அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 9–ம் வகுப்புக்கு 2–ம் பருவ பாடத்திட்டம் (தமிழ் பாடம் நீங்கலாக) மக்கள் பார்வைக்காக www.dse.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்ட அடிப்படையில் புத்தகம் தயாரித்தவர்கள் ஒப்புதலுக்காக ஒவ்வொரு பாடத்திலும் தலா 2 புத்தகங்களை உறுப்பினர் செயலாளர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், கல்லூரி சாலை, சென்னை–6 என்ற முகவரிக்கு 30–ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை பாடபுத்தகம் தயாரித்தவர்களும் அனுப்பலாம். இந்த தகவலை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Comments