அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா சியை குறைக்க நடவடிக்கை எடுக்காமலிருப்பது, எரிகிற வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் என்பதுபோல் இந்த பேரிடர்காலத்தில் சுங்க கட்டணத்தை உயர்த்தியது என அரசு ஊழியர் மற்றும் மக் கள் விரோத நடவடிக்கைகளை இந்த அரசானது தொடர்ந்து கொண்டியிருக்கிறது.

இத்தகைய மக்கள் விரோதமற்றும் அரசு ஊழி யர் விரோத போக்கை மத்திய அரசு உடனடி யாக கைவிடவேண்டும். பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அர சுஊழியர்களின் பஞ்சபடி நிறுத்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உண்மையை உரத்த குரலில் ஒலித்தமைக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||