தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான வைகை செல்வன் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.அவர் பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்பண்பாடு ஆகிய இலாகாக்களின் பொறுப்பில் இருந்து வந்தார்.வைகை செல்வன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.அவரது பொறுப்பை, உயர்கல்வித்துறை அமைச்சரான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்று, கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– முதல்–அமைச்சரின் பரிந்துரையின் பேரில், பள்ளிக்கூட கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்பண்பாடு அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்.மேலும், முதல்–அமைச்சர் பரிந்துரையின் பேரில், தொழில் நுட்ப கல்வி உள்பட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் அமைச்சராக இருக்கும் பி.பழனியப்பன் இதுவரை வைகைச்செல்வன் வகித்து வந்த பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி மாலை 4 மணிக்கு சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில் வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பேருரையாற்றுவார் என்று அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, விழாவும் தொடங்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments