நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படுவதால்,  நீட் விண்ணப்பத்தில் மே 31 வரை திருத்தம் செய்ய அவகாசம் 

நீட் தேர்வு விண்ணப்பத்தில் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு ஆகியவற்றில் ஏதாவது திருத்தம் இருந்தால் வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் திருத்தம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - ‘நீட்’) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் விண்ணப்பித்திருந்தனர். இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்கள் உட்பட நாடுமுழுவதும் 147 நகரங்களில் 2,492 மையங்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வில் இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு விடைகள் பட்டியல் (கீ ஆன்சர்) மற்றும் விடைத்தாள் நகல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தில் தந்தை பெயர், தாய் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு ஆகியவற்றில் ஏதாவது திருத்தம் இருந்தால் https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தில் சென்று திருத்தம் செய்யலாம். வரும் 31-ம் தேதி மாலை 5 மணி வரை திருத்தம் செய்வதற்கான காலஅவகாசம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களும் உரிய சலுகைகளை பெறுவதற்காக தங்களுடைய பிரிவை மாற்றி திருத்தம் செய்ய லாம். ஒரே ஒரு முறை மட்டுமே இந்த திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் மாணவ, மாணவியர் மிகவும் கவனத்துடன் திருத்தம் செய்ய வேண்டும் என்று நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||