எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை கொண்டு மாணவர்கள் பள்ளியிலேயே இன்று முதல் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

2019-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் இன்று (புதன்கிழமை) வழங்கப்பட உள்ளதை அடுத்து, இன்று முதல் 24-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செய்துள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments