புத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்

புத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

பிறக்கப்போகிற புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன.

இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும்.

இன்றைய அவசரமான உலகத்தில் எல்லாவற்றையும் சுருக்கமாகத்தான் நாம் சொல்ல வேண்டியதிருக்கிறது.

உதாரணமாக 1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவது மரபாகவும் பின்பற்றப்படுகிறது.

சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. ஏனென்றால் 20-க்கு பின்னர் வசதிக்கேற்பவோ, தேவைக்கேற்பவோ (முறைகேடாக) 01 முதல் 19 வரை சேர்த்து விட முடியும், இதனால் ஆவண தேதி 20-ம் வருடம் என்பதை 2001-ம் வருடம் முதல் 2019-ம் வருடம் வரை மாற்றி விட முடியும்.

எனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என முன்ஜாக்கிரதை உணர்வுடன் எழுதி பழகி விடுங்கள். இது பிரச்சினை வருவதற்கு முன்னரே தடுக்க உதவும்.

இதே போன்று எந்தவொரு ஆவணத்தையும் நீங்கள் வாங்கும்போதும் சரி 2020 என முழுமையாக ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குவது நல்லது.

ஏனென்றால் நாளை அந்த ஆவணத்தை உங்களுக்கு எழுதித்தந்தவரே கூட 20 என நான் கொடுத்தேன், முறைகேடாக பின்னர் 2 இலக்கங்களை சேர்த்து வருடத்தை திருத்தி விட்டார் என குற்றம் சாட்ட முடியும்.

எனவே ஆவணங்களை எழுதிக்கொடுத்தாலும் சரி, எழுதி வாங்கினாலும் சரி இந்த ஆண்டு முழுவதும் 2020 என முழுமையாக குறிப்பிட்டு பழகுங்கள். கையெழுத்து போட்டு தேதியை குறிப்பிடுகிறபோதும் இதை பின்பற்றுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், சிறந்தது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.

ஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப் படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘டான்செட்’ தேர்வுக்கு ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.இ., எம்பிஏ உள்ளிட்ட முது நிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு ஜனவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

2020-ம் ஆண்டுக்கான...

இந்த நிலையில், 2020-ம் ஆண் டுக்கான டான்செட் தேர்வு அறி விப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதி, எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

https://www.annauniv.edu இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 7 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.

தேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.300 செலுத்தினால் போதும். கல்லூரிகளில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.

அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் ‘டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து ‘டெட்' தேர்ச்சி பெறா தவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ‘டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.

எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது.

அதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற் கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

மறுபுறம் தங்கள் வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலையில்லா நாடாக மாறும் இந்தியா 2020-ல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் தகவல்

தற்போது நிலவி வரும் பொரு ளாதார மந்தநிலையால் அடுத்த ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ள னர். இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத னால் தொழில் நிறுவனங்கள் கடும் இழப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் அவை ஊழியர் களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. தவிர, ஊழியர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்கள் வரும் ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2019 முடிந்து 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளது. ஆனால் வரப் போகிற புதிய ஆண்டில் வேலை வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நிறு வனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதி லாக, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களின் திறனை உயர்த்தும் முயற்சியில் இறங்க இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, வேலையில் இருப்பவர் களுக்கும் 2020-ல் ஊதிய உயர்வு பெரிதளவில் மேற்கொள்ளப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘2020-ல் முதலீடுகளும், நுகர் வும் அதிகரிக்கும்பட்சத்தில் வேலை வாய்ப்பு சற்று உயர வாய்ப்பு உள்ளது. பதிலாக, தற்போது நிலவும் மந்தநிலை தொடர்ந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக சாத்தியமில்லை’ என்று இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டில் முதல் காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிசைன் திங்கிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டோமேசன் (ஆபிஏ) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்து திறன் கொண்ட நபர்களே நிறுவனங்களுக்குத் தேவையாக இருக்கின்றனர். இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலையால் பல்வேறு நிறுவனங் களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத் துறை சார்ந்த பிரிவில் 3.5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் வேலை இழந் துள்ளனர். அதேபோல் ஐடி நிறு வனங்கள் பெரிய அளவில் ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற் கொள்ள இருப்பதாக அறிவித்துள் ளன. தற்போது வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களைப்போல ஆசிரியர்களுக்கும் சுயமதிப்பீடு தேர்வு கற்பித்தலில் பின்தங்கியவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு 

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் தொடர்பாக சுயமதிப்பீடு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,358 அரசுப்பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றில் சுமார் 2.25 லட் சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரு கிறது. அந்தவகையில் ஆசிரியர் களின் கற்பித்தல் திறன்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப அவர்களை வகைப்பிரித்து சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களை திறம்பட உருவாக்கும் நோக்கத்தில் பாடத்திட்டம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை கற்பிக்க ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எனினும், சில ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தி கொள்வதில் சிரமம் இருப்பது தெரியவந்தது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களின் தேர்ச் சிக்கு அரசு முக்கியத்துவம் தருவ தால் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணி களில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது.

அதேநேரம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவதால், கணிசமான ஆசிரியர்கள் முறை யாக தங்கள் பணியை செய்வ தில்லை என புகார்கள் வந்தன. மேலும், கட்டாய தேர்ச்சியின் மூலம் 9-ம் வகுப்புக்கு வந்துவிடும் மாணவர்களில் பலர் அடிப்படை கற்றல் திறன்கூட இல்லாமல் இருக்கின்றனர். இதை தவிர்க்கவே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சுயமதிப்பீடு செய்து வகைப்பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கடந்த ஆண்டு கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்) ‘பெர்பாமன்ஸ் இண்டி கேட்டர்’ என்ற பிரிவு கூடுதலாக உருவாக்கப்பட்டது. அதில் தற் போது சில மாற்றங்கள் மேற் கொண்டு 8 விதமான சுயமதிப்பீடு தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தற்போது மதிப்பீடு தேர்வை எமிஸ் இணையதளம் வழியாக எழுதி வருகின்றனர்.

