92 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட்டன

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் எல்லா பருவத்திற்கும் உரிய பாடப்புத்தகங்களை ஒரே முறையாக கொடுத்தால் அவர்களுக்கு சுமையாக இருக்கும் என்று கருதி ஒவ்வொரு பருவத்திற்கும் தனியாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்புவரை உள்ள மாணவ–மாணவிகள் அனைவருக்கும் முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு காலாண்டு தேர்வு முடிந்துவிட்டது. பின்னர் விடுமுறைக்கு பின் பள்ளிக்கூடங்கள் திறந்தன. அன்றே 92 லட்சம் மாணவர்–மாணவிகள் அனைவருக்கும் 2–வது பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன.

10–வது, 11–வது, பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு முதல் பருவத்திலேயே மொத்தமாக வழங்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments