ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.

இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்.

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார். அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர் நியமனம்: தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையின் அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக செயலாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப் பிழையான கேள்விகள் இடம்பெற்றதால், ரத்து செய்து, மறு தேர்வு நடத்தும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், தடை விதித்தது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப் பிழையான கேள்விகள் இடம்பெற்றதால், ரத்து செய்து, மறு தேர்வு நடத்தும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், தடை விதித்தது. 

 மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், "பி' வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக, அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்றார். 

இதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், "இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்' என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: "பி' வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. "பி' வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால், காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள், எம்.ஜெய்சந்திரன், எஸ்.வைத்தியநாதன், "பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது. "மறுதேர்வு நடத்தும், தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது; நவ., 12க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்,திரு.ஆ.சங்கர் அவர்களும், இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும் சிறப்புரையாற்றினார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது. 

இப்பயிற்சி பணிமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்  பணிபுரியும்  80 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 

திரு.ஆ.சங்கர், திட்ட இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சென்னை அவர்களால்  இப்பயிற்சி பணிமனையானது துவங்கி வைத்து, திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நுணுக்கங்கள் குறித்தும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்கள் தலைமையாசிரியர்கள்; ஆசிரியர்களை எவ்வாறு நல்லிணக்கப்படுத்தி மாணாக்கர்களுக்கு கல்வி கற்பிப்பது என்றும், கற்றலில் பின்தங்கிய மாணாக்கர்களை எப்படி முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வது என்றும் தலைமையாசிரியர்களுக்கு கருத்துரை வழங்கினார். வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு.வருவான் வடிவேலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

அனைவருக்கும் இடைநிலைக்;கல்வி இயக்க மாநில திட்ட நிர்வாக ஆலோசகர் திரு.கு.முத்துசாமி, அவர்கள் தினமும் முன்னேற்றத்தை நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வது எப்படி என ஆலோசனைகள் வழங்கினார். கிருஷ்ணகிரி  மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர்  திரு.மு.பாஸ்கரன் அவர்கள் தலைமையாசிரியர் பண்புகள் மற்றும் ஊக்குவித்தல் குறித்து பயிற்சி அளித்தார். தருமபுரி மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என்.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி அளித்தார். திரு.வ.ராஜா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை), திரு.சு.ஜெயச்சந்திரன் பயிற்சி ஆலோசர் , அஇகதி, சென்னை, திரு.வி.கல்யாணசுந்தரம், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, சென்னை, திரு.ஜி.ஜெயக்குமார், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, கிருஷ்ணகிரி,   அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி தலைமையாசிரியர் திரு.நடராசன் அவர்கள்  நூறு சதவீத இலக்கை அடைவது எப்படி என தன் அனுபவத்தை தலைமையாசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

இப்பயிற்சி பணிமனை வளாகத்தில் 4 பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கோளரங்கம் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கோளரங்கத்தை கண்டு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.தனசேகரன் அவர்கள் நன்றியுரை வழங்க இப்பயிற்சி இனிதே நிறைவுற்றது. 

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டது தொடர்பாக, நேற்று, சட்டசபையில் விவாதம் நடந்தது. 

அதன் விவரம் வருமாறு: 

மா.கம்யூ., பாலகிருஷ்ணன்: அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டுள்ளதால், தமிழ் மொழி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பழனியப்பன்: ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெற, ஆங்கிலத் திறன் அவசியமாகிறது. ஆங்கிலவழிக் கல்வி கற்றவர்கள், எளிதாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தனியார் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில், சேர்க்கின்றனர். அங்கு கட்டணம் அதிகம் இருந்தாலும், சிரமப்பட்டு படிக்க வைக்கின்றனர். இதை மனதில் கொண்டு, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தமிழுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தொடக்கப் பள்ளிகளில் இருந்து, கல்லூரி வரை, தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

"ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்ணில், எவ்வித மாற்றமும் கிடையாது," என, கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

"ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்ணில், எவ்வித மாற்றமும் கிடையாது," என, கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தொடர்பாக, சட்டசபையில், நேற்று விவாதம் நடந்தது. அதன் விவரம்:

இ.கம்யூ., குணசேகரன்: டி.என்.பி.சி., குரூப் - 1, தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான மதிப்பெண்ணை, இட ஒதுக்கீடு அடிப்படையில், மாற்றி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: மத்திய அரசு, கட்டாய கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆசிரியர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வில், ஒருவர் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், தமிழகத்தில், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை, மாநில அரசு விரும்பினால் குறைக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்தால், குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும். எனவே, மதிப்பெண் குறைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, முதல்வர் உத்தரவு படி, தோல்வி அடைந்தவர்களுக்காக, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

மா.கம்யூ., பாலபாரதி: பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதலில் நடத்தப்பட்டபோது, 90 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்து நடந்த தேர்வில், 96 மதிப்பெண் எடுத்தவர், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கட்ஆப்' மதிப்பெண், சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்: தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பணி மூப்பு அடிப்படையில், பணி அமர்த்தப்படுகின்றனர். முதுகலை ஆசிரியர் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வேலை வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்படுவது போல், முதுகலை ஆசிரியர் பணிக்கும், 'கட் ஆப்' மதிப்பெண், நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட 25 பணியிடங்களில் பட்டதாரிகளை பணி அமர்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தியது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1,372 பேரை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1,372 பேருக்கு மெயின் தேர்வு கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு 14மையங்களில் நடந்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் பொதுஅறிவை சோதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தும் கட்டுரைகளாக பதில் அளிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்வை 84 சதவீதம் பேர் மட்டுமே எழுதினார்கள். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதியது அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்த தேர்வு விடைத்தாள்கள் எப்படி மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
2 முறை மதிப்பீடு செய்யப்படும்.

தேர்வு விடைத்தாள்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அழைத்து அவர்கள் மூலம் இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மதிப்பீடு ஒரு முறை மட்டுமல்லாமல் 2 முறை மதிப்பீடு செய்யப்படும். குரூப்-1மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் குரூப்-1 அதிகாரிகள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.இவ்வாறு தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன்.

இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

இந்த தேர்வில், கேள்வி எண்கள் 31–க்கு சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமலும், தவறான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் உள்ளது. நான் அளித்த சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தால், ‘கட் ஆப்’ மதிப்பெண் 94 பெற்று, ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்து இருப்பேன்.
இதுகுறித்து, 31–வது கேள்விக்கு சரியான விடைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு, மனுவாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.

இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே சரியான விடை அளித்த எனக்கு மதிப்பெண் வழங்கவும், ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றுவிட்டதால், எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.அன்பரசு ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் தகுதி தேர்வில், தாவரவியல் பாடத்தில் 31–வது கேள்விக்கு சரியான விடையை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது சரியான விடைதான் என்பதை 11–ம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.

இப்போது, மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நிர்ணயம் செய்துள்ள ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை அவர் பெற்றுவிடுவார்.

எனவே, மனுதாரரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுக்க வேண்டும். 193 தாவரவியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.

உண்மையான சான்றிதழ்களை அனைத்து விண்ணப்பங்களுக்கும் அனுப்பி வைக்க முடியாது என்பதால் அவற்றின் நகல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், போட்டோ காப்பிகள் உண்மையானவை தான் என்பதை உறுதிபடுத்த கெசட்டட் அதிகாரிகளின் கையெழுத்து அந்தச் சான்றிதழ்கள் மீது இடப்படுகின்றன.

பல அதிகாரிகள் அதற்கு பணம் கேட்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், அத்தகைய அதிகாரிகளைத் தேடி அலைவதால் மாணவர்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது என்பதை அறிந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; இறுதியில், உண்மைச் சான்றிதழ்களை காட்டி அதை உறுதிபடுத்திக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது.

இது, கிராமப்புற மாணவர்கள் மற்றும் பலதரப்பினருக்கும் பலனளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. விரைவில், அனைத்து வகை மாணவர்களும் தாங்களாகவே அட்டெஸ்ட் செய்து கொள்ளும் அறிவிப்பு வெளியாகும் 

2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது

அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர். 


ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள்என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும்.அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர்காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள்மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதியகாலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போதுஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர்என்கிறது ஒரு புள்ளி விபரம். தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. மேலும் 1984ல்எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ‘யூத் சர்வீஸ்‘ என்றபெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற உள்ளனர். 

அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெறஉள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள்உருவாக்கப்படவில்லை. மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் புதிதாக பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததும் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகவும், அரசு துறைகளில்காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஓய்வுபெறும் ஊழியர்கள் வயது வரம்பை 60 ஆக அதிகரிக்கும் எண்ணமும் அரசிடம் உள்ளது. இது பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடாது என்கிறதுஅரசு ஊழியர் சங்கங்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் 2 லட்சம் பேர் ஓய்வுபெற உள்ளதால் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறையில்தான் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் காலியிடங்கள் ஏற்படப்போகிறது. இதனால் மக்கள் நல திட்டங்கள்தான் அதிகம் பாதிக்கும். இப்போதே அரசு துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் இல்லை என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது. 

மேலும் கொல்லைப்புறம் வழியாக அவுட்சோர்சிங் என்ற முறையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். மருத்துவ துறையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவுட்சோர்சிங் வழியாக ஸ்டாப் நர்சுகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவதுறை அளிக்கின்ற ஊதியம். Rs 5500 ஆனால்ஏஜென்சிகளுக்கு கமிஷன் போகஸ்டாப் நர்சுகளுக்கு கிடைப்பது வெறும் Rs 4000 ம்தான். பேரூராட்சிகளில் துப்புரவு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்குடிரைவர் ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. டெண்டர் மூலம் டிரைவர்களை தேர்வு செய்கின்றனர். 

Rs 4000,Rs 3000 மாத சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். அதுபோன்று எல்லா அலுவலகங்களும் கம்ப்யூட்டர்மயமாகி வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர்ஆப்ரேட்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக எம்சிஏ பட்டதாரிகள் கூட Rs 2000,Rs 2500 சம்பளத்திற்கு பேரூராட்சிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.இப்போது ஊராட்சிகளில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் 2ஆயிரம்தான். தற்போதையவிலைவாசியில் ரூ.2 ஆயிரத்தை கொண்டு என்ன செய்ய முடியும்? குறைவான சம்பளத்தை கொடுப்பதின் மூலம் இவர்களிடம் இருந்து நிறைவான பணியை எதிர்பார்ப்பதும்இயலாது போகிறது. மேலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை. மற்றொருபுறம்பணியிடங்களே காணாமல் போகிறது. 

உதாரணத்திற்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலஅலுவலகத்தில் 80 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது அது 60 பணியிடங்களாககுறைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 60 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 23 பணியிடங்கள்நீண்டநாட்களாக காலியாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் முதல் ஓய்வூதியர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோன்று இங்குள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் எழுத்தர் நிலையில் 14 பேர் பணிபுரிந்தஇடத்தில் பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்போது 6இடங்களில் ஆள் இல்லை. இதுபோன்றுஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும்பணியிடங்கள் குறைப்பு, ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் வாயிலாக அரசு துறைகளில் ஆட்கள் நியமனம் என்றுபணியாளர் நியமனத்தில் ஒரு புதுமுறையை அரசு செயல்படுத்துவது போன்று உள்ளதுஎன்றார். எனவே புதிதாக ஆட்களை தேர்வு செய்து காலியிடங்களை நிரப்புவது மூலம் நடைபெறுகின்ற முறையான ஊழியர் நியமனமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். 

எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககாலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 2லட்சம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த சூழலில் மேலும் 2லட்சம் ஊழியர்கள் வரும் 6 மாத காலத்திற்குள் பணி ஓய்வுபெற இருப்பதுடன் அடுத்து 2016ம்ஆண்டுக்குள் மேலும் 2 லட்சம் பேர் பணி ஓய்வு பெற இருப்பதும் அரசு இயந்திரத்தின் இயல்பானசெயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் அபாயம் உள்ளது. என்றார். வேலைப்பளு அதிகரிப்புஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள்தேர்வு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போன்று உள்ளது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் 40 உதவியாளர் பணியிடங்கள் காலியாகஉள்ளது.

 பொதுவாகஇளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.இப்போது 1800 உதவியாளர் பணியிடம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளது. இவற்றுக்கு 243 பேரை மட்டும் குரூப்&2 தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களை கொண்டு எவ்வாறு எல்லா அலுவலகத்திலும் பணிகளை செய்ய இயலும்?இப்போதே பெரும்பாலான துறைகளில் 2 ஊழியரின் பணியை சேர்த்து ஒரு ஊழியர் கவனிக்கிறார்.இனி காலியிடங்கள் அதிகரிப்பால் இந்த பணி பளு மேலும் அதிகரிக்கவே செய்யும்.

கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி.

கணிதம்,தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும்,சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே,அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

புரூக்ளினில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் ஒபாமா வெள்ளிக்கிழமை பேசியதாவது: முந்தைய தலைமுறைகளில் எந்தவிதமான போட்டியுமின்றி பொருளாதாரத்துறையில் நாம் வலுவாக இருந்தோம். இப்போது லட்சக்கணக்கான திறமைசாலிகள் பெய்ஜிங்,பெங்களூர்,மாஸ்கோவிலிருந்து உருவாகி வருகின்றனர். அவர்களுடன் நீங்கள் (அமெரிக்கர்கள்) நேரடியாக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.அந்த நாடுகள் கல்வித்துறையில் நம்மை முந்திவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணிதம்,அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் அவர்கள் நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டனர். 

நாம் இப்போது21-ம் நூற்றாண்டு உலகமயமாக்கச் சூழலில் வாழ்கிறோம்.இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் உலகின் எந்த நாடுகளிலும் குவியலாம். கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான்,நிறுவனங்கள் வேலையை வழங்குகின்றன.எனவே,சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைத்து,கல்வித் துறையில் முன்னேற வேண்டும். உயர் கல்விக்கான கட்டணம் அதிகமாக உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் கல்விக் கடன் சுமையில் அவதிப்படுகின்றனர். 

கட்டணத்தை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக சில மாதங்களுக்கு முன்பு,கட்டணக் குறைப்பு தொடர்பான யோசனையை முன்வைத்தேன். கல்வி,அறிவியல் ஆராய்ச்சி,கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில்,பொறுப்புடன் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும்" என்றார் ஒபாமா.

டி.இ.டி., தேர்வு முடிவு தயார். எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

School Profile updation extended upto 08/11/2013 | தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது. இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, மொத்தம் 213 பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.

இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு ஆயிரத்து 372 பேர் தேர்வு பெற்றிருந்தனர். சென்னையில் பிரதானத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 14 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வினை 115 பேர் எழுதவில்லை. மொத்தம் 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.

தேர்வு எப்படி இருந்தது? குரூப் 1 பிரதானத் தேர்வு மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. முதல் நாள் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அதில் 3 மதிப்பெண் கேள்விகள் 30-ம், 8 மதிப்பெண் கேள்விகள் 15-ம், 15 மதிப்பெண் கேள்விகள் ஆறும் கேட்கப்பட்டிருந்தன.

கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைப் போன்று இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், மின்சார தட்டுப்பாட்டைச் சமாளிப்பது எப்படி? தமிழக அரசின் சூரிய மின்சக்தி கொள்கை போன்றவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக அவர்கள் கூறினர். குரூப் 1 பிரதானத் தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு மிகவும் யோசித்து எழுத வேண்டியிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெற இருக்கிறது.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால்  பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 7–2–2013 அன்று ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி ஏற்றுக்கொண்டார். இவரை (நிரந்தர) தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்தவாரம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் வைத்து பதவி ஏற்பு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஐகோர்ட்டு நீதிபதிகள், அட்வகேட் ஜெரனல், அரசு வக்கீல்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் ஆகியோர் தர்பார் மண்டபத்துக்கு காலை 10.5 மணிக்கு வந்தார்கள்.

அப்போது, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வாசித்தார். பின்னர், தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னர் ரோசய்யாவுக்கு தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு, கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவுடன் ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கவர்னர், ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.

உத்தரபிரேதச மாநிலத்தில் 5.5.1953 அன்று ராஜேஷ்குமார் அக்ரவால் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, 14.8.1976 அன்று வக்கீலாக பதிவு செய்துக்கொண்டார்.

இவரது தந்தை ராஜாராம் அகர்வால், உத்திரபிரதேச மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அலகாபாத் ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாகவும் பணியாற்றியவர்.

அதேபோல, அலகாபாத் ஐகோர்ட்டில் ராஜேஷ்குமார் அக்ரவால், மத்திய அரசின் வக்கீலாக பணியாற்றினார். பின்னர், 5.2.1999 அன்று அலகாபாத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்குமார் அக்ரவால், நேற்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துவருகிறது.

வழக்கமாக குரூப்–2 தேர்வு இரு வகைப்படும். ஒன்று எழுத்து தேர்வு மட்டும் உண்டு. நேர்முகத்தேர்வு கிடையாது. மற்றொன்று எழுத்துதேர்வும் உண்டு. நேர்முகத்தேர்வும் உண்டு.

இந்த குரூப்–2 தேர்வுக்கு முன்பு ஒரே தேர்வுதான் உண்டு. ஆனால் இப்போது குரூப்–1 தேர்வு போல, குரூப்–2 தேர்விலும் முதல்நிலைதேர்வு, மெயின்தேர்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது.

நேர்முதத்தேர்வு இல்லாத தேர்வில் மெயின்தேர்வில் அதிக மார்க் எடுத்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படும். நேர்முகத்தேர்வு உள்ள பணிகளில் நேர்முகத்தேர்வில் உள்ள மதிப்பெண்ணும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணும் சேர்த்து கூட்டி அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

இந்த குரூப்–2 தேர்வில் முதல் நிலை மற்றும் மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.

மெயின் தேர்வில் ஒரு கேள்வி கொடுத்து அதற்கு சரியான விடை உள்பட 4 விடை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை டிக் செய்தால் மதிப்பெண் உண்டு. இதற்கு ஆப்ஜெக்டிவ் முறை என்று பெயர். இந்த முறை உண்டு. அதே நேரத்தில் இந்த தேர்வு எழுதும் பட்டதாரிகள் எழுத்து திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை சோதிக்கும் வகையில் கட்டுரைகள் கேட்கப்பட உள்ளது.

இந்த புதிய முறையின் காரணமாக திறமை உள்ள பட்டதாரிகள் மட்டுமே பணிக்கு வர முடியும். ஒருவர் குரூப்–2 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தால் பின்னர் குரூப்–1 தேர்வு எழுதினால் அவர்களின் பணி அனுபவம் குரூப்–1 தேர்வுக்கு பக்க பலமாக இருக்கும். அதன் காரணமாக குரூப்–1 தேர்வில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.

குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தால் 8 வருடத்தில் அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். எனவே அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வையும் எழுத ஏராளமான பட்டதாரிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
KALVISOLAI NEWS UPDATES

புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒரு கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெயிலாகக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர்.

அதற்காக சிறப்பு வகுப்புகள் காலை அல்லது மாலையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படுகிறது.

கல்வித்துறையை மேம்படுத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தற்போது ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

அதன்படி மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்தால் மாணவர்கள் மனதில் நிலைத்து நிற்கும்? புரிந்து படிக்க என்ன செய்யலாம்? புதிய தொழில்நுட்பத்தில் எப்படி பாடம் நடத்தலாம்? ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் எப்படி பேச வைக்கலாம்? இலக்கணம் இன்றி பேச்சு வழக்கில் எப்படி பேச வைக்கலாம்? என்பது குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ.வளாகத்தில்  தொடங்கியது.

இந்த பயிற்சி முகாமில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 90 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி  (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பயிற்சி பெறும் இவர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி பெற்ற பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிப்பார்கள்.

மருத்துவப் படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்த தமது தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம்இ ன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்த தமது தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஜூலை 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இரு நீதிபதிகள் இதனை அறிவித்தனர். மற்றொரு நீதிபதி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் 3-ல் இருவர் நுழைவுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டதால் அதுவே இறுதித் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், தீர்ப்பை வழங்கும் முன்பு நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், பொது நுழைவுத் தேர்வு நடத்தினால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும். பொது நுழைவுத் தேர்வு இல்லை என்றால் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலானவை நல்ல லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மருத்துவப் படிப்பை நடத்துவார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக்கல்வித் துறையில், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை. இதனால், இரு துறைகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், புலம்பி வருகின்றனர்.

இரு துறைகளிலும், பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், மேற்குறிப்பிட்ட இரு கலந்தாய்வுகள் மட்டும், இதுவரை நடக்கவில்லை. இரட்டை பட்டம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை என, தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், ஆங்கில ஆசிரியர் மட்டுமே, இரு பட்டங்களை பெற்றுள்ளனர். எனவே, ஆங்கிலம் தவிர்த்து, இதர ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை முன்வர வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: விரைவில், டி.இ.டி., தேர்வு முடிவு வரப்போகிறது. அப்போது, தொடக்கக் கல்வித் துறையில், 1,500 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில், 2,881 முதுகலை ஆசிரியர், புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.
பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது. தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

குரூப்–1 தேர்வு. குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு, மற்றும் அரசு துறைகளுக்கான என்ஜினீயர்களை தேர்ந்து எடுக்கும் தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.குரூப்–1 மெயின் தேர்வு வருகிற 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறுகிறது.

குருப்–1 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பலர் பணிபுரிந்து பின்னர் 10 வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி விடுவார்கள். முன்பை விட இப்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத படித்த இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காரணம் அந்த அளவுக்கு படித்து முடித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

தற்போது குரூப்–2 இரண்டு வகைப்படும். குரூப்–2 என்பது எழுத்துதேர்வுடன் நேர்முகத்தேர்வும் கொண்டது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வின் மதிப்பெண்ணை வைத்து நியமிப்பது குரூப்–2 ஏ தேர்வு ஆகும். குரூப்–2 தேர்வுக்கு முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது.

பின்னர் மெயின்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் குரூப்–2 ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது துறைவாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,000 காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பணியிடங்கள் சேகரிக்கப்படவில்லை.

அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப்–2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வர இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம். இந்த தேர்வு மூலம் 1,000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பு காலதாமதம் ஆகுவதற்கு காரணம் ஏற்கனவே நடந்த குரூப்–2 தேர்வில் இன்னும் 140 பேர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின்னர் தான் குரூப்2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அதைத்தொடர்ந்து இந்த வருடத்திற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.

செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனியாக படித்தவர்கள், பெயிலானவர்கள் எழுதிய செப்டம்பர் மாத எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாத பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் படித்து பெயிலானவர்கள், பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் படித்து தேர்வு எழுதுவோர் வருடத்திற்கு 2 முறை தேர்வு எழுதலாம். செப்டம்பர், அக்டோபர் மாதம் அல்லது மார்ச் மாதம் தேர்வு எழுத முடியும். அவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 48 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். பிளஸ்–2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

 இந்த முறை பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. முதல் முதலாக மாணவ–மாணவிகளின் விடைத்தாளில் ரகசிய கோடு கொடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் விடைத்தாள்களை யாரும் பின்தொடர்ந்து மோசடி வேலையில் ஈடுபட முடியாது. இந்த முறைதான் வருகிற மார்ச் மாத தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாறாக அந்த மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. இது 30–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வருடம் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் கடந்த வருடத்தை விட விரைவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனுப்பி வைக்கப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பப்படுகிறது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது.