இந்த தேர்வில் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடம் தொடர் பான தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் பாடம் நடத் தும் விதம், வகுப்பறையில் பயன் படுத்தும் கற்றல் உபகரணங்கள், கற்றலில் பின்தங்கிய குழந்தை களை மேம்படுத்த திட்டமிடல், புதிய கற்பித்தல் வழிமுறைகள், குழந்தைகளின் தனித்திறன் கண்டறி தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த கேள்விகள் இருக்கும். இதற்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதில் களை பொறுத்து மதிப்பீடு அளிக் கப்படும்.

அதற்கேற்ப ஆசிரியர்களை வகைப்பிரித்து, குறைந்த மதிப்பீடு கள் பெறுபவர்களுக்கு கற்பித்தல் திறன்களை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். மதிப்பீட் டின்போது தலைமை ஆசிரியர் களின் கருத்துருகளும் கேட்கப் படும். மேலும், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வின் போதும் ஆசிரியர்களின் இந்த சுயமதிப்பீடு பரிசீலனை செய்யப்படும். தொடர் பயிற்சி வழங்கியும் ஆசிரியர்களின் திறன் மேம்படாதபட்சத்தில் தேவை இருப்பின் அவர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்கும் மாற்றப்படுவார் கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகளை மட்டும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பணியில் விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகளை மட்டும் ஈடுபடுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்க ளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங் களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடை பெற உள்ளன. இத்தேர்தல் பணி யில் மொத்தம் 4 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள னர். அவர்களுக்கான தேர்தல் பயிற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன.

இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணி யன் கடந்த 9-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘‘ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற் காக நடைபெற உள்ள உள் ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரி யர்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நியமிக்கப் படும் தேர்தல் பணியாளர்களில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் பணி யிலிருந்து விலக்கு அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்'’ என்று கூறப்பட் டிருந்தது.

இந்நிலையில், மாற்றுத் திற னாளிகள் விரும்பினால் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண் டும் என்று மாநில தேர்தல் ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன் உத்தர விட்டுள்ளார். அவர் நேற்று முன் தினம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

அனைத்து அரசுப் பணி மாற் றுத் திறனாளிகள் நலச்சங்கம், விருப்பமுள்ள மாற்றுத் திறனாளி களை மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், விருப் பம் இல்லாத மாற்றுத் திறனாளி களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் இந்த ஆணையத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகளின் திறன் மற்றும் விருப்ப அடிப்படையில் மட்டுமே அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய மாற்றத்தின்படி அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் பிபிஎஃப் கணக்கில் பெறும் கடன் தொகைக்கு 1 சதவீதம் வட்டி குறைப்பு

அஞ்சலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தப் படும் வைப்புத் தொகையை அவர் கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தொடர் வைப்பு, கால வைப்பு, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ், அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் 2.8 கோடி அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்ட லத்தைப் பொறுத்தவரை 58 லட்சம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இந்நிலையில், இந்த சேமிப்புத் திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய நிதித் துறை அமைச் சகம், கடந்த 12-ம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. முதலாவதாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், செலுத்தப்படும் பணத்தை ஓர் ஆண்டு வரை திரும்ப எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. இது மூத்தக் குடிமக்களுக்கு அசவு கரியமாக இருந்து வந்தது. குறிப் பாக, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு அவர் களால் தங்களுடைய சொந்தப் பணத்தை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தில் தற்போது கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். முன்புபோல் ஓர் ஆண்டு முடியும்வரை காத்திருக்கத் தேவையில்லை. அதேபோல், இக் கணக்கை எப்போது வேண்டுமானா லும் முடித்துக் கொள்ளலாம். அதே சமயம், இவ்வாறு முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது, அதற் கான வட்டி வழங்குவதில் பழைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப் படும்.

இதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியில் வாங்கும் கடன் தொகையை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் 2 சத வீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக் குத் தொடங்கும் போது முன்பு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என இருந்தது. அது தற்போது ரூ.250 ஆக குறைக்கப்பட்டது. அந்த 250 ரூபாயையும் முன்பு முழுமையாக செலுத்த வேண்டும் என இருந் தது. அது தற்போது, ரூ.50 என்ற அளவில் வருடத்துக்கு 5 முறை யாக ரூ.250 செலுத்தலாம். தொடர் வைப்பு கணக்கில் (ஆர்.டி.) முன்பு ரூ.10 கூட செலுத்தலாம் என்றிருந் தது. தற்போது ரூ.100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகையாக முன்பு ரூ.50 செலுத்த வேண்டும் என இருந்தது. அது தற்போது ரூ.500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப் புத் தொகையான 500 ரூபாயை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.100 பிடித்தம் செய்யப்படும். தற்போது ரூ.500-க்கு குறைவாக இருப்பு வைத்துள்ள சேமிப்புக் கணக்குகள் ஓராண்டுக்குள் ரூ.500 இருப்புத் தொகை பராமரிக்கும் கணக்குகளாக மாற்றப்படும். அதே போல், சேமிப்புக் கணக்குகளில் முன்பு ரூ.5, ரூ.10 என குறை வான தொகையை கூட எடுக்க லாம் என்றிருந்தது. இனிமேல், 50 ரூபாய்க்கு குறைவான தொகையை எடுக்க முடியாது.

சேமிப்புக் கணக்குகளை பரா மரிப்பதற்கான செலவை ஈடுகட்ட இந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி சேமிப்புக் கணக்குகளை ஒப்பிடும்போது, இந்த இருப்புத் தொகை குறைவாகும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகையாக முன்பு ரூ.50 செலுத்த வேண்டும் என இருந்தது. அது தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC -MCD - DATE FOR ONLINE UPLOAD OF ORIGINAL CERTIFICATES FOR THE POSTS OF DRUG INSPECTOR AND JUNIOR ANALYST

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
PRESS RELEASE

The candidates who have been admitted provisionally to the Certificate Verification for the posts of  Drugs Inspector and Junior Analyst in the Drugs Testing Laboratory (phase III) in the Tamilnadu Medical Subordinate Service are directed to upload  the  scanned original documents for the certificate verification from 23.12.2019 to 31.12.2019, only through listed E-SEVA centres run by TACTV as mentioned in the Commission Memorandum  to the candidates hosted in the Commission’s website.  If any of the candidate does not upload  the document for certificate verification on  the above mentioned dates ,it will be construed that he/she is not interested to take part in the selection process and further chance will not be given to him/her and his/her application will not be considered for the above said post.  The publication list, memo for Certificate Verification are available in the Commission’s website www.tnpsc.gov.in. Controller of Examinations, TNPSC.TNPSC - ORAL TEST FOR COMBINED ENGINEERING SERVICES EXAMINATION AND ASSISTANT TRAINING OFFICER

