இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு மாற்றம் தொடக்கக் கல்வித் துறை உத்தரவு 

தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கிவரும் 2,381 அங்கன்வாடி மையங் களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதுதவிர ஒன்றியங்களில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் களை மழலையர் வகுப்பு களுக்கு பாடம் நடத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு ஆசிரியர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சில ஆசிரியர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில் விசாரணை யின் முடிவில் அந்த வழக்கு களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, மழலை யர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்குவதுடன், தங்களால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||