கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 27 வரை அவகாசம்

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 27 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. தட்டச்சர், சுருக் கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதலாவது கணினி தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைனில் (www.tndte.gov.in) விண்ணப்பிப்பதற்கு மே 22 கடைசி நாள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்துடன் தேவையான சான்றி தழ் நகல்கள் மற்றும் தேர்வுக்கட்ட ணத்துக்கான டிமாண்ட் டிராஃப்ட் இணைத்து மே 31-ம் தேதிக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாநில தொழில்நுட்பக் கல்வி கூடுதல் இயக்கு நர் (தேர்வுகள்) அறிவித்துள்ளார்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||