உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது. தமிழக அரசு கலைக் கல்லூரிகளில், 1093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வு செய்வதில், பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை துவங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து, 10 நாட்கள் வரை நடக்க உள்ளது. இதில், கல்வி தகுதிக்கு, 9 மதிப்பெண்ணும், பணி அனுபவத்திற்கு, 15 மதிப்பெண்ணும், அளிக்கப்படும். கல்வி தகுதியில், பி.எச்.டி., படித்திருந்தால், 9 மதிப்பெண்ணும், எம்.பில்., உடன் நெட் அல்லது ஸ்லெட் முடித்திருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடன், நெட் அல்லது ஸ்லெட் முடித்திருந்தால், 5 மதிப்பெண்ணும் அளிக்கப்படும். பணி அனுபவத்தில், ஒரு ஆண்டிற்கு 2 மதிப்பெண் வீதம் அளிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியிடப்படும்.

Comments