சர்வ சிக்ஷா அபியான் புதிய மாநிலத் திட்ட இயக்குராக பூஜா குல்கர்னி அவர்களையும் , தமிழ்நாடு பாடநூல் கழக புதிய மேலாண் இயக்குராக மகேஸ்வரன் அவர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வ சிக்ஷா அபியான்  புதிய மாநிலத் திட்ட இயக்குராக பூஜா குல்கர்னி  அவர்களையும் , தமிழ்நாடு பாடநூல் கழக புதிய  மேலாண் இயக்குராக மகேஸ்வரன் அவர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன. இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கீ ஆன்சர் இணைய தளத்தில் 26.8.13 திங்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளில் 5566 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு மூலம் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்களை தேர்வு செய்கிறது.

இந்த தேர்வு எழுத கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. என்பதால் 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பெருமளவில் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு 25.8.2013 காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக 4 ஆயிரத்து 755 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தேர்வை 70,230 கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். இது தவிர 950 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

இவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர், ஆர்.டி.ஓ. தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் தேர்வு மையங்களை சோதனையிட்டனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தவறு நடக்கும் அபாயம் நிறைந்த தொலை தூர தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவது வெப்– காமிரா மூலம் ஆன்– லைனில் கண்காணித்தனர். சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் மற்றும் அந்த அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை களில் இருந்து கண்காணித்தனர்.

மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்கு 1 1/2 மார்க் வீதம் 300 மார்குக்கு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் வேலை உறுதி. காரணம் நேர்முக தேர்வு கிடையாது.

‘கீ ஆன்சர்’ இன்னும் ஓரிரு நாளில் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், "வாபஸ்' பெறப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டிருந்தார். இவரின் பணியிட மாறுதலும் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து, டி.ஆர்.பி.,யில் பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வர்மா மற்றும் உமா இருவரும், டி.ஆர்.பி.,யில் நல்ல அனுபவம் பெற்றிருப்பதால், அவர்களை, தொடர்ந்து டி.ஆர்.பி., பணியில் பயன்படுத்திக் கொள்வதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ராமராஜ், தற்போது, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 17, 18–ந் தேதிகளில் நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி உள்ளனர்.

தகுதித்தேர்வுக்கான ’கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு தனியார் இணையதளங்கள் தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர்–ஐ வெளியிட்டு உள்ளன. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் அதைப் பார்த்து தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்கு போட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ கீ ஆன்சர் படிதான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால் மதிப்பெண்ணை துல்லியமாக அறிந்துகொள்ள ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.


கடந்த தகுதித்தேர்வில் 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 8,849 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். 10,397 பேர் இடைநிலை ஆசிரியர்கள். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலி இடங்கள் அதிகமாக இருந்ததால் அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே வேலை கிடைத்துவிட்டது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியில் காலி இடங்கள் குறைவாக இருந்ததால் தேர்ச்சி பெற்ற எல்லாருக்கும் வேலைகிடைக்கவில்லை.

தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 சதவீதம்பேர் தேர்ச்சி பெறுவார்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்) என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்தான். இதில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும், ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களும் அடங்கும்.

தற்போதைய நடைமுறையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறையிலும் (தகுதித்தேர்வு, பிளஸ்–2, டிகிரி, பி.எட். என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்படும்) நியமிக்கப்படுவார்கள். எனவே, குறிப்பிட்ட பாடத்தில் காலி இடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும்.

அதேநேரத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதிக பதிவுமூப்பு உடையவர்களுக்கும் (இடைநிலை ஆசிரியர்கள்), கட் ஆப் மதிப்பெண் அதிகம் பெறுவோருக்கும் மட்டுமே வேலை கிடைக்கும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதித்தேர்வு முடிவை செப்டம்பர் மாதம் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையிலும் (இடைநிலை ஆசிரியர் நியமனம்), அதிக கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

14 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணியை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் காலி பணி இடங்களையும் சேர்த்து நிரப்ப அரசு முடிவு செய்தால் கூடுதலான ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு இணையதளத்திலும் பார்க்கலாம்

தொழில்நுட்பக்கல்வித்துறை சார்பில் கணிணி சான்றிதழ் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்திலும் (www.tndte.com) தேர்வு முடிவை பார்க்கலாம்.

தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இந்த தகவலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் பெறப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து வகையான ஆசிரியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் 27-ந் தேதி இறுதிசெய்யப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதி சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

யுஜிசி நெட் தேர்வு | ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chemical Sciences. Earth, Atmospheric, Ocean & Planetary Sciences, Physical Sciences. Engineering Sciences ஆகியவை தேர்வுக்கான பாடப்பிரிவுகளாகும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிஎஸ்ஐஆர்-ன் மனிதவள மேம்பாட்டு குழுவின் இணையதளமான www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் வழியான ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தலின் போது கிடைக்கப்பெறும் செல்லான் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் வழியாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவத்துடன் தகுந்த சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 22ம் தகுதித்தேதி தேர்வு நடைபெற உள்ளது.

Sr. Controller of Examinations. Examination Unit, HRDG, CSIR Comples, Opp. Institute of Hotel Management, Library Avenue, Pusa, New Delhi - 110 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
::Advertisement No.: 13D::Exam Date: 22-12-2013

::Date of Start for Online Submission: 30-07-2013::Date of Close of Online Submission: 30-08-2013 

::Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms:04-09-2013::Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms(From Remote Areas):10-09-2013

::Age will be calculated as on: 01-07-2013

கோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. பி.எட்., தேர்வு முடிவுகளை அறிய www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

திருவண்ணாமலையில் ரூ.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.திருவண்ணாமலையில் ரூ.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் தற்போது 18 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் படிப்படியாக தொடங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை ஆகும்.

அதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க 25 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, ரூ.73 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) விதிகளின்படி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான நிர்வாக கட்டிடம், தொழில்முறை பணியாளர்கள் கூடம், மாணவர்கள் தங்கும் விடுதி, நூலகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மருத்துவக்கல்லூரிக்கு தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு 192 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களை சேர்க்க எம்.சி.ஐ. அனுமதி வழங்கியது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,145 மருத்துவ இடங்கள் இருந்தன. தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கான 100 இடங்கள் உட்பட, 410 கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 2,555–ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் 73 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்து  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன், தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

New Declaration form for SSLC,PLUS TWO | நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, முதற்கட்டமாக சில கூடுதல் விவரங்கள் உள்ளடக்கிய புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form) தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, முதற்கட்டமாக சில கூடுதல் விவரங்கள் உள்ளடக்கிய புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form)  தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.பெயர்ப்பட்டியலே (Nominal Roll)  மாணாக்கரின் பிழையில்லாத மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கான மூல ஆவணம் என்பதால், மாணாக்கரிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட உறுதி மொழிப் படிவத்தில் எந்தவித தவறுகளும் ஏற்படக்கூடாது. இப்பணியினை 26.08.2013 அன்று தொடங்கி 07.09.2013-க்குள் நிறைவு செய்தல் வேண்டும்.  

இதன்பொருட்டு, மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் பிற்பகல் மணி 4.00 முதல் 5.00க்குள் மாணாக்கரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, உறுதிமொழிப் படிவங்களைப் பூர்த்தி செய்து பள்ளி மாணாக்கரின் கையெழுத்தினையும், பெற்றோரின் கையெழுத்தினையும் பெறுதல் வேண்டும். உறுதிமொழிப் படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்கள்  சரியானவை என பெற்றோரால் உறுதி செய்யப்பட வேண்டுமெனவும், அதில் தவறுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவரின் மதிப்பெண் சான்றிதழிலும் அதே தவறுகள் ஏற்படும் எனவும், அதன் காரணமாக மாணாக்கரின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள தேவையற்ற அலைச்சலும் பண விரயமும் ஏற்படும் எனவும் பெற்றோர்களுக்கு  தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாணவரின் உறுதிமொழிப் படிவத்திலும், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும், பள்ளித் தலைமையாசிரியரும் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதனை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துகொண்டு உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.  பெயர்ப்பட்டியலும் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களும்,  உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் இப்பணியை தலைமையாசிரியர் தனது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் ஆற்ற வேண்டும்.  இதன் பின்னர் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.  இதற்கு பின்னரும் மாணாக்கரின் விவரங்களில் தவறுகள் ஏதும் நேரிடின் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதுடன் தலைமையாசிரியர் மீது துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் மார்ச் / ஏப்ரல் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்லைனில் பதிவு செய்தல் தொடர்புடைய  இணையதள முகவரி,User ID, Password ஆகிய விவரங்கள் மற்றும் கால அவகாசம் இம்மாத இறுதிக்குள் தெரிவிக்கப்படும். எனவே, உறுதிமொழிப் படிவங்களை ஒவ்வொரு பள்ளியும் 07.09.2013-க்குள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.தேர்வரின் அண்மையில் எடுக்கப்பட்ட Stamp Size புகைப்படத்தினை உறுதிமொழிப் படிவத்தின் வலது மேல் புறத்தில் ஒட்டப்படவேண்டும். உறுதி மொழிப் படிவத்தில் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரி பார்த்து உறுதி செய்தபின்னர், உறுதி மொழிப் படிவத்தில் தேர்வர், பெற்றோர், வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் அனைத்தும் உறுதிமொழிப் படிவம் பூர்த்தி செய்வதற்கு மட்டுமே. பெயர்ப்பட்டியலை ஆன்-லைன் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் (uploading) செய்வது தொடர்பான அறிவுரைகள் விரைவில் தனியே தெரிவிக்கப்படும்.

