10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தி, அவர்களை தலைமையாசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலிறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:தற்போதுள்ள சூழ்நிலையில், பள்ளியை திறம்பட நிர்வாகிக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், நிர்வாகத் திறமை அவசியம்.பதவி உயர்வின் மூலமே, தலைமையாசிரியர் பணி நியமனம் நடந்து வருகிறது. இந்நிலை மாறி, அரசு பள்ளிகள் புத்துயிர் பெற, 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தி, அவர்களை தலைமையாசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Comments