தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணி யில் தொடர அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக 2 வாரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரில் உள்ள கஸ் தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளி யில் ஆசிரியர்களாக பணியாற்றும் பி.இந்திரா காந்தி, கே.இந்திரா, சி.ஜோதி, எஸ்.கவிதா ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நாங்கள் இதுவரை ஆசிரியர் தகுதி்த்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்பதால், இந்த ஆண்டுக் கான (2019) ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகும் வரை எங்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என தமிழக அரசு கடந்த 2011-ல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 2012, 2013, 2014, 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற் போது இந்த ஆண்டும் (2019) தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஏற்கெனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிக் கொண் டிருக்கும் ஆசிரியர்கள், 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அவகாசம் வழங்கியது. தற் போது இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் கள் கோருவதை ஏற்க முடியாது. ஏற்கெனவே 60 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி கிடைக்காமல் காத்துக்கொண்டிருக் கின்றனர். இந்தச்சூழலில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத வர்கள், தொடர்ந்து ஆசிரியர்களாக பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக பலமுறை அவகாசம் வழங்கியும் அவர்களால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடிய வில்லை என்றால் அவர்கள் ஆசிரியர் பணிக்கே பொருத்தமற்ற வர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் மீது கருணை காட்ட முடியாது. ஆசிரியர்கள்தான் மாணவர் களின் முன்னோடி. அவர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சூழலில் அவர்களிடம் இருந்து தரமான கல்வியை எப்படி எதிர் பார்க்க முடியும்? ஒரு மாணவர் 10-ம் வகுப்பில் தோல்வியடைந்தால் அவருக்கு எப்படி 11-ம் வகுப்பில் சேர அனுமதி வழங்க முடியாதோ அதேபோல ஆசிரியர் தகுதித் தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணியில் தொடர அனுமதிக்க முடியாது. மருத்துவர்கள், வழக்கறிஞர் கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் அந்தந்த பணி களுக்கேற்ப குறைந்தபட்ச கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும். இதில் ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. சம்பளம் பிடித்தம் கூடாது எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களுக்குள் நோட்டீஸ் பிறப்பித்து, அவர்கள் பதிலளிக்க 10 நாள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற் கெனவே பணிபுரிந்த நாட்களுக்கான சம்பளத்தை அரசு நிறுத்திவைக் கக் கூடாது. சம்பளம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்பதால் 2 வாரத் தில் அதை வழங்க வேண்டும். இனிமேல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர் களாக நியமிக்கக் கூடாது. அதே போல மனுதாரர்களின் கோரிக்கை யையும் ஏற்க முடியாது என்பதால் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||