பொறியியல் படிப்புக்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் | விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31 | ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு .

தமிழகத்தில் உள்ள 539 பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர மாணவ-மாணவியர் மிகுந்த ஆர்வத்தோடு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். நேற்று மாலை 6 மணி நிலவரப் படி, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியி யல் மாணவர் சேர்க்கை செயலா ளர் புருசோத்தமன் தெரிவித்தார். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். ஏற்கெனவே தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 3-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு ஜூன் 17-ல் தரவரிசை வெளியிடப்பட்டு ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||