50 சதவீத வட்டாரக்கல்வி அதிகாரி பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.

50 சதவீத வட்டாரக்கல்வி அதிகாரி பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உத்தரவு  சென்னை அரசுப் பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள வட்டாரக்கல்வி அதிகாரிகளை 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்த் திருத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரியாக கடந்தாண்டு மாற்றப்பட்டது. இதையடுத்து வட்டாரக் கல்வி அதிகாரி பதவி பணியிடங்களில் 30 சதவீதம் நேரடி நியமனம் மூலமும், 70 சதவீதம் பதவி உயர்வு வகையிலும் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் வட்டாரக்கல்வி அதிகாரிகளை 50 சதவீதம் வரை நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறி வித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: நிர்வாக நலன் கருதி ஆசிரியர் தேர்வு வாரியத் தால் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கான விகிதத்தை சற்று உயர்த்தினால் நிர்வாகம் சிறப்பாக அமையும். எனவே, நிர்வாக நலன்கருதி ஆண்டுதோறும் வட்டார கல்வி அதிகாரி பணியில் ஜூன் முதல் தேதியில் ஏற்படும் காலியிடங்களில் 50 சதவீதம் வரை நேரடி நிய மனம் மூலம் நிரப்ப அரசு ஒப்பு தல் வழங்க வேண்டும் என தொடக் கக் கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார். 50 சதவீதம் பணிமாறுதல் இதை பரிசீலனை செய்து ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி வட்டார கல்வி அதிகாரி பணியிலுள்ள மொத்த காலியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமனம் மூலமும், இதர 50 சதவீத இடங்களை தகுதி யான அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை பணி மாறுதல் மூலமும் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||