10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் அறிவிப்பு பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு காலஅட்டவணை 4 நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ‘புதுமை ஆசிரியர்‘ விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 523 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'புதுமை ஆசிரி யர்' விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கியபின் பள்ளிகல்வித் துறை அமைச் சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுதவிர மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு தொடுதிரை கணினி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் புத்தகங்கள் இல்லாமல் க்யூஆர் கோடு மற்றும் பிடிஎப் வடிவில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியைக் கொண்டுவர உள்ளோம். திறன் மேம்பாடு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் கண்ணப்பன், ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர் சுடலை கண்ணன் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||