மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். 

இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்டபேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 

பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும்,தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு தேர்வு பிரச்சனை இன்றைய வழக்கு நிலவரம்.

முதுகலைப்  பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது.முதுகலைப்  பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள் உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்   மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால்  வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை   செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு  உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது

இவ்வழக்கு  திங்கள்கிழமை 30தேதி  காலையிலேயே  10  வது வழக்காக  விசாரணை செய்யப்பட்டது.

இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல்  ஆஜராகி  மறுதேர்வு நடத்துவதில்  உள்ள சிரமங்களை  எடுத்துரைத்தார் . பிழையான  40 வினாக்களை  நீக்கிவிட்டு  110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது  அல்லது  பிழையான  40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை  அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு  பெற்ற மதிப்பெண்களை  150 க்கு  கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை  பரிசீலிக்கும்படி  வாதிட்டார்.
   
அனைத்து  தரப்பினரின்  வாதத்தையும் கேட்ட   விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து வழக்கு மீண்டும்  ஒத்திவைத்தார்.நாளை  (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு  வழங்கப்படலாம் என  மனுதாரரின்  வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்

சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு | அடுத்த கல்வியாண்டிற்கான சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்), பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையானது. எம்.எஸ்சி. புள்ளியியல் , எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையானது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்) என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின்போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும். அதுபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. தாவர அறிவியல் பட்டம், எம்.எஸ்சி. தாவரவியல் பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. புள்ளியியல் பட்டம், முதுகலை பட்ட ஆசிரியர் பணி நியமனத்தின்போது எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

SSLC மார்ச்/ஏப்ரல் 2014 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேதியில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறிய தனித்தேர்வர்கள் மீள விண்ணப்பிக்க வேண்டிய தேதி 01.10.2013 முதல் 15.10.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2013-2014-ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களும்(Direct   Private Candidates appearing SSLC Public Examinations)  அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு 03.06.2013 முதல் 30.06.2013-க்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளல் வேண்டும் எனவும் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பித்திடல் வேண்டும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள தவறிய நேரடித்தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்து பயிற்சிப்பெறாமல் அறிவியல் செய்முறை/கருத்தியல் தேர்வைத் தவிர ஏனைய பாடங்களில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ள தேர்வர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை நேரடித்தனித்தேர்வராக எழுத விரும்பினால் அவர்களும்  தங்கள் பெயர்களை 01.10.2013 முதல் 15.10.2013  வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி  வகுப்பில்  பதிவு செய்துக்கொள்ள தேதி நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.

தனி மாணவர்கள் கடைசி வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்டு   http://dge.tn.gov.in  www.tndge.in  ஆகிய இணையதளங்களில் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட இரு விண்ணப்பங்களுடன், செய்முறைத் தேர்வுக்கட்டணம் ரூ.125/-ற்கான வங்கி வரைவோலை ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரின் பதவிப் பெயரில் பெற்று இணைத்து  சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம்  15.10.2013 -  ற்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும் என அறிவிக்கப்படுகிறார்கள்.  மேலும், கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் ஆயிரம் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேர் படிக்கிறார்கள். மேலும் தொலை தூரக்கல்வி மூலம் 4 லட்சம் பேர் படிக்கிறார்கள்.

இந்த மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறி அதை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் முன்பாக போராட்டம் நடந்தது. இது குறித்து மாநில உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் கூறியதாவது:–

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். மேலும் கேள்வித்தாள் உள்ளிட்டவைக்கும் செலவு அதிகமாகிறது. எனவே தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் உயர்த்த அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநில உயர்கல்வி மன்ற கூட்டம் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில பல்கலைக்கழகங்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

உடனடியாக விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் தேர்வு கட்டண ம் உள்ளிட்ட பல்வேறு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு கட்டணஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கரு.நாகராஜன் தெரிவித்தார்.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் வருகிற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மாணவர் நலன் கருதிய முடிவாகத்தான் இருக்கும் என்றார்.

10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்  நிருபர்களிடம் கூறியதாவது:–

அரசு பொதுத்தேர்வுகள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வை சரியான முறையில் நடத்தி நேர்த்தியான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம்.

விடைத்தாளின் முதல் பக்கத்தில் ரகசிய கோடு, மாணவர்களின் புகைப்படம் ஆகியவை புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை தற்போது நடைபெறும் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரகசியமான இடங்களில் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கப்படும். அச்சடிக்கும் முன்பு பல முறை எழுத்துப்பிழை பார்க்கப்படும். அச்சடித்தபின்பு அவை வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். அங்கு ஷீல் சரியாக இருக்கிறதா? என்று அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்ப்பார்கள்.

முன்பு ஒரு பள்ளிக்கு 500 வினாத்தாள் தேவை என்றால் கூடுதலாக வினாத்தாள் அனுப்பப்படும். இப்போது கூடுதலாக ஒரு கட்டு மட்டுமே அனுப்பப்படும்.

மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் பிரிக்கப்படும்

முன்பு 50 வினாத்தாள் கொண்ட பார்சல், 100 வினாத்தாள் என்று இருக்கும்.

ஆனால் இப்போது அப்படி அல்லாமல் அனைத்து கட்டுகளும் தலா 20 வினாத்தாள் கொண்டே இருக்கும். அச்சடிக்கப்படும் இடங்களில் இருந்தே 20 வினாத்தாள் கொண்டு பார்சல் செய்யப்பட்டுதான் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படும்.