Latest PayRoll Software - 9.1 now available.

KALVISOLAI DOWNLOAD

       SCHOOL CALENDER - 2013-2014
  புதிய வரவு
 1. TNTET JUNE 2012 OCTOBER 2012 | LIST OF SELECTED CANDIDATES FOR PAPER I AND PAPER II | BOARD DETAILS | CANDIDATE'S INSTRUCTION | CERTIFICATE VERIFICATION FORM | IDENTIFICATION CERTIFICATE DOWNLOAD

 2. TNTET WEIGHTAGE CALCULATOR

 3. SCHOOL INSPECTION FORMAT

 4. SCHOOL CALENDER - 2013-2014 | SCHOOLS DIARY- 2013-2014 | கல்விச்சோலை ஆசிரியர் கையேடு 2013-2014

 5. EXAMINATIONS
 6. SSLC DECLARATION INSTRUCTIONS IN TAMIL FOR ALL TYPES OF SCHOOLS - 2013-2014

 7. SSLC DECLARATION FORM FOR TAMIL MEDIUM SCHOOLS - 2013-2014

 8. SSLC DECLARATION FORM FOR ENGLISH MEDIUM SCHOOLS - 2013-2014

 9. PLUS TWO DECLARATION INSTRUCTIONS IN TAMIL FOR ALL TYPES OF SCHOOLS - 2013-2014

 10. PLUS TWO DECLARATION FORM FOR TAMIL MEDIUM SCHOOLS - 2013-2014

 11. PLUS TWO DECLARATION FORM FOR ENGLISH MEDIUM SCHOOLS - 2013-2014

 12. PAY ROLL
 13. PAY ROLL 9.1

 14. PAY ROLL 9.0 DOWNLOAD

 15. PAY ROLL 8.2.1 UPDATE DOWNLOAD

 16. PAY ROLL 8.1 DOWNLOAD

 17. ecs_bank code

 18. PAY SCALE

 19. SSLC AND PLUS TWO MONTHLY SYLLABUS
 20. HSC MONTHLY SYLLABUS DOWNLOAD
 21. SSLC MONTHLY SYLLABUS DOWNLOAD
 22. HSC QUARTERLY SYLLABUS DOWNLOAD

