கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி

மதுரை அரசு மருத்துவக் கல்லூ ரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத் துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந் துறையில் சாலைப் போக்கு வரத்து தொழிலாளர்களின் வாரிசு களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்நிலையில் கரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். இந்த புதிய கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்திருந்தது. இதேபோல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி கிடைத் தது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் கூடுதலாக கேட்கப்பட்டிருந்த 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||