இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 9 ஆம் தேதி இறுதி விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் சார்பாக வழக்கறிஞர் எஸ்.எஸ்.முத்துகுமரன் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வாதிட்டார். பின்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பாக எஸ்.வி.பீமன் அவர்கள் தனது வாதத்தை தொடர்ந்தார். இரட்டைப்பட்டம் சார்பாக ஏற்கெனவே வாதிட்ட வழக்கறிஞர் பிரசாத் அவர்கள் ஆஜராகாததால் வருகிற புதன்கிழமைக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments