கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித் துள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத் திலும், இதர வகுப்புகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 முதல் அனைத்துப் பள்ளி களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், கோடை விடு முறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக் கல்வி இயக் ககத்திலிருந்து தகவல் அனுப்பப் பட்டிருப்பதாக ஊடகங்களில் கடந்த 22-ம் தேதி செய்திகள் வெளியாயின. ஆனால், இதுதொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்வி இயக்ககம், பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அறி வித்தது. கோடை வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போகும் என்று எதிர்பார்த்துக் கொண்டி ருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆவலை இந்த அறிவிப்பு மேலும் அதிகப் படுத்தியது. வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்பது போன்ற தகவல்கள் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியில் தொடர்ந்து பரவிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் நேற்று தனியார் தொலைக் காட்சியில் கூறும்போது, ‘‘திட்ட மிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வெயிலால் பள்ளி கள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்ற செய் திகள் உண்மை அல்ல. பள்ளி கள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை. ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். மாணவர்களின் நலன் கருதி.. இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் நேற்று அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளி களிலும் 2019-2020-ம் கல்வி ஆண் டில் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை முழுமையான அளவில் முடிக்க வேண்டியுள்ள தால் மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்பட வேண்டும். இந்த விவரத்தை தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரி விக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் சுற்றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||