 23. ALL MATRIC SCHOOLS LIST IN TAMIL NADU
 24. ALL MATRIC SCHOOLS LIST

 25. TAMIL FONTS DOWNLOAD
 26. VANAVIL-AVVAIYAR TAMIL FONT DOWNLOAD

 27. VANAVIL-ALAYARASI TAMIL FONT DOWNLOAD

 28. PERIYAR(NORMAL) TAMIL FONT DOWNLOAD

 29. PERIYAR(BOLD) FONT DOWNLOAD

 30. BAMINI TAMIL FONT DOWNLOAD

 31. BAAMINI TAMIL FONT DOWNLOAD

 32. ISMAIL TAMIL FONT DOWNLOAD

 33. TAMIL CANADIANTAMIL FONT DOWNLOAD

 34. KA LAGARAM TAMIL FONT DOWNLOAD

 35. KA KUDAI TAMIL FONT DOWNLOAD

 36. KA PANJAMI TAMIL FONT DOWNLOAD

 37. SHREE 0802 TAMIL FONT DOWNLOAD

 38. JF GURU TAMIL FONT DOWNLOAD

 39. JF NAGULAN FONT DOWNLOAD

 40. JF BRAMMA FONT DOWNLOAD

 41. LAKSHMI-024 TAMIL FONT DOWNLOAD

 42. LAKSHMI-54 TAMIL FONT DOWNLOAD

 43. TAMIL-013 TAMIL FONT DOWNLOAD

 44. TAMIL-045 TAMIL FONT DOWNLOAD

 45. TAMIL-158 TAMIL FONT DOWNLOAD

 46. SUNTOMMY TAMIL FONT DOWNLOAD

 47. SAIVRISHIN TAMIL FONT DOWNLOAD

 48. SAIINDRA TAMIL FONT DOWNLOAD

 49. MCL MANGAI TAMIL FONT DOWNLOAD

 50. ELANGO PANCHALI NORMAL TAMIL FONT DOWNLOAD

பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை (22.8.13) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5–ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை (22.8.13) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5–ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 3 ஆயிரம் பி.எட். இடங்கள் இருக்கின்றன. அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுவது வழக்கம்.

மாநிலம் முழுவதும் உள்ள 600–க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் உள்ள 60 ஆயிரம் பி.எட். இடங்கள் கல்லூரி நிர்வாகத்தாலே நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.எட் இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்காக கடந்த 9–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.

12 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் விற்பனையானது. இருப்பினும், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல்படும் தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை பிரிவு விண்ணப்பங்களை பரிசீலித்தது.

இந்த நிலையில், பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வியாழக்கிழமை மாலை வெளியிடப்படுகிறது. பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு விவரங்களை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படுவதை தொடர்ந்து, மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும்.

கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் மாணவ–மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் உரிய கட் ஆப் மதிப்பெண் இருந்தால் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் மாணவர்கள் நேரில் கலந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பரமேஸ்வரி தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்களை டெல்லிக்குழுவினர் வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்களை டெல்லிக்குழுவினர் வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர். ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக உள்ளது. 

 தமிழ்நாடு முழுவதும் கடந்த 17–ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் –1 நடைபெற்றது. 18–ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–2 நடைபெற்றது. இந்த தேர்வுகளை மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் பண்டல் பண்டலாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெறுகிறது. இந்த பணியை கம்ப்யூட்டரில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் செய்து வருகிறார்கள். 

தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று கேட்டதற்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:– ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மலை போல உள்ளன. அந்த விடைத்தாள்களை மிகக்கவனமாக அப்படியே ஸ்கேன் செய்யும் பணியை தனியாக ஒரு குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த வேலை முடிய எப்படியும் 3 வாரங்கள் நீடிக்கும். அதற்குள்ளாக இன்னும் ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை( கீ–ஆன்சர்) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம். தகுந்த விடை இதுதான் என்னும் கருத்தை அனுப்பலாம். இவை எல்லாம் சரி செய்யப்பட்டு இறுதி விடை இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அந்த விடையைக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். இதற்காக டெல்லியில் இருந்து நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவினர் சென்னை வர உள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு 30 நிமிடம் போதுமானது. எப்படியும் ஒரு மாதத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு.

2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கான பெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினி அறிவியல் B.Ed., சங்கத் தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chemical Sciences. Earth, Atmospheric, Ocean & Planetary Sciences, Physical Sciences. Engineering Sciences ஆகியவை தேர்வுக்கான பாடப்பிரிவுகளாகும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிஎஸ்ஐஆர்-ன் மனிதவள மேம்பாட்டு குழுவின் இணையதளமான www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் வழியான ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தலின் போது கிடைக்கப்பெறும் செல்லான் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் வழியாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவத்துடன் தகுந்த சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 22ம் தகுதித்தேதி தேர்வு நடைபெற உள்ளது.

Sr. Controller of Examinations. Examination Unit, HRDG, CSIR Comples, Opp. Institute of Hotel Management, Library Avenue, Pusa, New Delhi - 110 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
::Advertisement No.: 13D::Exam Date: 22-12-2013

::Date of Start for Online Submission: 30-07-2013::Date of Close of Online Submission: 30-08-2013 

::Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms:04-09-2013::Last Date of Receipt of Duly Completed Hard Copy of Online Application Forms(From Remote Areas):10-09-2013

::Age will be calculated as on: 01-07-2013

குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)) வெளியிடப்படப்பட்டது.

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை டி.என்.பி.எஸ்.சி., மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அணுக வேண்டும். தேர்வு எழுத தேர்வு செய்துள்ள மையம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தேர்வாணைய அலுவலரை இரண்டு தினங்களிலும் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் குறித்த தகவல்களை கேட்டுப் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.

இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப் பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.

அதன்பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவிப் பேராசிரியர் நியமனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையான முறையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் மாதம் தேர்வு முடிவு.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு  சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,060 மையங்களில் நடந்தது. 2 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் உள்பட 4 லட்சத்து 77 ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். தமிழ் பாட கேள்விகள் தவிர மற்ற கேள்விகள் எளிதாக இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முதல் தகுதித்தேர்வு 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில் ஒரு சதவீதம்பேர் கூட தேர்ச்சி பெறவில்லை.தேர்வு நேரம் குறைவாக (1½ மணிநேரம்) இருந்ததே தேர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணம் என்பது தெரிய வந்ததும் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2–வது தகுதித்தேர்வு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அதில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 3–வது தகுதித்தேர்வு ஆகஸ்டு 17, 18–ந்தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 62 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். 11,558 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ், கணித பிரிவுகளில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய பல ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18.08.2013 ஞாயிற்றுக்கிழமை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1060 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வேப்பேரி சி.எஸ்.ஐ. பென்டிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி, ஹெல்லட் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, ரபேல் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் 24,782 தேர்வு எழுதினார்கள். 1,314 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

கடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த முறை தேர்வில் கேள்விகள் எளிதாகவே இருந்தன. தமிழ் பாடத்தில் மட்டும் கேள்விகள் சற்று கடினமாக கேட்கப்பட்டன. இலக்கண பகுதியில் இருந்து அதிகப்படியான கேள்விகளை கேட்டுள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் வேண்டுமானால் அந்த கேள்விகளுக்கு எளிதாக விடையளித்து இருக்கலாம். மற்ற பாட ஆசிரியர்களுக்கு கடினம்தான். கல்வி உளவியல் மற்றும் இதர பாடங்களில் கேள்விகள் எளிதாகத்தான் இருந்தன.

ஆங்கில பாடத்தில் கேள்விகள் சுமாராக இருந்தன. மற்றபடி கடந்த தகுதித்தேர்வுடன் ஒப்பிட்டால் இந்த தடவை தேர்வு எளிது என்றுதான் சொல்ல வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்துதான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு இருக்கின்றன. ஒருசில வினாக்கள் பிளஸ்–1, பிளஸ்–2 புத்தகங்களில் இருந்து கேட்டுள்ளனர். விடையளிக்க நேரம் போதிய அளவில் இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தமிழ் பாடத்தில் கேள்விகள் கடினமாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்விலும் இதே கருத்தைத்தான் ஆசிரியர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்விகளை ஆய்வு செய்தபோது ஓரளவுக்கு படித்தால்கூட 50 சதவீத மதிப்பெண் பெற்றுவிடலாம். எஞ்சிய 10 சதவீத மதிப்பெண் எடுப்பதுதான் தேர்வில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் அதாவது 150–க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த தகுதித்தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருப்பதால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம்? என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘கீ ஆன்சர்’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும், அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)

80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்

70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்

60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்

50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்

70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்

60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் எந்தெந்த கேள்விக்கு என்னென்ன பதில் அளித்துள்ளோம் ? என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் விடைகளை சரிபார்த்து கொள்வதற்காக ‘ கீ ஆன்சர் ’ வெளியிடப்படுவது வழக்கம். கீ ஆன்சர் வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது , ‘‘ தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் , அதைத்தொடர்ந்து தேர்வு முடிவை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ’’ என்று தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யும் போது பத்தாம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடத்துவதா, பள்ளிகளில் தேர்வு நடத்துவதா, என கேள்வி எழுந்தது.

இதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை செய்தது. இதில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வாக இருந்தால் மட்டுமே கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். பள்ளிகளில் தேர்வு நடத்தப்படுமானால் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பிற்கு அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டும், என பள்ளி கல்வி செயலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில் முப்பருவ கல்வி முறையில் ஜூன் முதல் செப்., முதல், அக்., முதல் டிச., இரண்டாம், ஜன., முதல் ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவமும் நடக்கும். ஒரு பாடத்திற்கான 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண் உள் மதிப்பீடு வழங்கப்படும். இது மாணவர்களின் தனித்திறன்களான , கட்டுரை, யோகா போன்றவைகளுக்கு வழங்கப்படும். 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு பொதுத்தேர்வு அறிவித்தாலும் மதிப்பெண்களில் கிரேடு முறையை கடைபிடிக்கப்படவுள்ளது.

மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை கிரேடு "ஏ 1", 81 முதல் 90 வரை "ஏ 2", 71 முதல் 80 வரை கிரேடு "பி 1", 61 முதல் 70 வரை "பி 2", 51 முதல் 60 வரை கிரேடு "சி 1", 41 முதல் 50 வரை "பி 2", எனவும் அழைக்கப்படும். இதில் 20 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் "இ 2" கிரேடு, என அழைக்கப்படும். "இ 2" கிரேடு எடுத்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.

புதிய முப்பருவ கல்வி முறையில் அரசு பொதுத்தேர்வு தான் வேண்டும், என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TNTET PAPER II AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

TNTET PAPER II AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில்  வெளியிடப்பட்டுள்ளது.


TNTET AUGUST 2013 TENTATIVE KEY ANSWER | ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான உத்தேச விடைகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.

 1. TNTET PAPER I AUGUST 2013 - TENTATIVE ANSWER KEY BY ARIVUKKADAL(NEW) 

 2. TNTET PAPER I AUGUST 2013 - TENTATIVE ANSWER KEY BY VIDIYAL(NEW) 

 3. TNTET PAPER I AUGUST 2013 - TENTATIVE ANSWER KEY BY SUCCESS ACADEMY(NEW)

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமை | ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு,எவ்வித குளறுபடியும் இன்றி, நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், 10 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. முதல் தேர்வில், 2,400 பேரும், இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றனர். மூன்றாவது டி.இ.டி., தேர்வுகள், துவங்கின. அரசு பள்ளிகளில் மட்டும், 15 ஆயிரம் ஆசிரியர், நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும், சட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், பணியில் உள்ள ஆசிரியர்களும், அதிகளவில், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

முதலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு, நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த உமா கூறுகையில், ""கடந்த இரு தேர்வுகளில், 70, 75 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது. இதனால், தேர்ச்சி பெற்றுவிடுவேன். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் கடினமாக இருந்தன. எனினும், பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை,'' என்றார்.

போரூரைச் சேர்ந்த நிவேதா கூறுகையில், ""நான், ஆசிரியர் பயிற்சி முடித்த கையோடு, முதல் முறையாக, தேர்வை எழுதி உள்ளேன். மிகவும் பயத்துடன், தேர்வுக்கு வந்தேன். ஆனால், பெரிய அளவிற்கு, கடினமாக இல்லை. கேள்விகள் அனைத்தும், எளிதாக இருந்தன,'' என்றார்.

காமராஜர், எந்த ஆண்டு, தமிழக முதல்வராக (1954) பதவியேற்றார்; தமிழ் மொழிக்கு, எந்த ஆண்டு, மத்திய அரசு, செம்மொழி அந்தஸ்து (2004) வழங்கியது; "சிசிஇ' என்பதன் சரியான விரிவாக்கம் (தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை) என்ன; ஒரு மாணவர், சக மாணவர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து, கற்றல் பணியை மேற்கொள்ள உதவும் கல்வி முறை (செயல்வழி கற்றல் முறை) எது, என்பது போன்ற மிகவும் எளிதான கேள்விகள், அதிகம் இடம் பெற்றிருந்தன. தேர்வு, எளிதாக இருந்ததாக, பெரும்பாலான தேர்வர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி.இ.டி., தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இன்று நடக்கும், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வும் எளிதாக அமைந்தால், தேர்ச்சி, 10 சதவீதத்தை தாண்டலாம்.

கடந்த தேர்வுகளில், "ஆப்சென்ட்' சதவீதம், 10க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நேற்றைய தேர்வில், வெறும், 2.18 சதவீதம் பேர் மட்டுமே, "ஆப்சென்ட்' ஆனதாக, டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.

அவர், மேலும் கூறியதாவது:

ஒட்டுமொத்த அளவில், 5,854 பேர் மட்டும், தேர்வுக்கு வரவில்லை. மாவட்ட அளவில் பார்த்தால், சென்னை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 465 பேர், "ஆப்சென்ட்' (4.47 சதவீதம்) ஆகியுள்ளனர். குறைந்தபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில், 1.46 சதவீதம் பேர், "ஆப்சென்ட்'. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் தேர்வர்களிடையே அதிகமாக இருப்பது தான், "ஆப்சென்ட்' குறைவுக்கு காரணம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள்- 2,67,957 பேர் | ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள்-4,11,635 பேர் | தேர்வு மையங்கள் 1737 | தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை 14000 என அசர வைக்கும் டி.இ.டி., தேர்வு, முடிந்தது.

ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட்  17 ல் துவங்குகிறது. முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது. முதல் தேர்வை, 7 லட்சம் பேர் எழுதிய போதும், வெறும், 3,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த தேர்வில், 19 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட்  17,18 காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். 18ம் தேதி நடக்கும், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், முழுவீச்சில் செய்யப்பட்டிருப்பதாக, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் தெரிவித்து உள்ளார்.

தேர்வை, அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தி, தேர்வை, சிறப்பான முறையில் நடத்துவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கலெக்டர்கள், மாவட்ட தேர்வுக்குழு தலைவராக செயல்படுவர். டி.ஆர்.பி., அதிகாரிகள், மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 32 பேர், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அதிகாரிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் தாள் தேர்வுப் பணியில், 29 ஆயிரம் பணியாளர்களும், இரண்டாம் தாள் தேர்வுப் பணியில், 42 ஆயிரம் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவர். மாற்றுத்திறனாளிகள், தரைத்தளத்தில் தேர்வெழுத, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக, 30 நிமிடங்கள் பார்வையற்றவர்களுக்காக, வேறொருவர் தேர்வெழுதவும், இவர்களுக்காக, கூடுதலாக, 30 நிமிடங்கள் ஒதுக்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வசதியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 17ம் தேதி, அரசு, விடுமுறை அறிவித்துள்ளது. இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியை, பெண்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால், ஆசிரியர் படிப்பு படிப்பவர்களில், பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். இதனால், டி.இ.டி., தேர்வை எழுதுவோரிலும், பெண்களே, அதிகமாக உள்ளனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், இரண்டிலும் சேர்த்து, 6.79 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், ஆண்கள், 27 சதவீதமாகவும், பெண்கள், 73 சதவீதமாகவும் உள்ளனர்.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம் ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா?

இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று நாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு உலகை சுற்றி வருகிறோம். அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக்கொண்டுதான் இருந்திருப்போம்!

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்... வா

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட மானிடா இதை வெல்வது
இம்மண்ணிலா பிரிவென்பது... எழுவோம்

இந்தியாவில் "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.

இந்தியாவில் "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார். ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியும், (கல்லூரிக்கான இடத்தை சேர்க்காமல்)15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. இதில் 3 கோடி ரூபாய் மத்திய அரசும், 2 கோடி ரூபாய் மாநில அரசும் வழங்கும். மீதமுள்ள 10 கோடி ரூபாய் தனியார் அமைப்பு வழங்க வேண்டும். கல்லூரிக்கான இடத்தை தனியார் அமைப்பு உருவாக்கி தர வேண்டும். மாநில அரசுகளும் குறிப்பிட்ட அளவில் நிலம் ஒதுக்கி தரவேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அட்மிஷன், அந்தந்த மாநில விதிமுறைகளின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேர்வர்களின் கருத்துக்களை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங் கள் கூறுகையில், "விடை தவறாக இருந்தால், அதற்குரிய மதிப்பெண், தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக, சம்பந்தபட்ட கேள்வி, தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி, பதில்களுக்கு மட்டும், மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, "கீ-ஆன்சர்' வெளியிடப்படும்,' என, தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1 மதிப்பெண் வீதம், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 10 முதல், 15 கேள்விகளோ அல்லது அதற்கான பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது எனவே, 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு, மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும், 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வில், 7 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 17ம் தேதி சனிக்கிழமை நடக்கும் முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,71,909 பேரும்; 18ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,15,942 பேரும் எழுதுகின்றனர். முதல்தாள் தேர்வு, 687 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. தேர்வுக்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பெரும்பாலும், சனிக்கிழமைகளிலும் இயங்குகின்றன. சனிக்கிழமைகளில், அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த நேரத்தில் தான், தேர்வும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கிறது. பெரும்பாலான பள்ளிகள், தேர்வு மையங்களாக இருப்பதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் நிலையை, தமிழக அரசுக்கு, டி.ஆர்.பி., சுட்டிக்காட்டியது. இதையடுத்து, வரும் சனிக்கிழமை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுக்கும், தமிழக அரசு, விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, நேற்று வெளியிட்டார்.