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட், மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார். தமிழ் பாடத்திற்கு, மறு தேர்வை நடத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்வை நடத்துவதா, அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதா என, இதுவரை, டி.ஆர்.பி., முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. மாநிலம் முழுவதும், 14 மையங்களில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், வரலாறு பாடத்தில், 111 மதிப்பெண் எடுத்தும், தமக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தை, டி.ஆர்.பி., அனுப்பவில்லை என்றும், இதே மதிப்பெண் எடுத்த மற்றவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, ஜான் ஆபிரகாம் என்பவர், ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், விலங்கியல் பாடம் சம்பந்தமாகவும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நாகமுத்து, ஒவ்வொரு பாடத்திலும், கடைசி, "கட்ஆப்' மதிப்பெண் பெற்றவர் வரை, அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன் பட்டியலை, கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். இதன் காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது குறித்த அட்டவணையை, விரைவில் தயாரிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, இப்போதைக்கு, தேர்வுப் பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் தாமதத்தால், மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்காமல் இருக்க, 2,645 முதுகலை ஆசிரியர்களும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களும், தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்ய, கடந்த, 7ம் தேதி, முதல்வர் உத்தரவிட்டார். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, ""80 சதவீத ஆசிரியர், பணியில் சேர்ந்துவிட்டனர். மீதம் உள்ள, 20 சதவீத ஆசிரியர்களும், இந்த வார இறுதிக்குள் சேர்ந்துவிடுவர்,'' என்றார். "ரெகுலர்' முதுகலை ஆசிரியர் நியமனம் தள்ளிப்போகும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனம், மாணவர்களுக்கு, பெரிதும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி கல்வித் துறை-மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்களை மாநிலம் முழுவதும் 32 மையங்களில் அக் 24ம் தேதி முதல் விற்பனை செய்ய உள்ளது. அதன் முழு விவரம் ...


பள்ளி கல்வித் துறை சார்பில், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா விடை மற்றும் மாதிரி கேள்விகள் அடங்கிய புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.
2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.
3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.
5. விழுப்புரம் - ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.
6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்.
7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில், நாகப்பட்டினம்.
8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.
9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை.
10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.
12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.
15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி, ரத்னா திரையரங்கம் எதிரில், திருநெல்வேலி.
16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்.
18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.
21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை, ராசிபுரம்.
22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.
25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.
26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
27. கோவை - நல்லாயன் உயர்நிலைப் பள்ளி, பெரிய கடை வீதி, கோவை.
28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு.
29. உதகமண்டலம் - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.
30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.
31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை விதித்துள்ளது.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது .முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.     
   
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள் அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை  எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த  இரு  தேர்வர்களும்  இராமநாதபுரம் மாவட்டதைச்  சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ் வழக்குகள் இன்று  (21 அக் ) நீதியரசர்   நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை.

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு நீதியரசர் தடையேதும் விதிக்கப்படாததால் முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 10 சதவிகித போனசும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனசும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் பணியுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 1500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 1200 ரூபாயும் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KALVISOLAI FORMS 2013

KALVISOLAI FORMS 2013

FORMSFORMATDETAILS OF FORMDOWNLOAD
RANKEXCELCONSOLIDATED MARK SHEET FOR XII CLASS TEACHERS 1.0 VERSION (100 STUDENTS) BY M.KUMANANDOWNLOAD
RANKEXCELCONSOLIDATED MARK SHEET FOR X CLASS TEACHERS 1.0 VERSION (100 STUDENTS) BY M.KUMANANDOWNLOAD
RANKEXCELCONSOLIDATED MARK SHEET FOR X CLASS TEACHERS BY M.KUMANANDOWNLOAD
TMCPDFTAMIL MEDIUM CERTIFICATEDOWNLOAD
ITEXCELIT FORM FOR THE YEAR 2013-2014 IN EXCEL FORMAT |CALCULATION SHEET.DOWNLOAD
EXAMEXCELPLUS TWO PRACTICAL BATCH SEPARATOR |CALCULATION SHEET.DOWNLOAD
EXAMWORDFORM-I,II,III | EBS.DOWNLOAD
EXAMPDFFORM-33 | ACCOUNT OF ANSWER BOOKS (MAIN AND ADDITIONAL ANSWER BOOKS) ISSUED TO/RETURNED BY THE ASSISTANT SUPERINTENDENTS.DOWNLOAD
EXAMPDFFORM-37 | QUESTION PAPER ACCOUNT.DOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL CEO INSPECTION FORMAT | SCHOOL ANNUAL REPORTDOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL CEO INSPECTION FORMAT | CEO INSPECTION ADDITIONAL PARTICULARSDOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL CEO INSPECTION FORMAT | CEO INSPECTION VISIT PARTICULARSDOWNLOAD
INSPWORDGOVT HIGH/HIGHER SECONDARY SCHOOL INSPECTION FORMAT |CEO INSPECTION FORMAT DOWNLOAD
INSPPDFState Level National Talent Search Examination ( X-STD ) NTSE FORMAT | DOWNLOAD
SELPDFPROPOSAL FOR SELECTION GRADE AND SPECIAL GRADE DOWNLOAD
PAYPDFPAY CERTIFICATE FOR SCHOOL EDUCATION TEACHERS DOWNLOAD
PAYPDFPAY CERTIFICATE FOR ELEMENTARY SCHOOL TEACHERS DOWNLOAD
PAYPDFYEARLY INCREMENT CERTIFICATE DOWNLOAD
CHALLANPDFSSLC CHALLAN FORM FOR SSLC TABULATED MARK LIST DOWNLOAD
FAPDFAPPLICATION FOR FESTIVAL ADVANCE DOWNLOAD
FAWORDAPPLICATION FOR FESTIVAL ADVANCE DOWNLOAD
CLPDFAPPLICATION FOR CL DOWNLOAD
ELPDFAPPLICATION FOR EL SURRENDER DOWNLOAD
MLPDFAPPLICATION FOR ML DOWNLOAD
MLWORDAPPLICATION FOR ML DOWNLOAD
RHPDFAPPLICATION FOR RH DOWNLOAD
LPCPDFLPC DOWNLOAD
PROFILEPDFTEACHERS PERSONAL PROFILE DOWNLOAD
TRANSPDFTEACHERS TRANSFER APPLICATION DOWNLOAD
TRANSPDFTEACHERS MUTUAL TRANSFER APPLICATION DOWNLOAD
ATTPDFSTUDENT ATTENDANCE CERTIFICATE DOWNLOAD
ATTWORDSTUDENT ATTENDANCE CERTIFICATE DOWNLOAD
80GGPDFDECLARATION BY THE ASSESSEE CLAIMING DEDUCTION U/S 80GG FORM NO. 10BA DOWNLOAD
80GGWORDDECLARATION BY THE ASSESSEE CLAIMING DEDUCTION U/S 80GG FORM NO. 10BA DOWNLOAD
EBSEXCELEBS FORMAT FOR PLUS TWO 2013-2014 DOWNLOAD
EBSEXCELEBS FORMAT FOR SSLC 2013-2014 DOWNLOAD
GPFWORDAPPLICATION FOR SANCTIONING PART FINAL WITHDRAWLS FROM GPF DOWNLOAD
GPFPDFAPPLICATION FOR SANCTIONING PART FINAL WITHDRAWLS FROM GPF DOWNLOAD
GPFPDFAPPLICATION FOR GPF TEMPORARY ADVANCEDOWNLOAD
GPFPDFAPPLICATION FOR GPF CLOSURE DOWNLOAD
NOCWORDA COMPLETE FORM SETUP FOR PASSPORT NOC WORD FILE | USED FONT - SunTommy DOWNLOAD
GENIUNEWORDIGNOU | MED |GENIUNENESS APPLICATION | WORD FILE DOWNLOAD
M.EdWORDIGNOU | MED | CONVOCATION FORM DOWNLOAD
VRSPDFVRS FORM DOWNLOAD
VAPDFVEHICLE ADVANCE FORMAT DOWNLOAD
I.ACTPDFMODEL APPLICATION FOR INFORMATION ACT DOWNLOAD
PERMIWORDMODEL APPLICATION FOR GETTING PERMISSION FROM DSE AND DEE FOR LAND AND HOUSE PURCHASEDOWNLOAD
PERMIWORDMODEL APPLICATION FOR GETTING PERMISSION FOR HIGHER STUDIES DOWNLOAD
CERPDFசாதி /வருமானம்/இருப்பிடச்சான்றுக்கான ஒருங்கிணைந்த விண்ணப்பப் படிவம்.DOWNLOAD

ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியராகபொள்ளாச்சி அருகில், நல்லம்பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த 1989ல், இடைநிலை ஆசிரியராக, சுரேஷ் பாபு என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த 1997ல், சிங்காநல்லுாரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நியமிக்கப்பட்டார். அதற்கு முன், அரசு உதவி பெறும் பள்ளியில் வகித்து வந்த ஆசிரியர் பணியை, ராஜினாமா செய்தார். அந்த இடத்தில், வேறு ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு, அதற்கு கல்வி அதிகாரியும் ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து, ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு, 1999ல், சுரேஷ் பாபுவுக்கு, தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதை ரத்து செய்து, பொள்ளாச்சியில் உள்ள, உதவி தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார். ஒப்புதல் அளிக்கவில்லைஅரசு உதவி பெறும் பள்ளியில், பணியை ராஜினாமா செய்ததற்கு, கோவையில் உள்ள, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அரசு உதவி பெறும் பள்ளியின் பணி நாட்களை கணக்கில் கொண்டதற்கு, தணிக்கைத் துறை ஆட்சேபித்துள்ளது என்றும், காரணம் கூறப்பட்டது.தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை, ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் பாபு மனுத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.அரிகரன் ஆஜரானார்.உதவி தொடக்க கல்வி அதிகாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசு உதவி பெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட பின், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ததை ரத்து செய்யவில்லை; கல்வித் துறையை ஏமாற்றி, ஊராட்சி ஒன்றிய பள்ளியில், பணி நியமனம் பெற்றுள்ளார். அதனால், மாவட்ட கல்வி அதிகாரி, ராஜினாமாவை ஏற்கவில்லை என, கூறப்பட்டு உள்ளது.ஏமாற்றி பெற்றார்மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:ஊராட்சி ஒன்றிய பள்ளியில், சுரேஷ் பாபு நியமனம் பெற்றதை, அவர் ஏமாற்றி பெற்றார் என, உதவி தொடக்க கல்வி அதிகாரி எப்படி கூறுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் நியமனம் பெற உரிமை உள்ளது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்வுநிலை அந்தஸ்து வழங்குவதற்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆற்றிய பணி நாட்களையும், கணக்கிட வேண்டும் என, கடந்த 1979ல், கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை, அதிகாரிகள் கணக்கில் கொள்ளவில்லை.எனவே, வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை ரத்து செய்வதற்கு, எந்த காரணமும் இல்லை. அதுவும், ஏழு ஆண்டுகளுக்குப் பின், நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், தேர்வுநிலை அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.உதவி தொடக்கக் கல்வி அதிகாரியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே, தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், நான்கு வாரங்களில் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

"பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம்,' என, தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

"பருவமழை துவங்கிவிட்டதால், சேதமடைந்த, அரசு பள்ளி கட்டடங்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம்,' என, தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில், விபத்தை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேதமடைந்த கட்டடங்களில் வைத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மேலும், பள்ளிகளில், எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு, பலமாதமாக திறக்கப்படாமல் இருந்தால், அவற்றை பயன்படுத்திக் கொண்டு, வேறொரு நாளில், அதற்கு முறைப்படி திறப்பு விழா நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியத்திற்குப்பின் மழை வருவதற்கான அறிகுறி தென்பாட்டால், மாணவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, பள்ளி வேலை நேரத்தை முடித்து, அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மேலும்,பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை, உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்' ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

 பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்' ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 2011-12ல், ஓவியம், விளையாட்டு, கணிப்பொறி, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களை நடத்துவதற்கு,16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், சம்பள பிடித்தம் செய்யப்பட்டது. மேலும், தலைமை ஆசிரியர்கள் வழியாக சம்பளம் வழங்கப்பட்டதால், முறையான சம்பளம் வழங்கப்படவில்லை, என்ற குற்றச்சாட்டை, பகுதி நேர ஆசிரியர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, இவர்களின் பணி வரன்முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளது. இதன்படி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஒவ்வொரு மாதமும், 12 அரை நாட்கள், கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். இவர்களுக்கு, கால அட்டவணை முன்கூட்டியே வழங்க வேண்டும். தொடர்ச்சியாக ஒரு மாதத்தில் 12 நாட்கள், தலைமை ஆசிரியர்கள் வேலை வாங்க கூடாது. 

வாரத்துக்கு மூன்று அரை நாட்கள் வீதம், நான்கு வாரத்துக்கு 12 அரை நாட்கள் கண்டிப்பாக பணிபுரிந்திருக்க வேண்டும். முந்தின மாதத்துக்குரிய சம்பளம், வருகிற மாதம், ஐந்தாம் தேதிக்குள், வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதத்துக்கும், வராத நாட்களுக்குரிய ஊதியம், பிடித்தம் செய்யப்பட வேண்டும். இரண்டு அரை நாட்களுக்கு பதில், ஒரு முழு நாள் வேலை செய்ய கூடாது. தேர்வு விடுமுறை நாட்களின்போது, பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பின், விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்களை வரவழைத்து, படிப்பில் பின்தங்கிய மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தல், அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்தாலும், அரசுப் பணியில் சேருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்தாலும், அரசுப் பணியில் சேருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில் சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை அந்தஸ்தை, பொள்ளாச்சி உதவி தொடக்க கல்வி அதிகாரி 2006-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். அதனால், எனக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை ரத்து செய்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ஹரி பரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததை ரத்து செய்யவில்லை. அதனால் அரசை ஏமாற்றி உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் போது, அரசுப் பணியில் சேருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்று ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 1979-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றிய காலத்தை, தேர்வு நிலை ஆசிரியராக அந்தஸ்து வழங்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து வழங்கி 7 ஆண்டுகள் கழித்து அதை ரத்து செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால், தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரிடம் இருந்து பணம் திரும்பப் பெற்றிருந்தால் அதை அவரிடம் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

மரத்தடியில் குவியும் மாணவர்கள் - ஓர் ஆச்சரிய ரிப்போர்ட்.

ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் - பழனி

TNPSC தேர்வு வந்தவுடன் முதலில் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ, புற்றீசல் போல பெருகிவரும் TNPSC கோச்சிங் சென்டர் நடத்தக்கூடியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

மதுரை,சென்னை,சேலம்,கோவை,தூத்துக்குடி என பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான TNPSC பயிற்சி மையங்கள் தோன்றிய வண்ணமாக உள்ளது. TNPSC பயிற்சி மையங்கள் பல விதங்களில் நடக்கிறது. தினமும் வகுப்புகள் அல்லது சனி, ஞாயிறு வகுப்புகள் தினமும் மாலை மட்டும் அல்லது நீங்கள் வரவேண்டாம்.மெட்டீரியல் 4000 ரூபாய் என வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வாங்கி படிக்கிறார்கள்.

TNPSC GROUP 2-கட்டணம்-7,000
TNPSC GROUP 4-கட்டணம்-5,000

என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக அந்த பயிற்சி மையம் பல இலட்ச ரூபாயினை செய்திதாள் விளம்பரத்திற்கே செலவு செய்து வருவது வழக்கம்.

ஆனால் எந்தவித விளம்பரமும் இல்லாமல், எந்தவித கட்டணமும் இல்லாமல்,எந்தவித அலட்டலும் இல்லாமல் நடந்துவரும் ஒரு பயிற்சி மையம்தான் ஆயக்குடி இலவச பயிற்சி மையம்.

சென்ற மாதம் நமது நண்பர்கள் களஆய்விற்காக சென்றிருந்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள ஒரு ஊர்தான் ஆயக்குடி. புளியமரத்தின் அடியில் 3000 மாணவர்கள் அமைதியாக எந்தவித சலசலப்பும் இல்லாமல் நடத்தக்கூடியவர் தவிர வேறு எந்தவித சப்தமும் இல்லாமல் ஒரு நதி ஓடும் ஓடையைப் போல் படித்துக் கொண்டிருந்தர்கள்.

இந்த பயிற்சி மையத்தின் தன்னம்பிக்கை என்ன என்று இதன் இயக்குநர் இராமமூர்த்தியிடம் கேட்டபோது, இதுவரை 4000 மாணவர்களை அரசு ஊழியர்களாக வெற்றியடையச் செய்துள்ளோம்.அந்த நம்பிக்கையில் தான் 32 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குவிந்த விதமாக உள்ளனர்.

1.நீங்கள் தரக்கூடிய நோட்சை மட்டும் படித்தால் போதும் என்று சொல்கிறீர்களாமே?

ஆமாங்க சார். நாங்க Syllabus அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அவற்றை கணிணி மூலம் தட்டச்சு செய்து மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறோம்.

2.லஞ்சம் வாங்கமாட்டேன் என்ற உறுதிமொழி மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற உயரிய வாசகத்துடன் பயிற்சி மையம் நடத்தும் நீங்கள் அரசு பணிக்காக லஞ்சம் கொடுத்தது உண்டா?

லஞ்சம் கொடுத்தது இல்லை.கொடுக்க போவதும் இல்லை.எதிர்காலத்தில் லஞ்சம் இல்லாத சமுதாயமாக மாறவேண்டும் என்பதுதான் என் இலட்சியம்.

3.உங்களுக்கு பக்கபலமாக உள்ளவர்கள் யார் யார்?

என்னுடைய ஒத்த சிந்தனைகள் படைத்த நண்பர்கள் இராமமூர்த்தியாகிய நான் மற்றும் முருகேசன், செல்வராஜ், பூவராகவன், பெரியதுரை, முத்துச்சாமி ஆகியோரால் பழைய ஆயக்குடி நந்தவன மரத்தடி நிழலிலும் நிஜமாக உள்ளோம்.

4. இதுவரை சாதித்தது என்ன?

இதுவரை நமது மரத்தடி மாணவர்களை 4000 பேர் அரசு ஊழியர்களாக உருவாக்கியுள்ளோம். 414- ஆசிரியர் தகுதித்தேர்வில் 500 பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

5. கட்டணம் கட்டாமல் படித்து மாணவர்கள் வெற்றி அடைந்த போது உங்கள் மனநிலை என்ன?

பலர் ஆனந்த கண்ணீரோடு வருவார்கள்.எங்கள் வாழ்க்கைக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்துள்ளீர்கள் என அவர்களது மகிழ்ச்சியை தொலைபேசியில் சொல்லும் போது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.

6. உங்களுக்கு உதவி செய்பவர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

பழனி தேவஸ்தானம் எங்களுக்கு இடம் கொடுத்துள்ளது.அரசியல் நண்பர்கள்,ஆயக்குடி காவல்துறை, எங்கள் ஊர் பொதுமக்கள், என்னுடைய நண்பர்கள் அனைவருமே எங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள்.

7. இந்த இலவச பயிற்சி மையம் தொடங்கவேண்டும் என்ற் எண்ணம் எப்படி உங்களுக்கு உதயமானது?

நான் அரசு போட்டித் தேர்வு எழுதும் போது சென்னையில் தங்கி படித்தேன்.அப்படி படிக்கும் போது பல சிரமங்களையும்,போக்குவரத்து செலவுகளையும் ஈடுகட்டுவதே மிகவும் சிரமமாக இருந்தது.இந்த சிரமங்களை வேறு மாணவர்கள் படக்கூடாது என்பதால் நாமே ஒரு இலவசபயிற்சி மையத்தினை நடத்தினால் என்ன என்று முடிவு செய்து எனது நண்பர்கள் 6பேர் சேர்ந்து இந்த முயற்சியில் கடந்த 9 ஆண்டுகளாக உள்ளோம்.

இயக்குநர் 
இராமமூர்த்தி
செல் : 94863 01705
நன்றி: 
முனைவர் தமிழ் இனியன். 
அறிவுக்கடல் பதிப்பகம் 
செல் :99769 35585

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உரிய படிவத்தில் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மூன்று நாட்களும், பொது அறிவுத்தாள், ஒன்று, இரண்டு, மூன்று என, மூன்று தாள்களாக நடக்கும். காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருந்தால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அல்லது தேர்வாணையத்தின் கட்டணம் இல்லாத தொலைபேசி (18004251002) மூலமாகவோ, தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார். இந்த தேர்வு, கடந்த மாதம் நடக்க இருந்தது. அதே நாளில், வேறு போட்டித் தேர்வுகள் இருந்ததால், இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதன்மை தேர்வை, 950க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது’ என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது’ என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.

அங்கீகாரம் காலாவதியான நாளில் இருந்து அபராதம் ரூ.ஒரு லட்சம் மற்றும் பள்ளி செயல்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வீதமும் சேர்த்து மொத்தமாக அபராதம் விதிக்கப்படும். 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளி தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அதிகபட்சமாக ஒரு பிரிவில் 30 மாணவர்களும், 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒரு பிரிவில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் விதித் தொகுப்பு விதி எண் 14ன்படி ஒரு பிரிவில் 50 மாணவர்கள் வரை சேர்க்கலாம்.

ஒரு வகுப்பிற்கு 4 பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும். ஐந்தாம் பிரிவு துவங்க மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்து பிரிவுகளுக்கு மேல் தொடங்கவோ, செயல்படவோ அனுமதி இல்லை.

முறையான பிறப்புச் சான்றிதழ் அளிக்காத காரணத்தினால் சேர்க்கை மறுக்கக் கூடாது. 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேக்கம் செய்யவோ, பள்ளியில் இருந்து வெளியேற்றவோ கூடாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் 1ம் தேதிக்குப்பிறகு மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது.

100 சதவீத தேர்ச்சியினைக் கருத்தில்கொண்டு கற்றலில் பின்தங்கிய மாணவர்களை 9 மற்றும் 11ம் வகுப்புகளில் கட்டாயப்படுத்தி தேக்கமடைய வைக்கக் கூடாது. அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்து அவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். 10, 12ம் வகுப்பு மாணவர்களை எக்காரணம் கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணப்பித்து 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 ஆயிரத்து 800ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் சார்ந்த படிப்புகளை படிக்கின்றனர். 110க்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு னீ500 ஊதியமாக வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 30 மணி நேரம் வகுப்பு எடுக்கின்றனர். வகுப்பு முடிந்ததும் இவர்கள் கல்லூரியை விட்டு சென்று விடுவர். இதனால் நிர்வாக பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக நிரந்தர விரிவுரையாளர்களை நியமனம் செய்ய பல்கலை. தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்கள் தற்போது ஆசிரியர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்த்தல் 22, 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி 22 மற்றும் 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 881 உள்ளன. இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. அந்த தேர்வில் தமிழ்பாடத்திற்கான தேர்வு வினாத்தாளில் ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்தன. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் தமிழ்பாடத்திற்கான தேர்வை மீண்டும் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7–ந்தேதி இரவு வெளியிட்டது.

இப்போது சான்றிதழ் சரிபார்த்தலுக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் இணையதளத்தில் உள்ளன.

சான்றிதழ் சரிபார்த்தல் 22 மற்றும் 23–ந்தேதிகளில் கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கோவை, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் நடைபெறுகிறது.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.