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணிகளுக்கான – உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவிகளின் 13 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை  19.04.2019  அன்று வெளியிடப்பட்டு 22.06.2019 அன்று 349 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) பதவியானது சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு,, தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வாகும் மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவியானது தேர்வாணையத்தால் முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்வாகும். இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் 19.12.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன.  இதுபோன்று, அரிய பதவிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் இருப்பினும் முக்கியத் தேர்வுகளுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இதுபோன்ற தேர்வுகளுக்கும் அளிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 38 விண்ணப்பதார்ரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை 31.01.2020 அன்று நடைபெறவுள்ளது.  இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும், 10.08.2019 மு.ப & பி.ப மற்றும் 25.08.2019 மு.ப & பி.ப (உதகையில் மட்டும்) ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 1,487 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி நேர்முகத் தேர்வு 03.01.2020 முதல் 28.01.2020 வரை [05.01.2020, 11.01.2020 முதல் 19.01.2020 வரை மற்றும் 26.01.2020 இத்தேதிகளை தவிர்த்து] நடைபெறவுள்ளது. இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.  அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.


TNPSC ANNUAL PLANNER 2019 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. | DOWNLOAD

TNPSC ANNUAL PLANNER 2019 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. | DOWNLOAD


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘நாட்டமறி’ திறன் தேர்வு ஜன. 2-வது வாரம் நடைபெறும்  மாதிரி வினாத்தாள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘நாட்டமறித் தேர்வு’ ஜனவரி 2-வது வாரத்தில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்த, பள்ளிகள் அளவில் ‘நாட்டமறித் தேர்வு’ நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டன. அதன் விவரம்:

அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான மாதிரி வினாத்தாள் கள் தமிழ்நாடு ஆசிரியர் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிலுள்ள 90 வினாக்களுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி மாணவர்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் ஜனவரி முதல் வாரத்தில் மாணவர்களுக்கு முன்மாதிரித் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வில் 90 வினாக் கள் கேட்கப்படும். அதற்கு மாணவர்கள் 90 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து ஜனவரி 2-வது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும், 4-ம் வாரத்தில் 9-ம் வகுப்புக்கும் நாட்டமறி இறுதி தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்படும்.

எனவே, மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுது வதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப் பட்ட தலைமை ஆசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேர்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண் டும். முதன்மைக் கல்வி அதி காரிகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்வை நல்ல முறை யில் நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.இந்தத் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு மாணவர்கள் 90 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.


ஆசிரியர், காப்பாளர்கள் உட்பட  ஆதிதிராவிடர் பள்ளியில் 1,776 காலி பணியிடம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரி யர், காப்பாளர் பணியிடங்கள் 4 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,135 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற் றில் 92,756 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொருளா தாரத்தில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்ப தால் கல்வி உதவித் தொகை, கட்ட ணச் சலுகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி வரை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இதற்கிடையே, தமிழகம் முழு வதும் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி களில் அரசு நிர்ணயித்துள்ள மாண வர் சேர்க்கையின்படி அனைத்து வகை ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணியில் 7,659 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் 5,883 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். தலை மையாசிரியர் பதவியில் 205, முதுநிலை ஆசிரியர் 132, பட்டதாரி ஆசிரியர் 436, இடைநிலை ஆசிரி யர் 584, காப்பாளர்கள் 321, இதர ஆசிரியர்கள் 98 என மொத்தம் 1,776 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாகவே நிரப்பப் படாமல் இருக்கிறது. இதனால் கூடுதல் பணிச் சுமையால் பெரி தும் சிரமப்பட வேண்டியுள்ளது.

காலியாக உள்ள தலைமை யாசிரியர் பதவியை பொறுப்பு ஆசிரியர் மூலம் கவனித்து வரு வதால் நிர்வாக ரீதியாக முடிவுகள் எடுப்பதிலும் அரசின் நிதியை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. பாடத்திட்ட பயிற்சியும் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. கற்பித்தல் தவிர இதர அலுவல் பணிகளையும் கவனிக்க வேண்டி உள்ளது.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தி யிலும் மாணவர்களை பொதுத்தேர் வுக்கு தயார்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால், தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். அரையாண்டுத் தேர்வுக்கு முன் பிளஸ் 2 பாடத் திட்டத்தை முடிக்க வேண்டும். ஆனால், முதுநிலை ஆசிரியர் இல் லாததால் பட்டதாரி ஆசிரியர் களைக் கொண்டு அவசர கோலத் தில் பாடம் நடத்துகிறோம்.

அரசுப் பள்ளியில் தேவைக் கேற்ப தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அதற் கான நிதியை அரசு வழங்கிவிடும். ஆனால், நலத்துறை பள்ளிகள் சொந்த நிதியில் தற்காலிக ஆசிரி யர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். போதுமான பயிற்சி இல்லாத காரணத்தால்தான் கடந் தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர் வில் மிகக் குறைவாக 78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி குறைவதால் பெற்றோர் வேறுபள்ளிகளை நாடிச்செல் கின்றனர். இதை தவிர்க்க காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்.சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான பொதுத் தேர்வு நடக்கிறது.

அதைத் தொடர்ந்து, இயற்பியல், கணிதம், கணக்கு பதிவியல், வேதியியல், தாவரவியல் ஆகிய முக்கிய பாடங்களுக்கான தேர்வு 30-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகளின்போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும்.10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல்| 1.30 மணி வரை நடக்கும்.

அதேபோல், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப் படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் இலவச மடிக்கணினி கிடைக்காமல் பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் பல்வேறு விதிமுறை களை புகுத்தியுள்ளதால், பிளஸ் 2 மாண வர்களுக்கு மடிக்கணினி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களை போட்டித் தேர்வு களுக்கு தயார்படுத்திக் கொள்ளவும், தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து, போட்டி நிறைந்த, கணினி சார்ந்த வேலை வாய்ப்புச் சந்தையில் வேலைவாய்ப்பை பெறுவதற்காகவும் இந்த திட்டம் தொடங் கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் சார்பில், ‘எல்காட்’ நிறுவனம் மூலம் மடிக்கணினிகள் கொள் முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங் கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அறிமுகப்படுத்திய இந்த திட்டம், மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இளைய தலை முறை வாக்காளர்கள் அதிமுகவின் வாக்கு வங்கியாக மாற இந்த திட்டம் பெரும் உதவி செய்தது.

2011-12 முதல் 2016-17-ம் ஆண்டு வரை ரூ.5,490.75 கோடி செலவில் 37 லட்சம் மடிக் கணினிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள்கூட அரசின் மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பள்ளியில் சேரும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திட்டம், அடுத்தடுத்த ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக, சுருங்கி வருவது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2017 முதல் நிதி ஒதுக்கீடு குறைப்பு, நீதிமன்ற வழக்கு நிலுவை உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் மடிக்கணினி வழங்குவது வெகுவாக குறைந்துள்ளது. 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை 15.53 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்க ரூ.1,362 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. பிளஸ் 2 படிக்கும் மாணவருக்கு இலவச மடிக்கணினி உறுதி என்ற திட்டத்தின் ஆரம்ப நோக்கம் சிதைக்கப்பட்டு, தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், பிளஸ் 2-க்குப் பின்னர் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளுடன் சமீபத்தில் அரசாணை வெளியாகியுள்ளது.

இதன்படி தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள 15 லட்சத்து 53 ஆயிரத்து 359 மடிக்கணினிகளை வழங்குவதில், 2019-20-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அடுத் ததாக பிளஸ் 1 மாணவர்களுக்கும், மூன்றாவ தாக 2018-19-ம் ஆண்டு பிளஸ் 2 மாண வர்களுக்கும், நான்காவதாக 2017-18-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால், ஏழ்மை காரணமாக, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல், தொலை நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உள் ளிட்ட பலருக்கும் மடிக்கணினி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்து உயர்கல்வி படிப்பவர்களில் யாருக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதில் எவ்வித தெளிவும் இல்லாத நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் விருப்பம்போல் விதிமுறைகளை வகுத்து மாணவர்களை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால், ஏறக்குறைய தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் இலவச மடிக்கணினி கோரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஈரோடு போன்ற நகரங்களில் மாணவர்கள் மீது தடியடி என்ற நிலை வரை சென்றுள்ளது. இலவச மடிக்கணினி வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, தேவையற்ற கெடுபிடி காட்டாமல், பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் வகையில் முதல் வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர், முன்வைக்கும் கோரிக்கையாகும்.


2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை இந்த வாரம் வெளியீடு

அடுத்த ஆண்டு தமிழக அரசு துறைகளில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என் னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப் பதற்கு உதவியாக இருக்கிறது.

இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலி இடங்களின் எண்ணிக்கை இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: 2020-ம் ஆண்டுக்கான வரு டாந்திர தேர்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தேர்வுக் கான அறிவிக்கை வெளியிடப் படும் காலம், தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம். காலி யிடங்களின் எண்ணிக்கை குறிப் பிட்ட தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாலும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.


இந்திய வேளாண்மைஆராய்ச்சிக் கழக விருதுகள் 2019 விண்ணப்பிக்க அழைப்பு .

இந்திய வேளாண்மைஆராய்ச்சிக் கழக விருதுகள் 2019 விண்ணப்பிக்க அழைப்பு .


பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம்: ஆசிரியர் குழு அமைப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 பாடநூல்களில் திருத்தம் மேற் கொள்ள ஆசிரியர் குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள சமச்சீர்கல்வி பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டுள்ளது. 2018 - 19-ஆம் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும், நிகழ் கல்வி ஆண்டில் சில வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தப் பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மிகவும் குறுகிய காலத்தில் இது தயாரிக்கப்பட்டதால் இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாக தயாரிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல் கட்டமாக பொதுத் தேர்வுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை மட்டும் திருத்தம் செய்யவும் சில பாடங்களை நீக்கவும் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா மேற்பார்வையில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஆய்வு செய்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆசிரியர் குழுவினருக்கு இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை பாடவாரியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.


பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிவு தேர்வு  ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் 

தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப்பள்ளிகளில் 5, 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அறி வியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் மூலம் கணித திறனறிவு தேர்வு ஜனவரி 5-ம் தேதி நடத்தப் பட உள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதற்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனவே, திற னறி தேர்வில் பங்கேற்க விருப்ப முள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து கட்ட ணத் தொகையுடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்ப டைக்க வேண்டும். இதற்கான வழி காட்டுதல்களை ஆசிரியர்களுக்கு முதன்மை அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும்.


5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வால் தனியார் பள்ளி மாணவர்கள்  அரசு பாட புத்தகங்களை படிக்க வேண்டிய நிர்பந்தம் 

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறி விப்பால் இதுவரை படிக்காத அரசு பாட புத்தகங்களை முழுமை யாக படிக்க வேண்டிய கட்டாயம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளி யிட்டு இருந்தால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்காது என தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 5-ம் வகுப்புக்கு ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதி வரையும், 8-ம் வகுப்புக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித் தனியே பாடப்புத்தகங்கள் வழங் கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படு கின்றன. ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முப்பருவத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப் படும் என தேர்வுத் துறை தெரி வித்துள்ளது. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் தற்போது தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்புகளைத் தவிர இதர பிரிவுகளுக்கு அரசு பாடப்புத்தகங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை. தமிழ் தவிர ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய இதர பாடங்களுக்கு சிபிஎஸ்இ, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பிற பாடத்திட்ட புத்தகங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

ஒருசில பாடங்கள் மட்டுமே அரசின் புத்தகங்கள் வழியாக நடத்தப்படும். மேலும், மாணவர் களுக்கான தேர்வுகளும் பிரத்யே கமாக வினாத்தாள்கள் தயாரிக் கப்பட்டு நடத்தப்படுகின்றன.

தற்போது 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பால் முப் பருவ பாட புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து கடந்த 2 பருவத்தின் பாடங்களையும் விரைவாக நடத்தி முடிக்க பள்ளி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதனால் அரசு பாடப்புத்தகங் களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அவசர, அவசர மாக பாடங்களை நடத்திவரு கிறோம். அரையாண்டுத் தேர்வு தொடங்கியதால் விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை வைத்து பாடத்திட்டத்தை முடிக்க கணிச மான பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.

மறுபுறம் கல்வித் துறையின் புதிய பாடத்திட்டம் கடினமாகவும், அதிகமாகவும் இருக்கிறது. போது மான அவகாசம் இல்லாததால் மேலோட்டமாகவே பாடங்களை கற்பிக்கிறோம். இதனால் மாணவர் கள் பாடங்களை புரிந்துக் கொள் வதில் பெரிதும் சிரமம் அடைகின் றனர். பொதுத்தேர்வு குறித்த அச்சமும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், குறுகிய காலத்தில் முப்பருவ புத்தகங்களையும் படிப் பது குழந்தைகளுக்கு சுமையாகி மனரீதியான பாதிப்புகளை உரு வாக்கும். எனவே, நடப்பு ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகள் பயன் படுத்தும் பாட புத்தகங்களில் இருந்து வினாத்தாள்களை வடி வமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தலைவர் நந்தக்குமார் கூறியதாவது:

தமிழக அரசின் கடந்தகால பாட புத்தகங்கள் சிறப்பானதாக இல்லை. இதனால் மாணவர்களை திறம்பட உருவாக்கும் வகையில் தனியார் பள்ளிகள் வேறு பதிப் பக பாட புத்தகங்களை பயன்படுத் துகின்றன. இவற்றில் கணிசமான புத்தகங்களுக்கு தமிழக அரசின் அங்கீகாரமும் இருக்கிறது. அந்தப் புத்தகங்கள் வழியாக பாடங்களை போதித்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

தற்போது அரசின் புதிய பாடத் திட்டம் சிறந்தமுறையில் இருந்தா லும், புத்தகங்கள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. இதனால் தனி யார் பள்ளிகள் வழக்கம்போல பிற பதிப்பக புத்தகங்களை வாங்கு கின்றனர். கல்வி ஆண்டு தொடக் கத்திலேயே பொதுத்தேர்வு அறி விப்பை தமிழக அரசு வெளியிட்டு இருந்தால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்காது. எனவே, மாணவர் கள் நலன்கருதி பொதுத்தேர்வை அடுத்த கல்வி ஆண்டு முதல் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அகில இந்திய போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள்

அகில இந்தியப் போட்டித் தோ்வுகளுக்கான அரிய நூல்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய, மாநில அளவிலான போட்டித் தோ்வெழுதும் மாணவா்கள், தமிழ்வழி மாணவா்கள், அரசியல், வரலாறு, இயற்பியல் என பல துறைகளில் உள்ளவா்களுக்கு துறை ரீதியிலான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. இவா்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் வெளியான துறைசாா் வல்லுநா்களின் அரிய புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை.

இந்தக் குறையைப் போக்குவதற்கான முயற்சியை தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்காக கடந்த1962- ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் வெளியான புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சாா்பில் 2018-ஆம் ஆண்டு முதல் நவீன முறையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது.

40 துறைகள் சாா்ந்த 635 நூல்கள்: இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரிகள் கூறியது: இதுவரை அடிப்படைத் திண்மநிலை இயற்பியல் (ச.சம்பத்து), எக்ஸ் கதிா்களும் படிகவியலும் (சி.உ.பிள்ளை), அணுக்கருவியல் (இரா.சபேசன்), குவாண்டம் இயந்திரவியல் தொடக்கப் படிகள் (வி.ரைட்னிக்), பன்னாட்டு அரசியல்-முதல் பாகம் (ஃபிரெட்ரிக் எல்.ஷுமன்), அரசியல் தத்துவம் (முத்துராமன்), செல் உயிரியலின் அண்மைக்கால வளா்ச்சி (வே.சா.தாசரதி), உயிரிப் பரிணாமம் (கோ.ஜெயராஜ் பாண்டியன்), இந்தியக் கல்வியில் சிறப்புப் பிரச்னைகள் (கொ.ஆ.செல்லையா), தமிழ்நாட்டின் கனிம வளம் (ச.சரவணன்), தோல் வியாதிகள் (ஏ.எஸ்.தம்பையா), தொழிற்புரட்சி (அ.பாண்டுரங்கன்), நம்மைச் சுற்றியுள்ள பேரண்டம் (சா்.ஜேம்ஸ் ஜீன்ஸ்), பிரிட்டன் வரலாறு (ந.சுதா்சன பாபு), இந்தியப் பொருளாதாரம் (ஜி.பி.ஜாதா்), பொருளியல் (எஸ்.சபாநாயகம்), பன்னாட்டுப் பொருளியல் (எம்.பாலசுப்பிரமணியம்), செல்லியல் என்.ராமலிங்கம், மரபியல் பயிா்ப் பெருக்கம் (தி.ஸ்ரீகணேசன்) ஆகியவை உள்பட 40 துறைகள் சாா்ந்த 536 நூல்கள் மறுபதிப்பாக வெளியாகியுள்ளன.


சென்னை புத்தகக் காட்சி அரங்கில்...: இந்த நூல்கள் ஆண்டுதோறும் பபாசி அமைப்பின் சாா்பில் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் அமைக்கப்படும் அரங்கிலும், டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் நேரடியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நூல்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால் மேலும் 99 நூல்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக 635 நூல்கள் வரும் ஜன.9-ஆம் தேதி நடைபெறவுள்ள புத்தகக் காட்சி விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

அதேவேளையில், அகில இந்திய நுழைவுத்தோ்வுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு வகுப்புகளுக்கும் தலா மூன்று தொகுதிகள் வீதம் மொத்தம் ஆறு தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பொதுத்தோ்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், விடைகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே மறுமதிப்பு செய்யப்பட்ட 635 நூல்கள், வினா வங்கி நூல்கள் ஆகியவை நீட் தோ்வு, ஜேஇஇ, ஐஏஎஸ், ஐபிஎஸ் என அகில இந்தியப் போட்டித் தோ்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாடநூல் கழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து நூல்களும் குறைவான விலையே நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்-மின்னஞ்சல் முகவரி: இந்த நூல்களைப் பெற விரும்பினால் சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வழங்கப்படும் நூல் பெயா்ப் பட்டியலைப் பெற்று தங்களுக்கு விருப்பமான நூல்களை தோ்வு செய்து ஆா்டா் செய்யலாம். மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தை 044-25275851, 28278244, 7395800415, 7395800416 ஆகிய தொலைபேசி எண்களிலும், s‌e​c.‌t‌n‌t​b@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பபாசி புத்தகக் காட்சி அரங்கில் கீழடி ஆய்வறிக்கை குறித்த நூல் விற்பனை செய்யப்படவுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: தமிழா் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழா்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனா் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழா்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சோ்த்திருக்கிறது. இது தொடா்பான ஆய்வறிக்கை ‘கீழடி, வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்’”என்ற தலைப்பில் தமிழக தொல்லியல் துறையின் சாா்பில் கடந்த செப்.20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முக்கியமான வரலாற்றுச் சான்றாக விளங்கும் இந்த ஆய்வறிக்கை தமிழக தொல்லியல் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகியவை இணைந்து தற்போது நூலாக உருவாக்கியுள்ளது. இந்த நூல் சென்னை புத்தகக் காட்சியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். 75 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ரூ.50-க்கு கிடைக்கும். இந்த ஆய்வறிக்கையில் நான்காம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களின் புகைப்படங்கள், விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த ஆய்வறிக்கை நூல் அச்சிடப்பட்டுள்ளது என்றனா்.


வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 192 பட்டப்படிப்புகள் தகுதியானவை அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 97 வட்டாரக்கல்வி அலுவலர் (பி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் 27-ந்தேதி வெளியிட்டது. வட்டாரக்கல்வி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 192 வகையான பட்டப்படிப்புகள் தகுதியானவை என்று தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின் படி, வெவ்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 18 வகையான படிப்புகள் தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின் படி, வெவ்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 174 வகையான பட்டப்படிப்புகள் தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக கற்றுத்தரப்படும் 96 வகையான பட்டப்படிப்புகளுக்கு, காலத்தின் தேவை கருதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடர்புடைய 96 வகையான பட்டப்படிப்புகள் ஒன்றுக்கொன்று இணையானவை என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் மற்றும் 2019-ல் தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளை மேற்கோள்காட்டி, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்ற தகுதியான நபர்கள், வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மாணவர்கள் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் அமல்படுத்த திட்டம்

பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவை குறுஞ்செய்தி வாயிலாக பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்கள் அனைத்தும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்த இணையதளத்தில்தான் மாணவர்களின் வருகை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தனியாக வருகைப்பதிவேடு பின்பற்றினாலும், இந்த இணையதளத்தில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை கட்டாயமாக்கி இருக்கிறது.

இந்தநிலையில், தமிழக கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதியை கல்வித்துறை இணையதளத்தில் கொண்டு வந்தது.

அதற்காக மாணவர்களின் பெற்றோருடைய செல்போன் எண்ணை கல்வித்துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் இணையதளத்தில் ஆசிரியர்கள் பெற்று பதிவேற்றம் செய்யவும், அது அவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணா? என்பதையும் சரிபார்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாணவர்களின் பெற்றோருடைய செல்போன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் அந்த பணியை நிறைவு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முன்னோட்டமாக சில பள்ளிகளில் சோதனை முயற்சி செய்ததில் அது சிறப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கல்வித்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு, வகுப்பறைக்கு வந்தாலும், வராவிட்டாலும் குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும்.


போட்டித்தேர்வு மூலம் 32 மாவட்ட நீதிபதிகள் விரைவில் நேரடியாக தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாவட்ட நீதிபதி பதவியில் 32 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத்தேர்வு மார்ச் மாதத்திலும், அதைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு ஜூன் 2-வது வாரத்திலும், வாய்மொழித்தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படும்.

மாவட்ட நீதிபதி பதவிக்கு இளங்கலை சட்டம் (பி.எல்.) படித் திருக்க வேண்டும். 2009-2010-ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் சட்டம் படிப்பை முடித்தவராக இருந்தால் பார் கவுன்சில் நடத்திய அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தமிழ் நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநில பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டும். வழக்கறிஞர் பணியில் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதோடு தற்போது வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு பொதுப் பிரிவின ருக்கும், பிசி, எம்பிசி பிரிவினருக் கும் 35 முதல் 45 வரை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 35 முதல் 48 வரை. உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in அல்லது www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜனவரி 8-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்கள்...

தமிழ்வழியில் படித்தவர் களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 காலியிடங்களில் 6 இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்வித்தகுதியான இளங்கலை சட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.


போட்டித்தேர்வு மூலம் 32 மாவட்ட நீதிபதிகள் விரைவில் நேரடியாக தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாவட்ட நீதிபதி பதவியில் 32 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத்தேர்வு மார்ச் மாதத்திலும், அதைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு ஜூன் 2-வது வாரத்திலும், வாய்மொழித்தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படும்.

மாவட்ட நீதிபதி பதவிக்கு இளங்கலை சட்டம் (பி.எல்.) படித் திருக்க வேண்டும். 2009-2010-ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் சட்டம் படிப்பை முடித்தவராக இருந்தால் பார் கவுன்சில் நடத்திய அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தமிழ் நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநில பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டும். வழக்கறிஞர் பணியில் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதோடு தற்போது வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு பொதுப் பிரிவின ருக்கும், பிசி, எம்பிசி பிரிவினருக் கும் 35 முதல் 45 வரை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 35 முதல் 48 வரை. உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in அல்லது www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜனவரி 8-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்கள்...

தமிழ்வழியில் படித்தவர் களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 காலியிடங்களில் 6 இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்வித்தகுதியான இளங்கலை சட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.


