டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள்.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய போட்டித்தேர்வுகளுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சான்றிதழ் சரிபார்ப்பு 158 காலி பணியிடங்களுக்கான வனச்சரக அலுவலர் பதவிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுதியவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக 50 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 28-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரையிலான நாட்களில் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதேபோல முதுநிலை ரசாயனர் பதவிக்கான தேர்வு எழுதியோரில் (3.11.2018) 5 பேரும், கட்டிடக்கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் தேர்வு எழுதியோரில் (22.12.2018) 37 பேரும் ஜூன் 6-ந் தேதி நடக்கும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், சார்நிலை பணிக்கான உதவி பொறியாளர் தேர்வு எழுதியோரில் (2.3.2019) 199 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 31-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான நாட்களில் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். முதன்மை தேர்வுக்கு அழைப்பு மாவட்ட கல்வி அதிகாரிக்கான தேர்வு எழுதியோரில் (2.3.2019) 1,052 பேர் ஜூலை 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தொழில்-வணிகத்துறை ஆய்வாளர் மற்றும் பண்டக காப்பாளர் தேர்வு எழுதியோரில் (24.3.2019) முதற்கட்டமாக தேர்வான 20 பேர், 28-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரையிலான நாட்களில் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். பல்வேறு பணிகளில் நூலகர் பதவிக்கு நடந்த தேர்வில் (30.3.2019) முதற்கட்டமாக தேர்வான 60 பேர் 31-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான நாட்களில் இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். தொல்லியல் துறையில் அடங்கிய நூலகர் பதவிக்கு நடந்த தேர்வில் (31.3.2019) தேர்வான 3 பேருக்கு, 28-ந் தேதி முதல் ஜூன் 7-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. வேளாண்மை உதவி அதிகாரி தேர்வுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||