ஐசிஎப்-ல் தொழில் பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு அழைப்பு ரயில்வே வாரியம் உத்தரவு

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்தோருக்கு மட்டுமே ஐசிஎப்-ல் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், பொதுத் துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும், தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ரயில்வே தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. இதற்கிடையே, சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு கார்பென்டர், எலக்ட்ரிஷியன், பிட்டர், பெயிண்டர் உட்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 990 பயணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி பெற 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாகும். பயிற்சிக்கு ஏற்றவாறு ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையில் இருக்கும் இந்த பயிற்சி களைப் பெற வரும் ஜூன் 24-ம் தேதிக் குள் www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை இந்த பயிற்சிகளை பெற தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு மட்டுமே பெற முடியும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், பயிற்சி பெறும் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.5,700 முதல் ரூ.7,350 வரையில் உதவித் தொகை பெற முடியும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், தமிழக மாணவர்கள் பயன்பெற முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||