TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 24 கேள்விகளுக்கான பதில்கள் தவறு டிஎன்பிஎஸ்சி குளறுபடிகளுக்கு நீதிபதி கண்டனம் 

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகளுக்கான பதில்களில் தவறு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் சரியாக பதிலளிக்க கால அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி தரப் பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து இது போன்ற குளறுபடிகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என டிஎன்பிஎஸ்சிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, முதன்மைத் தேர்வுக்கு தடை கோரிய வழக் கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இத் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். மனித வள மேம்பாட்டு அதிகாரியாக தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நானும் இத்தேர்வை எழுதினேன். இத்தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியல் தேர்வு முடிந்த சில தினங்களில் வெளியிடப்பட்டது. கேட்கப்பட்டிருந்த 200 கேள்வி களில், 18 கேள்விகளுக்கான பதில் களில் தவறு இருந்ததால் நான் உட் பட பலர் அதைச் சுட்டிக்காட்டி திருத் திய விடைப்பட்டியலை வெளியிடக் கோரினோம். ஆனால் எங்களது கோரிக் கையை டிஎன்பிஎஸ்சி கண்டு கொள்ளாமல், முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை கடந்த ஏப்.3-ம் தேதி வெளியிட்டு விட்டது. மேலும் குரூப் 1 பிரதானத் தேர் வையும் வரும் ஜூலை மாதம் நடத் தவுள்ளது. எங்களது கோரிக் கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி திருத் திய விடைப்பட்டியலை வெளி யிட்டு இருந்தால் 175.5 மதிப்பெண் பெற்ற எனக்கு 195 மதிப்பெண் கிடைத்து இருக்கும். எனவே முதல்நிலைத் தேர்வுக் கான திருத்திய விடைப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை குரூப் 1 பிரதானத் தேர்வுக்கு தடை விதிக்கவும் வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் எஸ்.எஸ்.மாதவன் ஆஜ ராகி, ‘‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 18 கேள்விகளுக்கான பதில்களில் தவறு இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள் ளோம். அவ்வாறு சுட்டிக் காட்டப் பட்டால் உடனடியாக நிபுணர்கள் குழுவை அமைத்து அந்த கேள்வி களுக்கான சரியான பதில் எது என்பதை மீண்டும் திருத்திய விடைப் பட்டியலாக வெளியிட வேண்டும். ஆனால் டிஎன்பிஎஸ்சி நாங்கள் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை வெளி யிட்டுள்ளது’’ என்றார். அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன் மற்றும் வழக்கறிஞர் நிறைமதி ஆகியோர், “குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகளுக்கான விடை களில் தவறு இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர் பாக சரியாக பதிலளிக்க கால அவகாசம் தேவை” என்றனர். அதையடுத்து நீதிபதி, ‘‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் ஐஏஎஸ் தேர்வுக்கு இணையாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வு, இளைஞர்களின் கனவாக உள்ளது. இதுபோன்ற முக்கியமான தேர்வுகளில் குளறு படிகள் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தவறுகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப் பட்ட பிறகும் எந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி, முடிவுகளை வெளி யிட்டுள்ளது” என கண்டனம் தெரி வித்தார். மேலும் குரூப் 1 பிரதானத் தேர்வுக்கு தடை கோரிய மனுவுக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17-க்கு தள்ளிவைத்தார்.


Comments