அதுபோல வினாத்தாள் பார்சல் தேர்வு அறையில் பிரிக்கும்போது மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்படும். அப்போது ஒவ்வொரு அறையிலும் தலா 2 மாணவர்கள் கையெழுத்திடுவார்கள்.

இந்த முறையின் காரணமாக வினாத்தாள் எந்த காரணம் கொண்டும் வெளியாகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம்.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

‘‘தமிழில் படித்தாலும் என்னால் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

‘‘தமிழில் படித்தாலும் என்னால் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் இலக்கிய பரிசளிப்பு விழாவில் ‘‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு’’ பெற்ற உலகப்புகழ் தமிழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:–

என்னுடைய ‘‘கையருகே நிலா’’ என்ற நூல் என்னுடைய கன்னி முயற்சி. கிட்டத்தட்ட 50 அல்லது 60 விருதுகள் எனக்கு விண்வெளி துறையில் நான் செய்ததற்காக அளித்தாலும், நேற்று தினத்தந்தியில் முதல் பக்கத்தில் எனக்கு விருது கிடைத்திருப்பது என்பதை எனது அப்பா பார்த்துவிட்டு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்பதை கடந்து தமிழறிஞர் மயில்சாமி அண்ணாதுரை என்பதை பார்த்து முதல் முறையாக என்னை பாராட்டினார்.

இதுவரைக்கும் என்னை மற்றவர்கள் பாராட்டியிருக்கலாம். அப்பா பாராட்டியது தினத்தந்தியில் வெளிவந்த முதல் பக்க செய்தியை பார்த்தப்பின்தான் பாராட்டினார்.

நான் படித்தபோது தினத்தந்தி முதல் மாணவனுக்கு பரிசு தருவார்கள். இந்த பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக படித்தேன். வாங்க முடியவில்லை. அன்றைக்கு விட்ட பரிசை திரும்ப வாங்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்தேன். வாங்கி உள்ளேன்.

தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதும், தமிழில் படித்தால் உன்னால் நிலவுக்கே போகமுடியும் என்பதையும் இன்றைய மாணவர்களுக்கு, இன்றைய சிறார்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே கடப்பாட்டில் எழுதியது தான் கையருகே நிலா என்ற புத்தகம்.

எனக்கு காலையில் 7.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து டிரைவர் வருவார். அவர் படித்து வைத்திருந்த தினத்தந்தியில், அவருக்கு பிடித்த செய்தியை, நான் என்ன படிக்க வேண்டுமோ அதை மடித்து வைத்திருப்பார். அதை நான் எடுத்து படிப்பேன். அன்னைக்கு விட்ட பரிசு, இன்னைக்கு எப்படி வருகிறது என்று பாருங்கள்.

தமிழ் அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும். இன்றைய குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும். தமிழை உணர வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் இன்றைய பெற்றோர்கள் தனது குழந்தைகள் தமிழில் படித்தால் மேலே வரமுடியும் என்று நம்ப வேண்டும். அதற்காக தான் எனது பணி சந்திரயானை அதையும் தாண்டி செவ்வாய்க்கு போக கூடிய விண்கலத்தை அனுப்பும் திட்டம்.

400 கிலோ மீட்டர் செல்லும் செயற்கைகோளை செய்தோம். அதையும் தாண்டி 36 ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் செயற்கை கோள் செய்தோம். சந்திரயான் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை தொட்டது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் 4 லட்சம் மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள செவ்வாயை தொடப்போகிறது.

அந்த வகையில் அறிவியல் அடுத்த கட்டத்தை தாண்டுகிறது. தமிழும் போக வேண்டும். அப்படி செல்ல வேண்டுமானால் எடுத்துக்கொண்டு போக வேண்டியது நாம் தான். 400 கிலோ மீட்டர் தூரம் செல்லும் செயற்கைகோள் மற்றவர்கள் செய்தனர். நாமும் செய்ய முடியும் என்று கருதி செய்தோம். ஆனால் அதையும் தாண்டி மற்றவர்கள் செய்ய முடியாததை, நம்மால் செய்ய முடியும் என்பதை சந்திரயான் காண்பித்தது. செவ்வாய்க்கும் போகிறோம்.இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை, அடுத்த மாதத்துக்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்ணை எடுத்தால் தான், தகுதி சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கும். தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, ஐந்து சதவீதம் தளர்த்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனு: ஆசிரியராக நியமிக்க கோருபவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்வின் போது தான், ஜாதி சுழற்சி முறை, அமலுக்கு வரும். ஆசிரியர்கள் நியமனத்துக்கு, தனி தேர்வு முறையை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது. 

அரசு பிறப்பித்த வழிமுறைகளின்படி, தகுதி தேர்வில் வெற்றி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்ய, அரசுக்கு அதிகாரம் உள்ளது. வெவ்வேறு பிரிவினருக்கு, வெவ்வேறு மதிப்பெண்கள் இருக்க முடியாது. ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தப் பிரச்னை ஆராயப்பட்டது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்தக் கூடாது என, முடிவெடுக்கப்பட்டது. 

குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தரத்தில், எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எந்தப் பிரிவினருக்கும், மதிப்பெண் தளர்த்துவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது. 

எனவே, எந்தப் பிரிவினருக்கும் மதிப்பெண்ணை தளர்த்த தேவையில்லை. தகுதி மதிப்பெண்ணில், ஐந்து சதவீத சலுகை கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, அக்., 22ம் தேதிக்கு, &'முதல் பெஞ்ச்&' தள்ளிவைத்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இனி உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார். இதுவரை இணைவேந்தராக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எம்.ஏ.எம்.ராமசாமி செயல்பட்டு வந்தார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நிர்வாகியாகச் செயல்படுவார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

நிர்வாக குளறுபடி மற்றும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. இதை பரிசீலனை செய்த தமிழக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சட்ட மசோதாவை தயாரித்தது. அந்த மசோதா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மே 16-ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறை.

பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுகருத்துகள் பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள்.

இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.

மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின் கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக் கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மூன்று பருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாக கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் சார்ந்த விஷயங்களை செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன் மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமை குறைகிறது. இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார் பள்ளிகளின் நிலை மாறும். டியூஷன்களுக்கு என தனியாக செலவளிக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு என்றாலே சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறை படுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும். 

பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமா? மதிப்பீட்டின் போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படுமா? பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை நடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்து நிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில் பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.

கற்றல் முடித்த பின்னர் பாடங்களை முழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வை எழுதுகின்றனர்.  பத்தாம் வகுப்பிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா? மத்திய பாடத்திட்டத்தில் மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில் படிப்பை தொடருகின்றனர். 

அந்த வகுப்பிலும் இம்முறை அமல்படுத்தப்படுமா? ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்த பருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல் மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் ஆசிரியர் மாணவர், இருவருக்குள்ளும் உள்ளது. விரைவில் பள்ளிக் கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

மாணவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்க வேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பான தகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்ட அறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்து அறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்த விஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறு படிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது. 

மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள், உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள், தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில் ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காத குழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள 150 கேள்விகளில், பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். தேர்வு நடத்தப்பட்ட 150 கேள்விகளில், பிழையாக உள்ள 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிழையான 40 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்திருப்பவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மாற்று கேள்வித்தாள் தயாராக உள்ளது; அதை அச்சிடுவதற்கு 4 வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவது, தேர்வு நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்போதைய சூழலில் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது என்றாலும், உடனடியாகச் செய்துவிட முடியாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, மேற்குறிப்பிட்ட தகவல்களைக் கூறி, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) , பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ( Ctet)- 2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) , பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ( Ctet)- 2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது. 

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய பிப்ரவரி 16ம் தேதியன்று சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்ப படிவத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கடைசியாக சிடிஇடி தேர்வு , கடந்த ஜூலை 28 , 2013ல் நடத்தப்பட்டு , செப்டம்பர் 3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தன. ஆனால் 11 சதவீத பேர் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

KALVISOLAI SITE MAP | KALVISOLAI.COM GUIDE | KALVISOLAI GUIDE

KALVISOLAI SITE MAP | KALVISOLAI.COM GUIDE | KALVISOLAI GUIDE

S.NOSUBJECTS.....................DETAILSCLICK
1HOME PAGE கல்விச்சோலை முதல் பக்கம் VISIT
2INFOகட்டுரைகள், உலக நடப்புகள், செய்திகதம்பம், சாதனையாளர்கள் VISIT
3G.O பள்ளிக்கல்வித்துறை அரசாணைகள், பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள், பணிவரன் முறை ஆணைகள், அகவிலைப்படி ஆணைகள், விடுப்பு தொடர்பான அரசாணைகள்,ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள் VISIT
4SSLCSSLC STUDY MATERIALS,GOVT QUESTION PAPERSVISIT
5PLUS TWOPLUS TWO STUDY MATERIALS,GOVT QUESTION PAPERSVISIT
6TRBTRB STUDY MATERIALS,GOVT QUESTION PAPERSVISIT
7TETTET STUDY MATERIALS,GOVT QUESTION PAPERSVISIT
8TNPSCTNPSC STUDY MATERIALS,GOVT QUESTION PAPERSVISIT
9AUDIO MATERIALSSSLC, PLUS TWO, TRB, TET, TNPSC STUDY MATERIALSVISIT
10ONLINE TESTSSSLC, PLUS TWO, TRB, TET, TNPSC STUDY MATERIALSVISIT

நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்


நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்...தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதி தாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு வீட்டுக்கா ன பிளான் (வடிவமை ப்பு) உருவாக்கி கொடு க்க ஒரு தளம் உதவுகி றது.

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design, Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களி ல் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வல து பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக் க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத் துக் கொள்ளலாம். Transform என்ற டூ லை பயன்படுத்தி எங்கு வேண்டுமானா லும் நகர்த்தலாம் வடிவ த்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொ த்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பய னுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.html

எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது. இறுதி உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும்

எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித் தேர்வில், தமிழ்ப் பாடத்துக்கான பி வரிசை கேள்வித் தாளில் 47 எழுத்துப் பிழைகள் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிழையான 40 கேள்விகளையும் நீக்கி விடுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.நாகமுத்து, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.செல்லபாண்டியன் வாதிடுகையில், பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. மறுதேர்வு நடத்துவதால் மேலும் காலதாமதம் ஏற்படும். இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். 40 கேள்விகள் பிழையாக இருப்பதால், அவற்றை நீக்கிவிட்டு, மொத்த மதிப்பெண் 150 என்பதற்குப் பதிலாக 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

இதுதான் உங்களது நிலைப்பாடா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, மூன்றில் ஒரு பங்கு கேள்விகள் பிழையாக இருக்கும் நிலையில் அக் கேள்விகளையெல்லாம் நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்யலாம் என்பது ஏற்புடையதல்ல. அதேபோல, பிழையான கேள்விக்குப் பதில் அளித்தவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கலாம் என்பது, ஓரிரு கேள்விகள் தவறாக இருக்கும் தேர்வுக்குத் தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.

