வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் அக்டோபர் 20, 27 ஆகிய தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகள்) நடைபெற உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றுக்காக வரும் 20 மற்றும் 27 தேதிகள் வரை கால அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், இடமாற்றம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்.6) நடைபெற்ற சிறப்பு முகாம்களில் அவற்றுக்கான படிவங்களை ஆயிரக்கணக்கானோர் வாங்கிச்சென்றனர். இந்தப் படிவங்களை பலர் உடனடியாக பூர்த்தி செய்தும் சமர்ப்பித்தனர்.

இந்த சிறப்பு முகாம்கள் அக்டோபர் 20, 27 ஆகிய தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமைகள்) நடைபெற உள்ளன.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக வரைவு வாக்காளர் பட்டியல், பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.14 கோடி ஆகும். ஆண் வாக்காளர்கள் 2.58 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.56 கோடி பேரும் உள்ளனர்.

சென்னையில் மட்டும் 34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இறப்பு, இடப்பெயர்வு, இருமுறை பதிவு போன்றவை காரணமாக 4.10 லட்சம் பேர் வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டனர்.

Comments