எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ் 10-ந் தேதி முதல் வினியோகம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி வெளியானது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மார்ச்-2019 எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கு வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. National Testing Agency will conduct JEE Mains twice in a year in the month of January and April 2020. Through JEE Mains 2020 students will get admission in NITs, IIITs, IITs and many other government-funded technical institute. The notification for JEE Mains 2020 will release in the month of September 2019. JEE Mains is also screening test for JEE Advanced exam. Only those candidate will be eligible to take part in JEE Advanced exam who clears cut off marks of the JEE Mains 2020.

    ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||