இத் தேர்வைப் பொருத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு இல்லாமல் நடந்திருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பிழையான கேள்விகளுடன் நடந்த தேர்வுகள் தொடர்பான பல்வேறு வழக்குகளின் உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார். இந்த வழக்குகள் அனைத்திலும் குறைந்த எண்ணிகையிலேயே பிழைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் இறுதி உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும். இதேபோன்ற முந்தைய வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.

ஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டயம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி புட்டுசாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.செளகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி புட்டுசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் தவான், திருமணப் பதிவு உள்பட அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

'மகாராஷ்டிர அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ஆதார் அட்டை இல்லாமல் எந்தத் திருமணத்தையும் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது, இது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, ஆதார் அட்டை பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' அவர் கோரினார்.

இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், ஆதார் அட்டை பெற்றுக் கொள்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது. இதற்காக இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனியைத் தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) உருவாக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக இதுவரை ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 1–4–2010 முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இந்த சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது.இதனடிப்படையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதி தேர்வு அவசியம் என்று 15–11–2011 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த அரசாணையை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு உள்பட 94 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–

உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்துவிட்டது.

இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், தேர்வு நடவடிக்கையை ரத்து செய்தும், எங்களுக்கு பணி வழங்க மறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில், ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையில், பிரிவு 5–ல் ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தேர்வானவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்று கூறியுள்ளது. எனவே எதிர்காலத்தில் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை மனுதாரர்கள் 94 பேரை கொண்டு நிரப்பவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், ‘‘2010–ம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. எனவே எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்கள்.இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் கலந்துகொண்டனர் என்பதற்காக தகுதி தேர்வு எழுதாமலேயே பணியில் நியமிக்க வேண்டும் என்ற தகுதி அவர்களுக்கு வந்துவிடாது. மேலும், அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதி தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை’’ என்று வாதம் செய்தார்.மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் காசிநாத பாரதி உள்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், அதன் விதிகள் ஆகியவற்றின் கீழ் ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை, பணியில் சேரவும் இல்லை. ஆனால், அவர்கள் தரப்பில் வாதம் செய்த வக்கீல்கள், ஏற்கனவே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்துள்ளதால், அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும். பணியில் சேர்ந்த பின்னர், 5 ஆண்டுக்குள் அவர்கள் தகுதி தேர்வில் பங்கேற்பார்கள் என்று கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்க முடியாது.

மனுதாரர்களை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையில் பிரிவு 5–ல் கூறப்பட்டுள்ளது படி விதிவிலக்கு கோர முடியும்.அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதி தேர்வு எழுதாமல், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.

மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு ஆசிரியர்கள் எந்த லட்சணத்தில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரம் 2012 ஜூலை மாதம் நடந்த தேர்வின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
ஆசிரியர் பணிக்கு 12–7–2012 அன்று தகுதி தேர்வு நடந்தது. அதில், 7 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சி பெறவில்லை. 0.50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி நடத்தப்பட்ட துணை தேர்விலும், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, வெறும் 2.95 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வி தரம் குறைந்துவிடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம்.எனவே, மனுதாரர்களை தகுதி தேர்வு எழுதாமல், பணியில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

 கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய  தீர்ப்பில் தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி 

வழங்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.

மேல்நிலை துணைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வுகள், செப்டம்பர்/அக்டோபர் 2013 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்களின் கவனத்திற்கு

23.09.2013 அன்று துவங்கவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலை மற்றும் எஸ்,.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தும், உரிய தேர்வுக் கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் செலுத்தியும், ஆன்லைனில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற இயலாத தனித்தேர்வர்கள் 22.09.2013 - ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பத்தினை சமர்ப்பித்த மாவட்டக் கல்வி அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் , தமிழ் பாட கேள்வித்தாளை , பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு , அபராதம் விதிப்பதுடன் , அந்த அச்சகத்தை , கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் , டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் , காலியாக உள்ள , 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப , கடந்த ஜூலையில் , டி.ஆர்.பி. , போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர் , தேர்வு எழுதினர். இதன் முடிவு , இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் , தமிழ் பாட கேள்வித்தாளில் , 52  கேள்விகளில் , எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும் , இதனால் , அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் , மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர் , ஐகோர்ட் , மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு , டி.ஆர்.பி. , க்கு , கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் , கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை , எனினும் , அந்த கேள்விகளை நீக்கிவிட்டு , மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு , மதிப்பெண் வழங்கலாம் ' என்ற , டி.ஆர்.பி. , யின் கருத்தை , கோர்ட் ஏற்கவில்லை.  " பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ?, இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு ' என்று , கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான , அச்சகத்தின் மீது , டி.ஆர்.பி. , கடும் கோபத்தில் உள்ளது. 

இதுகுறித்து , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான் , கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ் ' என , கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில் , கேள்வித்தாள்கள் தவிர , வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு , பின் , " ஏ.பி.சி.டி. ,' என , நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் , " பி ' வகை கேள்வித்தாளில் தான் , எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் , " பான்ட் ' கோளாறு ஏற்பட்டதால் , எழுத்துப்பிழை ஏற்பட்டதாக , அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன் , அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் , கேள்விகளை சரிபார்ப்பர் ; அச்சடிக்கப்பட்டபின் , சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு , அச்சகம் தான் காரணம். இதற்காக , சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில் ' தொகையில் , 25 சதவீதம் வரை , அபராதம் விதிப்பது , அந்த அச்சகத்தை , " கறுப்பு பட்டியலில் ' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள்

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும்.

பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும், தொடக்க கல்வித் துறை இயக்குனரும் உத்தரவிட்டுள்ளனர்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொழிப் பாட தேர்வுகள் முடிந்து முக்கிய பாட தேர்வுகள் 18ம் தேதி தொடங்கி நடந்தன. அன்று முதல் மாணவ மாணவியருக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. 18ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில் 5 பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் 6 வது பாடத்தில் இருந்தும் கேள்விகள் வந்தன. மொத்தம் 150க்கு 35 மதிப்பெண் களுக்கு இதுவரை நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ச்சியாக 20ம் தேதி வேதியியல் தேர்வு நடந்தது. இதுவரை நடத்தப்படாத 4 பாடங்களில் இ ரு ந் து 5 8 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அடுத்து நடந்த உயிரியல் தேர்வில் உயிரி தாவரவியல் பிரிவில் 75க்கு 29 மதிப்பெண் கேள்விகள் இதுவரை நடத்தப்படாத பகுதிகளில் இருந்து வந்திருந்தன. இவ்வாறு அடுத்தடுத்து குளறுபடிகளுடன் பிளஸ் 2 கேள்வித்தாள்கள் இடம் பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது. இதற்கான போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லையில் நடந்தது. குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆசிஷ் பங்க்ரா தலைமை வகித்தார். டிஐஜி சுமித் சரண், எஸ்பிக்கள் விஜயேந்திரபிதரி, துரை, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஏடிஜிபி ஆசிஷ் பங்க்ரா கூறியது: தமிழகத்திலுள்ள குற்றவாளிகள் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி 30 மாவட்டங்களிலுள்ள சட்டம் , ஒழுங்கு காவல் நிலையங்களில் முடிந்துள்ளது. வரும் 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் குற்றவாளிகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சென்னை காவல் நிலையங்களில் இம்மாத கடைசியில் இப்பணிகள் நடக்க உள்ளன. தொடர்ந்து அக்டோபர் முதல் சிபிசிஐடி உள்ளிட்ட 20 பிரிவுகளிலுள்ள குற்றவாளிகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துவங்கவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ10 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் இமெயில் மூலம் புகார்களை விரைவாக தெரிவிக்கலாம். புகார்தாரர்களுக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படவுள்ளது. விரைவில் அதற்கான இணையதள முகவரி விபரங்கள் கொடுக் கப்படவுள்ளது. இதனால், எந்த ஒரு காவல் நிலையத்தில் இருந்து கொண்டும் மாவட்ட வாரியாக அன்று நடந்த குற்றங்கள், அவற்றின் பின்னணியை கம்ப்யூட்டர் மூலம் சில நிமிடங்களில் எளிதில் தெரிந்து கொண்டு மேற்கொண்டு குற்றங்கள் நடக்காமலும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு

தற்போதுள்ள 50 நடுநிலை பள்ளிகளை உயர் நிலை பள்ளிகளாக உயர்த்த தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நடுநிலை பள்ளிகள் அடங்கும். தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 கி.மீ தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும், தரம் உயர்த்தப்படும் 50 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1 முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்த பள்ளிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும். தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு, புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில் மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதியதாக 50 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியை பெற மாநில திட்ட இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது. சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in

வண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக்கப்படவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில் (Foam Board) பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணி முதற்கட்டமாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்.

அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 முதல் 60 மாதம் வரை வயதுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு, எடை / வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. மகப்பேறு காலத்தில் கரு வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியம். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் எடை எடுத்த பின் தாய் சேய் நல அட்டை /வளர்ச்சி கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 7 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கல்வித்துறையில் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த வரியை மாணவர்கள் மீது கல்வி நிறுவனங்கள் சுமத்தி விடுமே என பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கல்வி தொடர்புடைய சில குறிப்பிட்ட சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டது குறித்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினர் சார்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்து மத்திய அரசின் சார்பில், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் சார்பில் நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், வரி விலக்கு அளிக்கப்படுகிற பட்டியலில் கல்வி சார்ந்த துணை சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த வகையிலான சேவைகளுக்கு எல்லாம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக, மாணவர்களை பள்ளியில் கொண்டு விடுவதற்கு பயன்படுத்தப்படுகிற வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரிவிலக்கு பட்டியலில் வருகிற கல்வி சார்ந்த பிற சேவைகள் என்ற வகையில், விடுதிகள், உணவகங்கள், பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவையும் இடம் பெற்றிருப்பதாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் 12 சதவீத சேவை வரி விலக்கு வழங்கப்படும். இது கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களின் கவனம் கல்வி கற்பதில் இருந்து திசை திரும்புவதால் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளி வாகனங்களுக்குள் செல்போன் கொண்டு வருவது தடை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.

பள்ளி வளாகத்தினுள் மாணவ–மாணவிகள் செல்போன் எடுத்து வராமல் இருக்க பெற்றோர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. எனவே வகுப்பறையில் பாடம் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் செல்போன்களை அணைத்து வைத்திட வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளும் அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தவறாமல் கடை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தப்பட்டது.80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 80 சதவிகிதத்தில் இருந்து 90 சதவிகிதமாக உயர்கிறது. கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.10,879 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2010 செப்டம்பரில், பத்து சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர், ஒற்றை இலக்க எண்ணிலேயே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி அறிவிக்கப்படுவது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.
தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது. இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில், விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம். எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது. 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தமிழக அரசில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி முதல் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிகள் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வுசெய்து வருகிறது.

