவரம் www.icai.org என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விடைத்தாள் திருத்தம் முடிந்தது 10ம் வகுப்புக்கு 29, பிளஸ் 1க்கு மே 5ல் ரிசல்ட்: தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 29ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவு மே 5ம் தேதியும் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி அம்மாத இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாக முடிந்தன. இதையடுத்து, மார்ச் 20ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தற்போது பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான முடிவு, வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் நேற்று வரை திருத்தும் பணி நடந்தது. நேற்று இரவு அவை முடிக்கப்பட்டன. இதையடுத்து மதிப்பெண்களை பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது. பிளஸ் 1 தேர்வு முடிவு மே 5ம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் அனைத்தும் பள்ளிகளின் இணைய தளத்தில் காலை 9.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அங்கேயே தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான அடுத்த இரண்டு நிமிடத்தில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இது தவிர தேர்வுத்துறையின் இணைய தளத்திலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு மையம் அமைப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைப்பதில் எந்த குளறுபடியும் இல்லை. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவ -மாணவியர் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதியின் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் தேர்வு மே மாதம் நடக்கிறது. இதற்காக தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், தேர்வு மைய குறியீட்டு எண்களை ஒதுக்கியுள்ளதில் பல குளறுபடி நடந்துள்ளது என்றும் பலருக்கு வேறு மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இது பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது. தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக எந்த குளறுபடியும் இல்லை. நீட் தேர்வு தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் மாணவர்கள் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசும் மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவி வனக்காப்பளர் உள்ளிட்ட பணிகளுக்கு மே 6 முதல் 16 ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

உதவி வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மே 6ம் முதல் 16ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது வனத்துறையில் 14 உதவி வனக்காப்பாளர், தொல்லியல் துறையில் ஒரு உதவி நூலகர் மற்றும் ஒரு இளநிலை கல்வெட்டு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது இதைத் தவித்து ேதாட்டக் கலை துறையில் 279 உதவி இயக்குனர்கள் மற்றும் தோட்டக் கலை அலுவலர்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ம் தேதி நடைபெற்றது மேலும் அறநிலையத்துறையில் 55 செயல் நிலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்றது இதில் உதவி வனக்காப்பாளர் தேர்வில் கலந்து கொண்ட 296 பேரில் 42 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் மே 9ம் தேதி நடைபெறுகிறது உதவி நூலகர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் தேர்வில் கலந்து கொண்ட 142 பேரில் 6 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணலும் 9ம் தேதி நடைபெறுகிறது தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அலுவலர் பணிக்கான தேர்வில் 2047 பேர் கலந்து கொண்டனர் இதன் முடிவில் 545 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் மே 6,7, 10, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது அறநிலையத் துறை செயல் நிலை அலுவலர் பணிக்கான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 112 பேர் மே 7 ம் தேதி முதல் 14 ம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் தகவல்களுக்கு தேர்வர்களின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 42 சேவை மையங்கள் இணையதள முகவரியும் வெளியீடு

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்காக 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நேரடியாக விண்ணப்பிக்க இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பாணை வெளியீடு தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், பி.இ. மற்றும் பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக, விண்ணப்பிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பானை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு 2019-2020-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக https://www.tneaonline.in, htpp://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மே 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், நெட்பேங்கிங் வாயிலாகவும் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலுமாக 42 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம். அதேநேரம் ஆன்லைன் மூலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்களும், “செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து இந்த மையங்களில் அளிக்கலாம். கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை போன்றவை இணையதளம் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இ-மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய நாட்களில் விண்ணப்பப்படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்ய வேண்டும். விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டும் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டும் நடைபெறும். என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:- சென்னை மாவட்டம் - சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி. கடலூர் - திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, விருத்தாசலம். அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். காஞ்சீபுரம் - பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, சின்ன காஞ்சீபுரம். ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, பாரதிபுரம், குரோம்பேட்டை. திருவள்ளூர் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி. திருவண்ணாமலை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யார். வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகாயம். விழுப்புரம் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கண்டாச்சிபுரம். கோவை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேடு. அரசு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, புது சித்தாபுதூர். கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை. தர்மபுரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செட்டிகரை. ஈரோடு - சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சக்திநகர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை. கிருஷ்ணகிரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர். நாமக்கல் - என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை கல்லூரி, நாமக்கல். நீலகிரி - அரசு கலை கல்லூரி, உதகமண்டலம். சேலம் - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஓமலூர். திருப்பூர் - சிக்கன்ன அரசு கலை கல்லூரி, திருப்பூர். கரூர் - அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை. மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, ஜெய்ஹிந்த் புரம். தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பரங்குன்றம். ராமநாதபுரம் - அரசு கலை கல்லூரி, பரமக்குடி. தேனி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, போடிநாயக்கனூர். திண்டுக்கல் - ஜி.டி.என். கலை கல்லூரி, திண்டுக்கல். அரியலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழபழூர். நாகப்பட்டினம் - வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, பால்பண்ணைசேரி. பெரம்பலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழகனவாய். புதுக்கோட்டை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி. தஞ்சாவூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரெகுநாதபுரம். அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செங்கிப்பட்டி. திருச்சி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை. அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீரங்கம். திருவாரூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான். சிவகங்கை - ஏ.சி.அரசு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி. கன்னியாகுமரி - தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, கோட்டார், நாகர்கோவில். திருநெல்வேலி (2 இடம்) - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, திருநெல்வேலி. ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை. தூத்துக்குடி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி. விருதுநகர் - வி.வி. வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் கூறியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட்’ நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்யலாம் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு அடுத்த (மே) மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதிலும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) கடந்த 15-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்தது. அதன்படி மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர். ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் இருந்தாலோ, விவரங்கள் தவறாக இருந்தாலோ முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைத்து திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் இருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர்களின் ‘நீட்’ நுழைவுச்சீட்டில் விவரங்கள் சரியாக இல்லை என்றால், அதனை பெற்று உரிய முகப்பு கடிதத்துடன் திருத்தங்கள் செய்வதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் (முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள்) ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் மாணவர் கலந்தாய்வு முன்னேற்பாடுகள் குறித்து  தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அறிவுறுத்தல்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பான முன்னேற் பாடுகள் குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உயர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்க கம் நடத்துகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய் வுக்கான ஆன்லைன் முன்பதிவு மற்றும் கலந்தாய்வு குறித்த கால அட்டவணை 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. ரேண்டம் எண் ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசை பட்டியல் வெளியீடு முடிந்து ஜூலை 3-ம் தேதி ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி 30-ம் தேதி நிறைவடையும். ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின்கீழ் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், பொது கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள் வரும் என்பது மே முதல் வாரத்தில் தெரியவரும். பொறியியல் மாணவர் சேர்க் கைக்கு அண்ணா பல்கலைக் கழகம் பின்பற்றி வந்த அதே நடைமுறைகளை (ஆன்லைன் பதிவு, ஆன்லைன் கலந்தாய்வு, ஆன்லைன் ஒதுக்கீடு) தொடர்ந்து நடைமுறைப்படுத்த தொழில்நுட் பக் கல்வி இயக்ககமும் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு தொடர்பான முன்னேற் பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அரங்கில் நேற்று நடை பெற்றது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்கக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்துவதால் சிறு தவறுகூட ஏற்படாமல் கலந் தாய்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், கல்லூரி மாணவ, மாணவி யருக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப விஞ் ஞான ரீதியான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவு ஆகியவற்றை வழங்க சிறப்பு விளையாட்டு விடுதிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கான விடுதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும், மாணவியருக்கான விடுதி நேரு உள் விளையாட்டரங்கிலும் இயங்கி வருகிறது. இதில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனி போட்டிகளுக்கு விண்ணப் பிப்பவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவி லான போட்டிகளில் பங்கேற்ற வர்களும் விண்ணப்பிக்கலாம். குழு போட்டிகளுக்கு விண்ணப் பிப்பவர்கள், மாநில அளவிலான போட்டியில் முதல் 2 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். கையுந்து பந்து விளையாட்டில் 185 செ.மீ.க்கு மேல் உயரமுள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, பளு தூக்குதல், ஜூடோ ஆகிய விளையாட்டுகளில் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். கூடைப்பந்து, வாள் சண்டை, இறகுப் பந்து, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றுக்கு மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக் கலாம். இதற்கான விண்ணப்பங் கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின் றன. மே 2-ம் தேதிக்குள் ஆன் லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விடுதியில் சேர விரும் பும் மாணவ, மாணவியர் மே 3-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான தேர்வில் பங்கேற்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடை பெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கி லம்), சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் கணக் கியல் ஆகிய பாடங்களின் தேர்வு முடிவுகள் 26-ம் தேதி (இன்று வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின் றன. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம். இத்தகவலை தொழில் நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலை வரும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான கே.விவேகா னந்தன் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் தொழிலாளர் கல்வி நிறுவனம் அறிவிப்பு

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் தொழிலாளர் கல்வி நிறுவனம் அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்ட செய் திக்குறிப்பு: தமிழக அரசு கல்வி நிறுவன மான தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னையில் இயங்கி வருகிறது. இங்கு பிஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்ஏ (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகளும் தொழிலாளர் நிர் வாகத்தில் முதுநிலை மாலை நேர டிப்ளமோ படிப்பும் (பிஜிடிஎல்ஏ), தொழிலாளர் சட்டம் மற்றும் நிர் வாகவியல் சட்டத்தில் வாரஇறுதி டிப்ளமோ படிப்பும் (டிஎல்எல்) நடத்தப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு மேற்குறிப்பிட்ட பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு, டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் கல்வித்தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளன. இக் கல்வி நிலையத்தில் படித்த மாண வர்கள் பல்வேறு தொழிற்சாலை களில் மனிதவள மேம்பாட்டு மேலாளராகப் பணியாற்றி வரு கிறார்கள். தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் பிளஸ் 2 முடித்த வர்களும் பட்டமேற்படிப்பு மற்றும் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளில் பட்டதாரிகளும் சேரலாம். 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக இப்படிப்புகளில் சேர விண்ணப் பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100. அவர்கள் சாதி சான்றி தழ் நகலை சமர்ப்பிக்க வேண் டும். விண்ணப்பங்களை தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தபால் கட்டண மாக ரூ.50 கூடுதலாக அனுப்ப வேண்டும். அக்கட்டணத்தை "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai 600 005" என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து கோரிக்கை கடிதத்துடன் ‘‘இயக்குநர், தமிழ்நாடு தொழி லாளர் கல்வி நிலையம், 5, காம ராஜர் சாலை, சென்னை 600 004’’ என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்களை மே மாதம் 30-ம் தேதிக்குள்ளும், முதுகலை படிப்பு மற்றும் டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஜூன் 28-ம் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய உதவி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) ஆர்.ரமேஷ்குமாரை 9884159410 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 50% தபால் வாக்குகள் பதிவாகவில்லை மே 23 காலை 6 மணி வரை அவகாசம்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 100 சதவீதம் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் இன்னும் 50 சதவீதம் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில், கடந்த 18-ம் தேதி மக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி களின் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் என 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டனர். காவல் துறையைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர, அரசு ஊழியர்கள் அல்லாதோரும் தேர்தல் பணி யாற்றினர். இவர்களில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், காவல் துறையில் தங்கள் தொகுதியை விட்டு வெளியில் சென்று வாக் குச்சாவடியில் பணியாற்றியோ ருக்கு தபால் வாக்குப்படிவங்கள் வழங்கப்பட்டு, தங்கள் வாக்கு களைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர் களுக்கு தேர்தல் பயிற்சி வழங் கப்பட்ட மையங்களிலும், காவலர் களுக்கு சிறப்பு மையங்களிலும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டது. தபால் வாக்கைப் பொறுத்த வரை, படிவத்தை பூர்த்தி செய்து, தாங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே.23-ம் தேதி காலை 6 மணி வரை அளிக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது. தபால் வாக்கு தவிர, சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும் அரசு பணியில் அல்லாத வீடியோகிராஃபர்கள், இணையதள இணைப்பு வழங்கு பவர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு இ.டி.சி. படிவம் வழங்கப்பட்டது. அந்தப் படிவத்தை பயன்படுத்தி, தாங்கள் பணியாற்றும் அந்த வாக்குச்சாவடியிலேயே சம்பந் தப்பட்டவர்கள், வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த வகையில், தமிழகத்தில் 100 சதவீதம் தபால் வாக்குகளை காவலர்கள் பதிவு செய்து அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஏப்.23-ம் தேதி நிலவரப்படி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 592 பேருக்கு தபால் வாக்குப்படிவங்கள் வழங் கப்பட்டன. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 தபால் வாக்குப் படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இதுதவிர, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள் என 1 லட்சத்து 18 ஆயிரத்து 398 பேருக்கு தேர்தலின்போது இடிசி படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் வாக்களித் தனர் என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை. காவல்துறை யினரைப் பொறுத்தவரை, 90 ஆயி ரத்து 2 தபால் வாக்குப்படிவங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனை வரும் வாக்களித்து விட்டனர். இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE