ஆகஸ்ட் 10-ம் தேதி உதவி பொறியாளர் தேர்வு

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக் கான தேர்வு (உதவி பொறியாளர் தேர்வு) ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வருகிற 29-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. அன்றைய நாள் முதல் ஜூன் 28-ம் தேதி வரை இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர் வுக்கு பிஇ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தமிழ்வழியில் பொறியியல் படித்தவர் களுக்கு 20 சதவீத காலியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||