கடும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் அரசுப் பணிகளுக்கு திறமையான ஊழியர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் மாற்றியமைத்தது. பழைய பாடத்திட்டங்கள் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டதுடன் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் ரீசனிங் என்று அழைக்கப்படும் நுண்ணறிவுத்திறன் தொடர்பான புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது.

வழக்கமாக, வங்கித் தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில்தான் ரீசனிங் பகுதி இருக்கும். படங்கள், அறிவாற்றலை சோதிக்கும் இந்த பகுதி என்றாலே பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்று நடுக்கம்தான். இந்த பகுதிக்கு பயந்தே வங்கி, ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வுகளை தவிர்க்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அதிகம். இத்தகையோர் பெரிதும் நம்பியிருப்பது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைத்தான்.

அரசு பள்ளிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த, கடினமாக உழைக்கக் கூடிய, பெரிய பயிற்சி நிறுவனங்களில் அதிக பணம் செலவழித்து படிக்க இயலாத நிலையில் உள்ள பல கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், குருப்-1, குருப்-2, குருப்-4, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு என அனைத்து தேர்வுகளிலும் நுண்ணறிவுத்திறன் என்ற பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சேர்த்தது. வெறும் எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படும் குருப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் இந்த பகுதியில் இருந்து 25 வினாக்கள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 37.5 மதிப்பெண் கிடைக்கும். எனவே, தேர்வில் தேர்ச்சியை நிர்ணயிப்பதில் இந்த பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு.

இதேபோல், முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு கொண்ட குருப்-2, குருப்-1 தேர்வுகளிலும் ரீசனிங் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கணிசமான மதிப்பெண் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இந்த பகுதியில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு செல்ல முடியாது. ரீசனிங் பகுதியை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின்படி, 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த மாதம் குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள், தமிழ் தாள், பொது அறிவு பகுதிகளில் நல்ல முறையில் விடை அளி்த்ததாகவும் ரீசனிங் பகுதி வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க இயலவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், தலைமைச் செயலக பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த தேர்வும், புதிய பாடத்திட்டத்துடன் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளின் முடிவு வெளியாகும்போது பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியும்.

கிராமப்புற மாணவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு ரீசனிங் பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம். அல்லது ரீசனிங் பாடத்திட்டத்தை எதிர்கொள்ள கிராமப்புற மாணவர்கள் தயாராக வேண்டும். இதில் எது நடந்தாலும் விரைவாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் வினாத்தாள்-விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்ல புதிய நடைமுறைகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய முக்கிய தேர்வுகள். இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்தான் அவர்கள் எந்த படிப்பை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கின்றன.

அதனால்தான் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளைக் காட்டிலும் அவர்களின் பெற்றோர் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். டியூசன், அதிக மதிப்பெண் பெற சிறப்பு பயிற்சி என என்னென்ன வசதிகள் உண்டோ அத்தனையையும் தங்கள் பிள்ளைகளுக்கு செய்துகொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 லட்சம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், 8 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வும் எழுதுகிறார்கள். தேர்வு முடிவடைந்து விடைத்தாள் மதிப்பீடு செய்து முடிவு வெளியிடுவதற்கு கிட்டதட்ட 2 மாதங்கள் ஆகின்றன.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்து சரிபார்த்து மதிப்பெண் பட்டியல் தயாரித்து தேர்வு முடிவை வெளியிடுவதற்குள் தேர்வுத்துறை ஒருவழியாகிவிடும். இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்து ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களில் உதவி தேர்வர்கள் (விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்) மதிப்பெண் விவரம், தேர்வு எண், தேர்வு மையம் போன்றவற்றை பட்டியலாக தயாரித்து முதன்மை தேர்வரிடம் அனுப்புவர்.

அவர் விடைத்தாள்களை குத்துமதிப்பாக மதிப்பீடு செய்வதுடன் மதிப்பெண் பட்டியலை மீண்டும் சரிபார்ப்பார். அதன்பிறகு அந்த பட்டியல் மதிப்பெண் சரிபார்ப்பு அதிகாரியிடம் செல்லும். அவரது ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண் அட்டவணையாரிடம் வழங்கப்படும். இவ்வாறு பல்வேறு சரிபார்ப்புக்குப் பிறகு மதிப்பெண் பட்டியல் அணி அணியாக தபால்பிரிவு பணியாளர் மூலம் சென்னையில் உள்ள அரசு ஆவண தொகுப்பு மையத்துக்கு (டேட்டா சென்டர்) அனுப்பப்படும்.

இவ்வளவு நடைமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் மதிப்பெண் பட்டியல் விவரங்களை தினசரி ஆன்லைனில் சென்னைக்கு அனுப்பும் புதிய நடைமுறையை கொண்டுவர தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், வினாத்தாள் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், விடைத்தாள்களை அதற்கான மையங்களுக்கு எடுத்துச்செல்லவும் பாதுகாப்புக்காக புதிய முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

வினாத்தாள்-விடைத்தாள் பாதுகாப்பை உறுதி செய்ய அரக்கு சீல் வைக்கும் நடைமுறைக்குப் பதிலாக வங்கிகளில் கேட்புக் காசோலையில் தொகையில் எந்த திருத்தமும் செய்யாமல் இருப்பதற்காக அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதைப் போல வினாத்தாள், விடைத்தாள் எடுத்துச்செல்லப்படும் கட்டுகளில் தேர்வுத்துறை அதிகாரிகளின் கையெழுத்துடன் ஸ்டிக்கரை ஒட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், விடைத்தாள்களை அதற்கான மையங்களுக்கு எடுத்துச்செல்லவும் பாதுகாப்புக்காக புதிய முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம்.

