காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 2-ம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இக்குழும இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்குரிய தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org எனும் இணைய தளத்தில் தமது பயனர் அடையாள எண் (யூசர் ஐடி) மற்றும் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டை) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உரிய செலுத்துசீட்டு பெற்றிருந்தும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உதவி மைய தொலைபேசி எண்கள் 044-40016200 மற்றும் 9789035725-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||