தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த  மாணவர்கள் வேறு பள்ளியில் சேரும்போது சலுகை பெறமுடியாமல் அவதி

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேரும்போது அச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகையைத் தொடர முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். மத்திய அரசால் கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதை தமிழகத்தில் செயல் படுத்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இச்சட் டத்தின் கீழ் 2013-14ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் உள்ள நுழைவு வகுப்பு களில் 25% இடங்களை நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்டோர் குழந்தை களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவினர் (சிறப்புப் பிரிவு), வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவினர் என 3 இனங்களில் சேர்க்கை நடத்தப் படுகிறது. அனைத்து பிரிவினரும் பிறப்பு மற்றும் முகவரிச் சான்றை சமர்ப் பிக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர், வருமானச் சான்றை கூடுதலாக சமர்ப் பிக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப் பட்டோர் (சிறப்பு பிரிவு) பிரிவின் கீழ், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளி, 3-ம் பாலினத்தினர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர், துப்புரவு தொழி லாளியின் குழந்தை ஆகியோர் அதற் கான முன்னுரிமைச் சான்றை அளிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் அல்லாத பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டோர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் வருகின்றனர். இவர்களுக்கு வருமான வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. அவர்கள் சாதிச் சான்றை மட்டும் கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 4,291 தனியார் பள்ளிகள் உள்ளன. அதில் 39 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவி யர் பயில்கின்றனர். நுழைவு வகுப்பு களில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற் பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டும். ஆனால் மொத்த இடங் களில் ஆண்டுதோறும் சுமார் 60,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. அம்மாணவர்களிடம் தனியார் பள்ளி கள் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அவர்களுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு செலுத்துகிறது. இந்தச் சலுகையை 8-ம் வகுப்பு வரை மட்டுமே பெற முடியும். இச்சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிப்பது, பள்ளிகளில் உள்ள கல்வி உரிமைச் சட்ட இடங்கள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு, கல்வித் துறைச் செயலராக த.உதய சந்திரன் இருந்தபோது, விண்ணப்பிக் கும் முறையை ஆன்லைனில் கொண்டு வந்தார். எந்தெந்த பள்ளியில் கல்வி உரிமைச் சட்ட இடங்கள் எத்தனை இருக்கின்றன என்பது குறித்த விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர் பலர் வேலைவாய்ப்புக்காக வெளியூருக்கு குடிபெயர்கின்றனர். சிலர் பள்ளிச் சூழல் சரியில்லை என்பதற்காக வேறு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். சில பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப் பட்டதாலேயே, அவர்களை மோசமாக நடத்துவதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவும் வேறு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. இதுபோன்ற மாணவர்கள், வேறு தனியார் பள்ளிகளில் சேரும்போது, கல்வி உரிமைச் சட்ட சலுகைகளைப் பெற தகுதியற்றவர்களாகின்றனர். வேறு பள்ளிகளில் சேர்ந்தாலும், சலுகை கள் தொடரும் வகையில் சட்டத்திலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை களிலும் எந்த அம்சங்களும் இடம் பெறவில்லை. இதனால் ஏழை மாண வர்கள் தனியார் பள்ளிகளில் இலவச கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் சட்டத்திலோ அல்லது தமிழக அரசின் விதிகளிலோ திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது ஏழை பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “இப்பிரச்சினை இப்போதுதான் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||