தமிழில் படித்தால் வேலையே கிடைக்காது என்ற ஏளனப்பேச்சை சர்வ சாதாரணமாக எங்கும் கேட்கலாம். மழலை கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள போதும், மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் தமிழ்வழியிலா அம்மாடியோவ் என்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் வந்ததுதான் அந்த அதிரடி அரசாணை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணைதான் அது.

கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூர் நகரில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிப்பை அந்த மாநாட்டில் அப்போதைய முதல்வர் கரு ணாநிதி வெளியிட்டார்.அதற்கான அரசாணையும் (எண் 145: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, தேதி: 30.9.2010 ) வெளியிடப்பட்டது.

இதையடுத்து 2011-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளில் தமிழ்வழி பி.இ. படிப்பு தொடங்கப்பட்டது. தலா 60 இடங்கள் கொண்ட இந்த படிப்புகளில் கலந்தாய்வின்போது மாணவ-மாணவிகள் கொஞ்சம் யோசித்துத்தான் சேர்ந்தனர். தமிழ்வழியில் பி.இ. படிக்கப் போகிறோமே, அதற்கு மதிப்பு இருக்குமா, வேலை கிடைக்குமா என்று அவர்கள் யோசித்து இருக்கலாம். எனினும் துணிந்து தமிழ்வழிப் படிப்பில் சேர்ந்தனர்.

பாடப்புத்தகங்கள் தமிழில் உரு வாக்கப்பட்டன. முடிந்தவரைக்கும் அந்த பாடங்களின் தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழாக்கப்பட்டன. பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துவார்கள். 2011-ம் ஆண்டு சேர்ந்த மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். தற்போதும் தமிழக அரசுப் பணிகளில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுத்தான் வருகிறது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளிலும், தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகங்களிலும் உதவி பொறியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன. ஆனால் தற்போது தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்கள் யாரும் இல்லாததால் அந்த பணியிடங்கள் ஆங்கில வழி படித்த பொதுப்பிரினரால் நிரப்பப்பட்டுவிடுகின்றன. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று படிப்பை முடிக்கும்போது அரசு வேலை உறுதியாக காத்திருக்கும்.

ஆனால் அவர்களுக்குள் போட்டி போட வேண்டியதிருக்கும். 21 வயதில் அரசுப் பணியில் சேரும் இந்த நாளைய தமிழ் பொறியாளர்களுக்கு பணிக்காலம் 36 ஆண்டு, 37 ஆண்டுக்கும் இருப்பதால் அனைவரும் துறை யின் தலைமை பதவியை நீண்ட காலம் அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எல்காட் நிறுவனம் நிரப்பியது. இந்த நிலையில், 2006–ம் ஆண்டு 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அதேநேரம் ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறப்பு தேர்வில் ஏற்கனவே ஆசிரியராக உள்ளவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், 2008–ம் ஆண்டு நடந்த சிறப்பு தகுதி தேர்வில் 894 கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், 2010–ம் ஆண்டு நடந்த தேர்வில் 125 ஆசிரியர்களும், 2012–ம் ஆண்டு நடந்த தேர்வில் 15 ஆசிரியர்களும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு உத்தரவினை பிறப்பித்தார். அதில், ‘தகுதி தேர்வு மூலம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் அப்பீல் செய்தனர்.

இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது.

இரண்டு முறை நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த பின்னர், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று கோருவதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் தற்காலிகமாகக் கூட பணியில் தொடரகூடாது.

அதேநேரம் ஏற்கனவே பணியில் இருந்து சிறப்பு தேர்வில் தோல்வியடைந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பெயர்களை மீண்டும் வேலைவாய்ப்பு பதிவுவேட்டில் பதிவு செய்யவேண்டும். அப்போது, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவுமூப்பை வழங்கவேண்டும்.

அதேபோல, அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம். அந்த தேர்வில், ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் கலந்து கொள்ளலாம். அப்போது வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அந்த விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி சார்பி்ல் நடக்க உள்ள குரூப் -1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தியி்ல், குரூப்-1 க்கான முதன்மை தேர்வு செப். 27, 28, மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க விருந்ததது. தற்போது முதன்ம‌ை தேர்வு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர் விவரங்கள் அடங்கிய படிவத்தை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது. மாணவர் பெயர், தாய், தந்தை பெயர், தலைப்பு எழுத்து, பிறந்த தேதி, பள்ளி பெயர், முகவரி, பெற்றோரின் மொபைல் எண், மாணவர் படிக்கும், "குரூப்" விவரம், பாடங்களின் பெயர் என, 11 வகையான விவரங்கள், அந்த படிவத்தில் கேட்கப்பட்டன. 

இதை பூர்த்தி செய்து, மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் என, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும் என, இயக்குனர் கூறியுள்ளார். இந்த விவரங்கள் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் என்றும், படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்குப் பதிலாக, வேறு திருத்தம் கோரி, தேர்வுக்குப் பின் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதோடு, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கவும் தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் பல புதிய நடைமுறைகள் வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத் தனித்தேர்வுகளில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தல் போன்றவற்றில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டு வந்தது.

