‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் சான்றிதழை 10-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மாதம் (ஜூன்) 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்தது. இந்த நிலையில் நுழைவுத்தேர்வு முடிவு www.annauniv.edu/tancet2019 என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும், அதே இணையதளத்தில் வருகிற 10-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ‘டான்செட்’ செயலாளர் கே.எஸ்.ஈஸ்வரகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||