‘ஐ.பி.பி.எஸ். கிளார்க்’ தேர்வு: இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ‘ஐ.பி.பி.எஸ். கிளார்க்’ தேர்விற்கு 2 ஆயிரத்து 557 பணி காலியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இணையவழி பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி முதல் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், https://docs.google.com/forms/d/e/1FAlpQLSf3grltKXXh-bX9zPswcJ58ChvW1Wnsm8e05hqngiQdNSOQUg/viewform link என்ற இணைப்பின் மூலமாக பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||