இவற்றைத் தவிர்க்கும் வகையில், அரசுத் தேர்வுகளிலுள்ள நடைமுறையை எளிமைப்படுத்த அரசுத் தேர்வுதகள் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முதல் கட்டமாக, செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்புப் பொதுத் தேர்வில் புதிய தேர்வு நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவர்களுக்கு தேர்வறையில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும். 3 பகுதிகளாக (ஃப்ளை லீப்பாக) இருக்கும். இதில் ஒரு பகுதி மாணவருக்கும், மற்றொரு பகுதி விடைத்தாள் திருத்தும் மையத்துக்கும், 3-ஆவது பகுதி மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட ஒருங்கிணைப்பு மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விடைத்தாளில் மாணவர்கள் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கின்றனர் என அதற்குரிய இடத்தில் குறிப்பிட்டால் போதும்.

தேர்வு மைய மேற்பார்வையாளருக்கும் பணிச்சுமை குறைவு. 20 நிமிஷத்தில் பண்டல் செய்து விடலாம். எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்; தேர்வு எழுதாதவர்கள் எத்தனை பேர்; முறைகேடுகளில் சிக்கியவர்கள் எத்தனை பேர் என்பதையும் எளிதாகக் கணக்கிட முடியும்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் 12 தாள்களாக எளிதாக பிரித்துக் கொடுத்து விடலாம். விடைத்தாள்களை திருத்தியபின், மாணவர்களின் பார்கோடை பார்த்து மதிப்பெண்ணை பதிவு செய்தால் போதும். தனியாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.

இதை 2014-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு முதல் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பரிசோதனை முறையில் செப்டம்பர்-அக்டோபரில் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்புப் பொதுத் தேர்வில் இந்த தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் மாவட்டத்துக்கு சுமார் 5 மையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ, மாணவியரே தேர்வு எழுதவுள்ளனர். இந்தப் புதிய நடைமுறையில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் உள்ளனவா என்பது போன்ற விவரங்கள் அறியப்படும்.

இந்த அனுபவத்தைப் பொருத்து இந்த புதிய நடைமுறையை 2014 அரசுப் பொதுத் தேர்வில் நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக மண்டல வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து மதுரை மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) ராஜராஜேஸ்வரி தலைமையில், மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், தமிழ் ஆசிரியர்களுக்கான வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை தொடர்பான வழக்கில், ஏன் மறுதேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், தமிழ் ஆசிரியர்களுக்கான வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை தொடர்பான வழக்கில், ஏன் மறுதேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி நாகமுத்து முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபு நாயர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மொத்தமுள்ள 150 வினாக்களில் 40 வினாக்களை தவிர்த்துவிட்டு 110 வினாக்களை கொண்டு மதிப்பீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார். இதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி, ஏன் மறுதேர்வு நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம் துவங்கியது.

பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம். இதற்காக அவ்வப்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், நேரடியாக இயக்குனர் பேசும் வகையிலான திட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. அரியலூர், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட, 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், இயக்குனர் ராமேஸ்வர முருகன், திட்ட செயல்பாடு குறித்து பேசினார். இது போன்று, வாரத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு, ஐந்து மாவட்டம் என்ற முறையில், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.

ஆன்-லைன் கலந்தாய்வு : பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்களாக உள்ள, 50 பேருக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது. பணி மூப்பு தகுதி வாய்ந்த, 50 பேர் பதவி உயர்வு பெற்றனர். இதுபோன்று, 112 உதவியாளர்கள், இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது.

அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.


அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசின் ஒப்புதலை, துறை கோரியுள்ளது.

தமிழகத்தில், 36,813 அரசு பள்ளிகளும், 8,395, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த, இரு தரப்பு பள்ளிகளிலும், புத்தக பை, வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான, இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

 இந்த திட்டங்கள் தொடர்பான கோப்புகளை பராமரிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாக பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர். அரசு நல திட்டங்களை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தடையின்றி வினியோகிக்கவும், பள்ளி நிர்வாகம் சிறப்பாக இயங்கவும், ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. 

பள்ளி கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்தது. இந்த பணியிடங்கள் அனைத்தும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள்.

 எனவே, இந்த பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்குமாறு, கோட்டைக்கு, பள்ளி கல்வித்துறை, கோப்பு அனுப்பி வைத்தது. இது தொடர்பான கோப்பு, தற்போது, நிதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. "நிதித்துறை ஒப்புதல் அளித்ததும், முதல்வரிடம் ஆலோசனை பெற்று, இந்த பணியிடங்கள் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய, நிதி நெருக்கடியான சூழலில், புதிய பணியிடங்களுக்கு, கண்டிப்பாக, அரசின் அனுமதி கிடைக்காது. ஆனால், பழைய பணியிடங்களை நிரப்புவதில், அரசு அனுமதி அளிக்கும் என, நம்புகிறோம்' என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். கடந்த, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிட்டது.இது, ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி, அடிப்படை சம்பளத்தில், 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, ஜனவரி 1ம் தேதி முதல் 8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், 80 சதவீதத்தை எட்டியது.இந்நிலையில், ஜூலை மாதத்திலிருந்து அகவிலைப்படியை, 10 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை கவரும் வகையில், இந்த இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 2010ல், 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, தற்போது தான், இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.இந்த அறிவிப்பால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன் அடைவர். இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.அகவிலைப்படி, 90 சதவீதத்தை எட்டுவதால், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகவிலைப்படி, 50 சதவீதத்தை தாண்டும்போது, அவற்றை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் நடைமுறை உள்ளது. எனவே இதற்கான அறிவிப்பை, ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும், தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை வெளியிடும்.