மாநில அளவில் நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
2013–2014–ம் கல்வி ஆண்டில் மாநில அளவிலான தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் மாதம் 17–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த ஆண்டு 10–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் எழுத தகுதி உடையவர் ஆவர். இதற்கான விண்ணப்பங்களை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tndge.in) இருந்து 16–ந்தேதி வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 16–ந்தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தேவராஜன் கூறி உள்ளார்.

Comments