ஆசிரியர், காப்பாளர்கள் உட்பட  ஆதிதிராவிடர் பள்ளியில் 1,776 காலி பணியிடம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரி யர், காப்பாளர் பணியிடங்கள் 4 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,135 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற் றில் 92,756 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொருளா தாரத்தில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்ப தால் கல்வி உதவித் தொகை, கட்ட ணச் சலுகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி வரை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இதற்கிடையே, தமிழகம் முழு வதும் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி களில் அரசு நிர்ணயித்துள்ள மாண வர் சேர்க்கையின்படி அனைத்து வகை ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணியில் 7,659 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் 5,883 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். தலை மையாசிரியர் பதவியில் 205, முதுநிலை ஆசிரியர் 132, பட்டதாரி ஆசிரியர் 436, இடைநிலை ஆசிரி யர் 584, காப்பாளர்கள் 321, இதர ஆசிரியர்கள் 98 என மொத்தம் 1,776 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாகவே நிரப்பப் படாமல் இருக்கிறது. இதனால் கூடுதல் பணிச் சுமையால் பெரி தும் சிரமப்பட வேண்டியுள்ளது.

காலியாக உள்ள தலைமை யாசிரியர் பதவியை பொறுப்பு ஆசிரியர் மூலம் கவனித்து வரு வதால் நிர்வாக ரீதியாக முடிவுகள் எடுப்பதிலும் அரசின் நிதியை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. பாடத்திட்ட பயிற்சியும் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. கற்பித்தல் தவிர இதர அலுவல் பணிகளையும் கவனிக்க வேண்டி உள்ளது.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தி யிலும் மாணவர்களை பொதுத்தேர் வுக்கு தயார்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால், தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். அரையாண்டுத் தேர்வுக்கு முன் பிளஸ் 2 பாடத் திட்டத்தை முடிக்க வேண்டும். ஆனால், முதுநிலை ஆசிரியர் இல் லாததால் பட்டதாரி ஆசிரியர் களைக் கொண்டு அவசர கோலத் தில் பாடம் நடத்துகிறோம்.

அரசுப் பள்ளியில் தேவைக் கேற்ப தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அதற் கான நிதியை அரசு வழங்கிவிடும். ஆனால், நலத்துறை பள்ளிகள் சொந்த நிதியில் தற்காலிக ஆசிரி யர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். போதுமான பயிற்சி இல்லாத காரணத்தால்தான் கடந் தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர் வில் மிகக் குறைவாக 78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி குறைவதால் பெற்றோர் வேறுபள்ளிகளை நாடிச்செல் கின்றனர். இதை தவிர்க்க காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||