பள்ளிக்கல்வி துறை அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம் வருகிற 3-ந் தேதி விருப்ப கலந்தாய்வு நடக்கிறது

கல்வித்துறை நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையில் வருகிற 30-ந் தேதியுடன் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு (இளநிலை உதவியாளர் முதல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வரை) அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி மாறுதல் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக மாற்றம் செய்யப்பட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. ஒரே அலுவலகத்தில் ஒரு பிரிவில் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றுவது, மாறுதலாக கருத இயலாது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீவிர உடல் நலிவுற்றவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்புரிமை அதிகாரத்தினை பயன்படுத்தி, அதன் அடிப்படையில் கலந்தாய்வில் முன்னுரிமை அளித்து, இதனால் பிற பணியாளர்கள் பாதிக்காதபடி தக்க ஆணை வழங்கலாம். மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) நாகராஜமுருகன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||