பள்ளிகளில்  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பு கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம், தர்மபுரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், ஊட்டி, சேலம், ஈரோடு, விருதுநகர், கடலூர் ஆகிய 9 இடங்களில் அரசு செவிதிறன் குறைபாடு உடையோருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு அறிவிப்பு இப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான கணினி, தளவாட சாதனங்கள், இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ஒரு பள்ளிக்கு ரூ.5 லட்சம் என 9 பள்ளிகளுக்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உள்கட்டமைப்பு பணிகள் இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் வகுப்பு அமைப்பதற்கான உள்கட்ட மைப்பு பணிகள் பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப் பட்டன. ஸ்மார்ட் வகுப்புக்கு கணினி, புரொஜக்டர் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்யும் பணி அரசு நிறுவனமான எல்காட்டிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இப்பணிகள் அனைத் தும் முடியும் தருவாயில் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்து வரும் கல்வியாண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க மாற்றத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||