TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவிப் பேராசிரியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 . விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.

  • TRB RECRUITMENT 2019 | TRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவிப் பேராசிரியர் . 
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.
  • இணைய முகவரி : http://www.trb.tn.nic.in
2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பணி: Assistant Professors
காலியிடங்கள்: 2,340
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. BBM - 01
2. Bio-Chemistry - 18
3. Bio-Diversity - 04
4. Biological Science (Education) - 01
5. Bio-Technology - 03
6. Botany - 89
7. Business Administration - 01
8. Chemistry - 188
9. Commerce 102 4 106
10. Commerce (ComputerApplication) - 15
11. Commerce (E.Com) - 03
12. Commerce (International Business) - 13
13. Computer Application - 55 + 2
14. Computer Science - 137
15. Computer Technology - 01
16. Co-operation - 12
17. Corporate Secretaryship - 25
18. Defence Studies - 11
19. Economics - 92
20. Education (Education) - 28
21. Electronics - 26
22. Electronics and Communication - 04
23. Electronics and communication system - 06
24. English - 309
25. Environmental Science - 01
26. Fashion Technology - 01
27. Food and Nutrition - 04
28. Food Processing - 04
29. Food Science and Dietetics - 02
30. Food Science and Nutrition -04
31. Food Service Management and Dietetics - 05
32. Geography - 68
33. Geology - 21
34. Hindi - 04
35. Historical Studies -04
36. History - 67
37. History (Education) - 01
38. Home Science - 31
39. Human Resource Development - 01
40. Human Rights - 04
41. Indian Culture - 02
42 Indian Culture and Tourism - 01
43. Information Technology - 10
44. International Business - 04
45. Journalism and Mass Communication - 11
46. Malayalam -01
47. Marine Biology - 02
48. Mathematics - 192
49. Micro Biology - 19
50. MS-Information Technology - 02
51. Music - 02
52. Nano Technology - 06
53. Nutrition and Dietetics - 23
54. Physical Science (Education) - 03
55. Physics - 150
56. Plant Biology and Plant Bio-Technology - 32
57. Plant Bio-Technology - 06
58. Political Science - 29
59. Psychology - 13
60. Public Administration - 05
61. Sanskrit - 05
62. Social Work - 15
63. Sociology - 03
64. Statistics - 56
65. Tamil - 231 + 1
66. Telugu - 03
67. Tourism - 04
68. Tourism Administration - 04
69. Tourism and Travel Management - 02
70. Urdu - 03
71. Visual Communication - 21
72. Wild Life Biology - 07
73. Zoology - 100

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவீத மதிப்பெண்களுடன் NET, SLET, SET, SLST, CSIR தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மதிப்பெண் சலுகைகள் விவரம்: ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், முனைவர் பட்டம் பெற்றிருந்தால் 9 மதிப்பெண், M.Phil உடன் SLET, NET,SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், முதுகலை பட்டத்துடன் SLET, NET, SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள்.

நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற லிங்கிகை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2019

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006 பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 316 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 243 பேர் மற்றும் ஆண்கள் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தேர்வர்கள் 26.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.



TNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006. பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு 08.06.2017 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 20.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 551 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 410 பேர் மற்றும் ஆண்கள் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்படவுள்ளது. அதனைத் தேர்வர்கள் 22.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.



1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்

ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இன்னும் 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

தகுதி தேர்வு முடிவு வெளியீடு

அதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினார்கள்.

தேர்வு முடிவும், தேர்வுக்கான விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நேற்று மாலை வெளியானது. இதனைத் தொடர்ந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய ஆசிரியர் தகுதி இரண்டாம் தாள் தேர்வு முடிவும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

கலந்தாய்வு

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து சென்னை அடையாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ? அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை.

அதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.


காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 2-ம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இக்குழும இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்குரிய தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org எனும் இணைய தளத்தில் தமது பயனர் அடையாள எண் (யூசர் ஐடி) மற்றும் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டை) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உரிய செலுத்துசீட்டு பெற்றிருந்தும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உதவி மைய தொலைபேசி எண்கள் 044-40016200 மற்றும் 9789035725-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்