ஜனவரி முதல் மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சார்பில் மண்டலவாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் ஜனவரி முதல் நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் 82 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இவற்றில் 34,027 மாண வர்கள் படிக்கின்றனர். இதற் கிடையே திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்தது.

அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் டிவிஎஸ், எஸ்பிஐ வங்கி உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங் கேற்றன. 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மண்டலவாரியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறிய தாவது:

திறந்தநிலை பல்கலைக்கழ கத்தில் வழங்கப்படும் 82 முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதி யானவைகள்தான். தேசிய அளவில் தமிழகம்தான் அதிக அளவிலான தொலைநிலை, திறந்தநிலை படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அனுமதி பெற்றுள்ளது. அதனால்தான் நடப்பு கல்வி ஆண்டில் 16,873 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

பல்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னை, மதுரை, திருச்சி உட்பட 7 மண் டல மையங்களில் ஜனவரி முதல் பல்வேறு முன்னணி நிறுவனங் களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் (http://www.tnou.ac.in) முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதேநேரம் பிற பல்கலைக்கழ கங்களில் படித்த மாணவர்களும் முன்பதிவு செய்து முகாமில் பங் கேற்கலாம். ஆனால், திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த முகாம்கள் வழியாக 3 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதுதவிர தற்போது படித்துவரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘கூட்டிணைவு மையம்’ அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


ஜனவரி முதல் மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சார்பில் மண்டலவாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் ஜனவரி முதல் நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் 82 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இவற்றில் 34,027 மாண வர்கள் படிக்கின்றனர். இதற் கிடையே திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்தது.

அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் டிவிஎஸ், எஸ்பிஐ வங்கி உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங் கேற்றன. 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மண்டலவாரியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறிய தாவது:

திறந்தநிலை பல்கலைக்கழ கத்தில் வழங்கப்படும் 82 முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதி யானவைகள்தான். தேசிய அளவில் தமிழகம்தான் அதிக அளவிலான தொலைநிலை, திறந்தநிலை படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அனுமதி பெற்றுள்ளது. அதனால்தான் நடப்பு கல்வி ஆண்டில் 16,873 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

பல்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னை, மதுரை, திருச்சி உட்பட 7 மண் டல மையங்களில் ஜனவரி முதல் பல்வேறு முன்னணி நிறுவனங் களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் (http://www.tnou.ac.in) முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதேநேரம் பிற பல்கலைக்கழ கங்களில் படித்த மாணவர்களும் முன்பதிவு செய்து முகாமில் பங் கேற்கலாம். ஆனால், திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த முகாம்கள் வழியாக 3 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதுதவிர தற்போது படித்துவரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘கூட்டிணைவு மையம்’ அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


2 ஆண்டு டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது கல்வித் துறை உத்தரவால் பிளஸ்-2 முடித்தோர் அதிருப்தி

இரண்டு ஆண்டு டிப்ளமோ படிக் கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது என கல்வித் துறை உத்தரவிட்டதால் 2017-18, 2018-19-ல் பிளஸ்-2 முடித்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு 2011 முதல் இலவச மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் மறைந்ததில் இருந்து இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. இதனால் 2017-18, 2018-19-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து முதற்கட்டமாக 2018-19-ம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2017-18-ம் கல்வி ஆண்டில் படித்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவர்கள் உயர் கல்வி பயின்றால் மட்டுமே பெற முடியும். அதிலும் 2 ஆண்டுகள் பயிலும் டிப்ளமோ படிப்புகளுக்கு வழங்கக் கூடாது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, கல்லூரிகளில் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி படிப்பதற் கான சான்று பெற்ற பிறகே மடிக்கணினி வழங்க வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 முடித்த பலருக்கு மடிக்கணினி கிடைக்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது: தற்போது பிளஸ் 1, பிளஸ்-2 பயில்வோருக்கு மடிக்கணினி வழங்கிவிட்டனர். ஆனால் 2017-18, 2018-19-ல் முடித்தோருக்கு தற்போதுதான் வழங்குகின்றனர். அதை பெறுவ தற்கு கல்லூரியில் படிப்பதற்கான சான்று கேட்கின்றனர். அதிலும் 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப் போருக்கும், அஞ்சல்வழியில் பட்டப்படிப்பு படிப்போருக்கும் மடிக்கணினி இல்லை என்கின்றனர். எங்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுகின்றனர், என்று கூறினர்.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்போ ருக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உயர்கல்வியில் படிப்பதற்கான சான்று பெற்று மடிக்கணினி வழங்கி வருகிறோம்.

இதற்கிடையே மற்றவர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கும் மடிக்கணினி கேட்டு கடிதம் அனுப்பி யுள்ளோம்’ என்று கூறினார்.


2 ஆண்டு டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது கல்வித் துறை உத்தரவால் பிளஸ்-2 முடித்தோர் அதிருப்தி

இரண்டு ஆண்டு டிப்ளமோ படிக் கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது என கல்வித் துறை உத்தரவிட்டதால் 2017-18, 2018-19-ல் பிளஸ்-2 முடித்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு 2011 முதல் இலவச மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் மறைந்ததில் இருந்து இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. இதனால் 2017-18, 2018-19-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து முதற்கட்டமாக 2018-19-ம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2017-18-ம் கல்வி ஆண்டில் படித்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவர்கள் உயர் கல்வி பயின்றால் மட்டுமே பெற முடியும். அதிலும் 2 ஆண்டுகள் பயிலும் டிப்ளமோ படிப்புகளுக்கு வழங்கக் கூடாது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, கல்லூரிகளில் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி படிப்பதற் கான சான்று பெற்ற பிறகே மடிக்கணினி வழங்க வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 முடித்த பலருக்கு மடிக்கணினி கிடைக்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது: தற்போது பிளஸ் 1, பிளஸ்-2 பயில்வோருக்கு மடிக்கணினி வழங்கிவிட்டனர். ஆனால் 2017-18, 2018-19-ல் முடித்தோருக்கு தற்போதுதான் வழங்குகின்றனர். அதை பெறுவ தற்கு கல்லூரியில் படிப்பதற்கான சான்று கேட்கின்றனர். அதிலும் 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப் போருக்கும், அஞ்சல்வழியில் பட்டப்படிப்பு படிப்போருக்கும் மடிக்கணினி இல்லை என்கின்றனர். எங்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுகின்றனர், என்று கூறினர்.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்போ ருக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உயர்கல்வியில் படிப்பதற்கான சான்று பெற்று மடிக்கணினி வழங்கி வருகிறோம்.

இதற்கிடையே மற்றவர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கும் மடிக்கணினி கேட்டு கடிதம் அனுப்பி யுள்ளோம்’ என்று கூறினார்.


பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம்

இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பிஎட் தேர்ச்சி பெற்றவர் கள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி களில் கணித ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளைப் போல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களும் பி.எட் படிக்க 2015-16-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக மொத்தமுள்ள பி.எட் இடங்களில் பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக் கப்பட்டன. அதன்படி பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின்கீழ் பி.எட் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் தின்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘டெட்‘) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனைத்துவிதப் பள்ளி களிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘டெட்’ தேர்வின் போது பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்கள் தேர்வு எழுத அனு மதிக்கப்படாததால், அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது.

இதனால் பி.எட் படிப்பு களில் சேர பொறியியல் பட்டதாரி கள் ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் ‘டெட்’ தேர்வு எழுத உயர்கல்வித் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட் முடித்து பின்னர் ‘டெட்’ தேர்வை எழுதி பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரிய ராகப் பணிபுரியலாம் என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் பி.எட் படிப்புகளில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து அரசாணையில் விளக்கம் தரப்படவில்லை.

இதனால் அந்த பாடப் பிரிவுகளில் பி.எட் படிப்பவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த விவகாரத் தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்ய தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர்11 முதல் 20-ம் தேதி வரை தேர்வுத்துறையின் சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் வரும் மார்ச் மற்றும் ஜூன் பருவத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாக கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்களையும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது, தகுதிகள் மற்றும் அறிவுரைகளையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும்அரசு தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். சேவை மையங்களில் டிசம்பர் 11 (புதன்) முதல் 20-ம்தேதி (வெள்ளி) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சிபிஎஸ்இ-யில் பிளஸ்-1 முடித்தவர்கள் மாநில பாட திட்டத்தில் பிளஸ்-2 எழுதலாமா? விதிமுறைகளை விளக்கி அரசாணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவர் கள், பிளஸ்-2 பொதுத்தேர்வை மாநில பாடத்திட்டத்தில் எழுத அனுமதிப்பதற்கான விதிமுறை களை விளக்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட் டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது:

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடந்த அக்டோபர் 29, நவம்பர் 26 ஆகிய தேதிகளில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

‘தமிழக பாடத்திட்டம், சிபிஎஸ்இ, வேறு மாநில பாடத் திட்டம் ஆகியவற்றில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற 12 மாணவர்கள் குடும்பச் சூழல், பெற்றோர் பணியிட மாறுதல் போன்ற காரணங்களால் பிளஸ்-2 படிப்பை அதே பாடத்திட்டத்தில் தொடர முடியாமல், தமிழக மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

அவர்களை பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போது நடத்தப்படும் பிளஸ்-1 பொதுத் தேர்வை எழுதுமாறு கூறினால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு ஆளாவார்கள் என்பதால், அவர்களது நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வை மட்டும் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

இதையடுத்து, இதை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி பிளஸ்-1 பொதுத்தேர்வை மீண்டும் எழுதுவ தில் இருந்து விலக்கு அளித்து, விதிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர்களுக்கு தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது.

இவர்கள் சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்-2 பயின்று வரும் நிலை யில், பிளஸ்-1 பயின்ற பாடத் தொகுப்புக்கு இணையான பாடத் தொகுப்பில் நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதலாம்.

2017-18 கல்வியாண்டுக்கு முன்பு தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அதே பாடத்தொகுப்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதலாம். இந்த மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரடி தனித் தேர்வர்களாக மேல்நிலை தேர்வு எழுதுபவர்கள், பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய பிறகே பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனித் தேர்வர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

மேலும், வருங்காலங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வாக எழு தாமல் சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டம் சார்ந்த பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ்- 2 கல்வியை தொடர பள்ளிகளில் அனுமதிக்கும் முன்பு கண்டிப்பாக பள்ளிக் கல்வி இயக்ககத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


TNPSC - GROUP-I MAIN WRITTEN EXAM RESULT PUBLISHED

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்திக் குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளுள், ஆறு தேர்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமார் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர்.அவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (தொகுதி – 1 பணிகள்) பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 01.01.2019 அன்று வெளியிடப்பட்டது.  03.03.2019 அன்று 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும், 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தேதிகளில் 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

தற்பொழுது, தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்காக அறிவிக்கப்பட்ட 181 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதிக காலிப்பணியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரர்கள் எழுதிய தொகுதி 1 தேர்வு இதுவாகும். அதிகப்படியான  விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்திற்குள் (அதாவது நான்கரை மாதங்களில்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் எந்த மாநில தேர்வாணையமும் இவ்வளவு விரைவாக எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அரிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக)  நடைபெறவுள்ளது.  இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

வரும் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எனினும், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏதேனும் விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய இரு தினங்களில் நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே தேர்வாணையத்தை அணுகி, நேர்காணல் தேதியினை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.இனிவருங்காலங்களிலும், இதுபோன்ற தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும்.தொகுதி-1-ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கு பின்வரும் நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும்.

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு
ஏப்ரல் மாதம்                 – முதனிலைத் தேர்வு
மே மாதம்                   – முதனிலைத் தேர்வு முடிவுகள்
ஜுலை மாதம்                – முதன்மை எழுத்துத் தேர்வு
நவம்பர் மாதம்               - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு
டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)  – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

இதுதவிர, தொகுதி-2 மற்றும் தொகுதி-4 – ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக வருடந்தோறும் நடத்தப்படும். தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கான நிலையான கால அட்டவணையைப் போலவே மேற்படி தேர்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.


410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்

தமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் 410 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டில் (2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கும் போது, பழைய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.