வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல்: ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில் மாற்றம் அரசாணை வெளியீடு

வேலூர் தொகுதி தேர்தல் நடத்தை விதிகள் தற்போது நடை முறையில் இருப்பதால், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரின் கருத்துகளை ஏற்று அதன் அடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ்உள்ள பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 8-ந்தேதி முதல் நடைபெறுவதாக இருந்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வினை வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவடைந்து, தேர்தல் நடத்தைவிதிகள் முடிவிற்கு வந்தபின், காலாண்டு தேர்வு விடுமுறையில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் வேலூர் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின், பணிநிரவல் கலந்தாய்வினை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான அனைத்து கலந்தாய்வுகளை வேலூர் மாவட்டத்தில் ஒத்திவைத்தும், ஏனைய பிற மாவட்டங்களுக்கு வட்டாரக்கல்வி அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) தவிர, ஏனைய பொதுமாறுதல் கலந்தாய்வுகள், இணையதள வழி பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவற்றை நடத்திட அனுமதி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||