TNPSC-Departmental Examinations RESULT- MAY 2013

டிஎன்.பி.எஸ்.சி.குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியீடு.

இணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– (அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது)

இடமாற்றம்

1. ஏ.கருப்பசாமி – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி (இணை இயக்குநர்–பணியாளர், தொடக்கக்கல்வி இயக்ககம்) 

2. வி.பாலமுருகன் – இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்கம் (இணை இயக்குநர் (பாடத்திட்டம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்)

3. எம்.பழனிச்சாமி – இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி), பள்ளிக்கல்வி இயக்கம் (இணை இயக்குநர்–தொழிற்கல்வி) 

4. தர்ம.ராஜேந்திரன் – இணை இயக்குநர்–தொழிற்கல்வி (இணை இயக்குநர்–நிர்வாகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

5. என்.லதா – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி, தொடக்கக்கல்வி இயக்ககம் (இணை இயக்குநர்–உதவி பெறும் பள்ளிகள்)

6. சி.செல்வராஜ் – இணை இயக்குநர்–உதவி பெறும் பள்ளிகள், தொடக்கக்கல்வி இயக்ககம் (இணை இயக்குநர்–பயிற்சிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்)

7. எஸ்.சேதுராமவர்மா – இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)

8. வீ.ராஜேஸ்வரி – இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் (இணை இயக்குநர்–இடைநிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்ககம்)

9. டி.உமா – இணை இயக்குநர், இடைநிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)

10. எஸ்.உமா – இணை இயக்குனர்–பயிற்சிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி)

11. எஸ்.கார்மேகம் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள்)

12. பி.ராமராஜ் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்)

பதவி உயர்வு

1. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராகப் (முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்து) பணிபுரியும் ஜா.சுதர்சன் பதவி உயர்வுபெற்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக (நிர்வாகம்) நியமிக்கப்படுகிறார்.

2. திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சுகன்யா பதவி உயர்வு பெற்று பள்ளி சாராக மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநராக பணிஅமர்த்தப்படுகிறார்.

3. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.நாகராஜ முருகன் பதவி உயர்வு பெற்று அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

4. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.ஸ்ரீதேவி பதவி உயர்வு பெற்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநராக (பாடத்திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம்" என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம்" என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: வரும், 25ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 5,566 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இத்தேர்வை எழுத, 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இணையதளத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் சரியாக செய்தும், உரிய விவரங்கள், இணையதளத்தில் இல்லா விட்டால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, தகவல் தெரிவிக்கலாம்.

மெயிலில், பெயர், பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக்கட்டணம் விவரம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம்/இந்தியன் வங்கி), அதன் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள், "ஹால் டிக்கெட்"டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு ஜூன் / ஜூலையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வெழுதியவர்களின் தேர்வு முடிவுகள். http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் 08.08.2013 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு ஜூன் / ஜூலையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வெழுதியவர்களின் தேர்வு முடிவுகள். http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் 08.08.2013 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 19.08.2013 மற்றும் 20.08.2013 ஆகிய நாட்களில் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறார்கள். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் செப்டம்பர் / அக்டோபர் 2013 சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள்  இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.

உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஊதிய விருப்பம் தெரிவித்து நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்தில் மறு ஊதியம் நிர்ணயம் செய்ய "Re-Option" வழங்கமுடியாது.

தனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர்.

நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகள் திரும்ப பெறப்பட்டு, சேவை வரி விதிக்கப்பட்டது. வரி விலக்கு வாபஸ், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 4,000 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், சேவை வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து, முடிவு எடுப்பதற்காக, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே வசூலிக்கப்படும் கட்டணத்தில், 12 சதவீதத்தை, சேவை வரியாக செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இது, எங்களுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு பள்ளியும், 1 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை, எங்களுக்கு ஏற்படும். இதனால், கடைசியில், பெற்றோர் பாதிக்கப்படுவர். இதுகுறித்து, விவாதித்து, முடிவெடுக்க, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், தென் மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் கூடி, விவாதிக்க உள்ளோம். அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

முதற்கட்டமாக, இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, 50 லட்சம் பெற்றோர் மற்றும் எம்.பி.,க்களிடம் கையெழுத்தை பெற்று, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் வழங்க, முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.