10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் மே 27-ல் வெளியாகும்

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் மே 27-ல் வெளியாகும் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப் பித்தவர்களில் மதிப்பெண் மாற்ற முள்ள தேர்வர்களின் பதிவெண் கள் பட்டியல் மே 27-ம் தேதி வெளியிடப்படும். தேர்வர்கள் scan.tndge.in என்ற இணைய தளத்தில் சென்று ‘SSLC MARCH 2019 RETOTAL RESULTS’ இணைப்பினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்துக் கொள்ள லாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற் காலிக சான்றிதழ்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.nic.in இணையதளத்தில் மே 27-ம் தேதி மதியம் முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதேநேரம் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்த பட்டியலில் பதிவெண்கள் இடம்பெறாத மாணவர்களின் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||